கர்த்தருக்கு பயப்படுதல்

கர்த்தருக்குப் பயப்படுதல்
உபா 6:1-2 

“நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும்
உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக்
கற்பனைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள்
நீடித்திருக்கும்படி, நீங்கள் சுதந்தரிக்கப் போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப்
போதிக்கவேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும்
கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே."

தேவனுடைய மக்களுக்குப் பழைய ஏற்பாட்டில் அடிக்கடி கொடுக்கப்பட்ட ஒரு கட்டளை, 'தேவனுக்குப் பயப்படு' அல்லது 'ஆண்டவருக்குப் பயப்படு என்பதே. விசுவாசிகள் என்ற நிலையில் இந்தக் கட்டளை எதைக் குறிக்கிறது என்பதை அறிந்திருப்பது முக்கியமானது என்பது நமக்குத் தெரியும். நாம் உண்மையாகவே தேவனுக்குப் பயப்படுவோமானால் மாத்திரமே, அசாதாