தெய்வீக பராமரிப்பு
தேவனின் தெய்வீகப் பராமரிப்பு
ஆதி 45:5 "என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப் போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.".
தேவனாகிய கர்த்தர் வானத்தையும், பூமியையும் படைத்தபிறகு (ஆதி1:1) அவர் இந்த உலகத்தைத் தன் விருப்பப்படி இயங்க விட்டுவிடவில்லை. அவர் தமது படைப்புக்களைப் பராமரிக்கயும், தம்முடைய மக்களின் வாழ்க்கையிலும் அவர் தொடர்ந்து ஈடுபடுகிறார். தேவன் ஒரு கடிகாரத்தைச் செய்யும் நிபுணனைப் போன்றவரல்ல அவர் உலகத்தைப் படைத்து அமைத்தபின் சாவிகொடுக்கப்பட்ட கடிகாரம் தானாக ஓடிக்கொண்டு அதன் சுருள் வில் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவதுபோல இந்த உலகையும் இயங்க விட்டு விடுபவரல்ல.
அவர் தாம் படைத்தவற்றைக் குறித்துக் கவலைப்படும் அன்புள்ள பிதாவானவர். தம்முடைய படைப்பின் மீது தேவன் காட்டும் தொடர்ச்சியான அக்கறையும், தமது மக்கள் மீது காட்டும் கரிசனையும் உபதேச வார்த்தை களில் "தெய்வீகப் பராமரிப்பு" எனப்படும்.
தெய்வீக பராமரிப்பின் அம்சங்கள்:
தெய்வீகப் பராமரிப்பில் மூன்று அம்சங்கள் உள்ளன.
1) பாதுகாப்பு:
தேவன் தமது வல்லமையால் தம்மால் படைக்கப்பட்ட இந்த உலகத்தைப் பாதுகாக்கிறார். தாவீதின் அறிக்கையில் இது தெளிவாகத் தெரிகிறது:
"உமது நீதி மகத்தான பர்வதங்கள் போலவும், உபது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது. கர்த்தாவே மனுஷரையும், மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்."
(சங் 36:6) தேவனுடைய பாதுகாக்கும் வல்லமை, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. இதைத்தான் பவுல் கொலோ 1:17இல் எடுத்துரைக்கிறார். "கிறிஸ்து, எல்லாவற்றிற்கும் முந்தினவர். எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது." கிறிஸ்துவின் வல்லமையால் பூமியிலுள்ள மிகச்சிறிய துணுக்குகள் கூட ஒன்றாகக் கூட்டி இணைக்கப்பட்டுள்ளன.
2)தேவையானவை
களைக் கொடுத்தல்: தேவன் தமது படைப்புகள் அனைத்தையும் பாதுகாப்பது மட்டுமல்ல, ஜீவராசிகளின் தேவைகளையும் அவைகளுக்குக் கிடைக்கச் செய்கிறார். அவர் இந்த உலகத்தைப் படைத்தபோது, பருவ காலங்களையும் ஏற்படுத்தினார்.
(ஆதி1:14) மனிதர்களுக்கும். மிருகங்களுக்கும் உணவு கொடுத்தார். (ஆதி 1:29,30) ஜலப்பிரளயம் பூமியை அழித்தபோது, தேவன் உலகின் தேவைகளைச் சந்திக்கும் வகையில் தமது வாக்குத்தத்தத்தைப் புதுப்பித்தார். "பூமியுள்ள நாள்ளவும், விதைப்பும், அறுப்பும், சீதளமும், உஷ்ணமும், கோடைகாலமும், மாரிகாலமும், பகலும், இரவும் ஒழிவதில்லை."
(ஆதி 8:22) தம்முடைய ஜீவராசிகள் அனைத்தையும் தேவன் தம் அன்பினால் அற்புதமாகப் போஷிக்கும் விதம் பல சங்கீதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. (உம். சங்104, 145) தேவன் தாமே, படைத்துப் பராமரிக்கும் தம்முடைய வல்லமையைக் குறித்து யோபுவிடம் கூறினார்.
(யோபு அதி 38-4), இயேசு தேவனுடைய பராமரிக்கும் தன்மையை உறுதியாகச் சுட்டிக்காட்டும் வண்ணம், "ஆகாயத்துப் பட்சிகளுக்கும் காட்டுப்பஷ்பங்களுக்கும் தேவன் பிழைப்பூட்டுகிறார்” என்றார்.
(மத் 6:26-30, 10:29) அவருடைய பராமரிப்பில் மனுஷனுடைய உலகப் பிரகாரமான சரீர தேவைகள் மட்டுமல்ல, ஆவிக்குரிய தேவைகளும் சந்திக்கப்படுகின்றன. (யோவா 3:16,17) தேவன் தமது சொந்த மக்களுக்கு ஒரு தனிப்பட்ட அன்பையும் பராமரிப்பையும் வழங்குகிறார் என்று வேதாகமம் வெளிப்படுத்துகிறது. அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் மதித்து நடத்துகிறார்.
(சங் 91; மத் 10:31 ).
பிலிப்பி பட்டணத்திலுள்ள விசுவாசிகளுக்குப் பவுல் சந்தேகத்துக்கு இடமில்லாத தெளிவான வார்த்தைகளில் இப்படிக் கூறுகிறான். "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி: உங்கள் குறைவையெல்லாம், கிறிஸ்து இயேசுவுக்குள், மகிமையில் நிறைவாக்குவார்." (பிலி 4:19). அப்போஸ்தலனாகிய யோவான் தமது மக்கள் அனைவரும் "வாழ்ந்து சுகமாயிருக்க அவர்களுக்கு எல்லாம் நன்மையாக நடக்க வேண்டும்.
(3 யோவா 2 )
என்று தேவன் விரும்புவதாகக் கூறுகிறார்.
3) ஆளுகை:
தேவன் தமது படைப்புகள் அனைத்தையும் பாதுகாத்துப் பராமரித்து, தேவைகள் அனைத்தையும் சந்தித்து வந்தாலும் அவர் இந்த உலகில் ஆளுகையும் செய்கிறார். தேவன் உன்னதமான இராஜரீகம் உடையவராயிருப்பதால், வரலாற்றின் நிகழ்ச்சிகள் யாவும் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தின்படி நடக்கின்றன. சில வேளைகளில் அவருடைய மீட்புத் திட்டத்தின்படி அவர் நேரடியாகக் குறுக்கிடுவதும் உண்டு, இருந்தபோதிலும் தேவன் வரலாற்றைப் பூர்த்தி செய்யும் வரையிலும், அவர் தம்முடைய உன்னத வல்லமையையும், இவ்வுலகில் அவருடைய ஆளுகையையும் ஓரளவு கட்டுப்படுத்தியிருக்கிறார். வேதாகமம் "சாத்தான் இவ்வுலகத்தின் தேவனானவன்" என்று கூறுகிறது.
(2 கொரி 4:4). "உலகமுழுவதும் பொல்லாங்களுக்குள் கிடக்கிறது"
(யோவா 5:19; லூக் 13:16; கலா 1:4; எபே 6:12; எபி 2:14) அதாவது இந்த உலகமானது தேவனுடைய ஆளும்வல்லமைக்கு அடிபணிவதில்லை. உலகம் தேவனை எதிர்த்துப் புரட்சி செய்கிறது. உலகமக்கள் சாத்தானுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். தேவனைப் பொறுத்தவரையிலும் அவருடைய இந்த சுயகட்டுப்பாடு தற்காலிகமானதே. தேவன் நியமித்த காலத்தில் அவர் சாத்தானையும், அவனுடைய சர்வ சேனைகளையும் அழித்து விடுவார். (வெளி அதி. 19,20).
தெய்வீகப் பராமரிப்பும், மனிதனுடைய துன்பமும்:
தீமை நிறைந்த, வீழ்ச்சியடைந்த உலகில் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்கைக்கும் தெய்வீகப் பராமரிப்பு வேண்டும் என்றும் அது ஒரு வெறும் காணமுடியாத ஒரு உபதேசக் கொள்கையாக மட்டும் இருந்தால் போதாது என்றும் வேதாகம வெளிப்பாடு காட்டுகிறது.
1) அவனுடைய அல்லது அவளுடைய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சில வேளைகளில் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அவர்கள் தவிர்க்கமுடியாதபடி "என்" என்ற கேள்வியைக் கேட்கிறார்கள். "ஏன்" (யோபு 7:17-21; சங்10:1; 22:1; 74:11,12; எரே 14:8,9,19). இத்தகைய அனுபவங்கள் தேவனுடைய திட்டத்தில் தீமையினால் உண்டாகக்கூடிய பிரச்சனையை எழுப்புகின்றன.
2) ஆதாம் ஏவாளின் வீழ்ச்சியினால் மனித இனத்தில் புகுந்த பாவத்தால் ஏற்படும் விளைவுகளை மனிதன் அனுபவிக்க தேவன் அனுமதிக்கிறார். உதாரணமாக தன் சகோதரர்களின் பொறாமையினாலும், கொடுமையினாலும் யோசேப்பு பல துன்பங்களை அனுபவித்தான். அவன் அடிமையாக விற்கப்பட்டான். அதன் பலனாக எகிப்தில் போத்திப்பாரின் அடிமை ஆனான். (ஆதி அதி 37,39) எகிப்தில் அவன் தேவனுக்குப் பயந்து, நீதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அறியாயமாக அவன் ஒழுக்கக்கேடாக நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டான். அதனால் சிறையில் அடைக்கப்பட்டான். (ஆதி 39) அங்கே இரண்டு வருடங்களுக்கு மேலாகக் காவலில் இருந்தான். (40:1-41:14), நம்முடன் இருக்கும் மற்ற மனிதர்கள் செய்யும் கெட்ட கிரியைகள் காரணமாக நாம் துன்பம் அனுபவிக்க தேவன் இடம் கொடுக்கிறார். தேவன் தமது சித்தத்தை நிறைவேற்றும்படி அவற்றை மேற்கொண்டு நன்மையாக மாற்ற முடியும். யோசேப்பின் சாட்சியின்படி, அவனுடைய சகோதரர்களின் பாவங்களைக் கொண்டே, அவர்களுடைய உயிரைக் காக்க தேவன் வகை செய்தார்.
(ஆதி 45:5; 50:20)
மற்றவர்களின் பாவங்கள் காரணமாக நாம் துன்பம் அனுபவிப்பது மட்டுமல்ல, நாம் செய்த பாவச் செயல்களின் விளைவாகவும் நாம் துன்பம் அனுபவிப்பது உண்டு. உதாரணமாக ஒழுக்கக்கேடு, விபசாரம் போன்ற பாவங்கள் ஒருவருடைய திருமணத்தையும், குடும்ப வாழ்க்கையையும் சீர்குலைத்து விடும். ஒருவர் மீது காட்டும் கட்டுப்படுத்தப்படாத கோபம், அவன் மீது கடுமையான காயத்தையோ, அல்லது மரணத்தையோ உண்டாக்கலாம். சம்பந்தப்பட்ட ஒருவரோ அல்லது இருவருமேகூட மரித்துப் போகலாம். பொருட்களைத் திருடிய அல்லது தவறாகக் கையாண்ட ஒருவனிடம் இருக்கும் பேராசை என்னும் பாவம் அவனுக்குச் சிறைத்தண்டனையைப் பெற்றுத்தரும்.
4) இவ்வுலகத்தின் தேவனானவனாகிய சாத்தான் அவிசுவாசிகளின் கண்களைக் குருடாக்கி, அவர்களுடைய வாழ்க்கையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தீமைகளை நடப்பிப்பதால் இவ்வுலகில் துன்பம் வருகிறது.
(2 கொரி 4:4; எபே 2:1-3), புதிய ஏற்பாட்டில் பல மக்களைப் பிசாசு பிடித்து, சித்திரவதைப்படுத்தி, மன வேதனைகளை அல்லது சரீர சுகவீனங்களை உண்டு பண்ணுவதற்குப் பல உதாரணங்கள் உண்டு (மாற் 5:1-14, மத் 9:31, 33; 12:22; மாற் 9:14-22; லூக் 13:11,16;)
தேவன் நம் வாழ்வில் துன்பத்தை அனுமதிக்கிறார் என்று சொல்லும்போது, இந்த உலகில் நமக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்துக்கும் தேவனே காரணம் என்று பொருளல்ல, அல்லது நாம் அனுபவிக்கும் துன்பங்கள் அனைத்தையும் அவரே அனுப்பிவைப்பதுமில்லை. தீமையையோ, அவபக்தியையோ, தேவன் ஒருபோதும் தூண்டுபவரல்ல. (யாக் 1:13) இருந்தபோதிலும் அவர் சில வேளைகளில் அவற்றை அனுமதிக்கிறார், வழி காட்டுகிறார். அதைத் தம் அதிகாரத்தால் மேற்கொள்ளுகிறார். இவையனைத்தும் தமது சித்தத்தை செயல்படுத்துதற்காகவும் தம்முடைய மீட்புத் திட்டத்தை நிறைவேற்ற, எல்லாவற்றிலும் தம்மிடம் உண்மையாக நடந்து கொள்பவர்களுக்கு நன்மை உண்டாக்கும்படியாகவும் செய்கிறார்.
(மத் 2:13; ரோம 8:28)
தெய்வீகப் பராமரிப்பில் நம்முடைய தொடர்பு: நம்முடைய வாழ்க்கையில் நாம் தெய்வீகப் பராமரிப்பை அனுபவிக்க வேண்டுமானால், நமக்குச் சில பொறுப்புகள் உள்ளன என்று வேதாகமம் கூறுகிறது.
1) நாம் தேவனுக்கும், அவரால் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய சித்தத்துக்கும் கீழ்ப்படிய வேண்டும். உதாரணமாக யோசேப்பை எடுத்துக்கொண்டால், அவன் தேவனைத் தன்னுடைய கீழ்ப்படிதல் உள்ள வாழ்க்கையால் கனப்படுத்தினான். அதனால் தேவன் அவனோடிருந்து அவனைக் கனப்படுத்தினார். (ஆதி 39:2,3,21,23). இதுபோலவே, இயேசு தாமே ஏரோது இராஜாவின் மறைமுகமான கொலை திட்டத்திலிருந்து காக்ககப்பட்டு தேவனுடைய பராமரிப்பின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளும்படியாக இயேசுவின் பெற்றோர் தேவனுக்குக் கீழ்ப்படிந்து குழந்தையுடன் எகிப்துக்குத் தப்பியோடிப் போகவேண்டியதாயிற்று. (மத் 2:13). உன் சுயபுத்தியின்மேல் சாயாமல் உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளையெல்லாம் அவனை நினைத்துக் கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் என்று தேவனுடைய வாக்குத்தத்தம் உள்ளது. (நீதி 3:5-7)
2) தேவனுடைய பராமரிப்பில், தேவன் திருச்சபையின் காரியங்களையும் அவருடைய ஊழியர் என்ற நிலையில் நம் ஒவ்வொருவரையும் வழிநடத்துவார். நாம் அவருக்கும் அவருடைய நாமத்தில் நம்மைச் சுற்றிலும் இருக்கிற மக்ளுக்கும் ஊழியம் செய்யும்போது நம் வாழ்க்கை தேவனுடைய சித்தத்தோடு தொடர்ந்து இணைந்துபோக வேண்டும்.
3) அவர் நம்முடைய வாழ்க்கையின் எல்லாக் காரியங்களிலும் நமது நன்மைக்காகக் கிரியை செய்ய வேண்டுமானால் நாம் தேவனிடத்தில் அன்புகூர வேண்டும், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினால் அவருக்குப் பணிந்து நடக்க வேண்டும். (ரோம 8:28 ).
4) துன்பத்தின் மத்தியில் நம் வாழ்வில் தேவனுடைய தெய்வீகப் பராமரிப்பை நாம் அனுபவிக்க, நாம் விசுவாசத்துடன் இடைவிடாமல் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும், ஜெபம், நம்பிக்கை இவற்றின் மூலம் நாம் தேவனுடைய சமாதானத்தை அனபவிக்கிறோம். (பிலி 4:6,7), நாம் கர்த்தரிடமிருந்து பலம் பெறுகிறோம்.
(எபே 3:16; பிலி 4:13), நாம் தேவனுடைய இரக்கத்தையும், கிருபையையும் இக்கட்டு நேரத்தில் உதவியையும் பெறுகிறோம்.
(எபி 4:16; பிலி 4:6). அப்படிப்பட்ட விசுவாசமுள்ள ஜெபங்கள், நமக்காகவோ, மற்றசபைகளுக்காகவோ, ஏறெடுக்கப்பட்ட வேண்டும்.
(ரோம 15:30-32; கொலோ 4:3;)
தொடர்ந்து வேதத்தை வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன்
சிலுவை ராஜா
9841711591
Comments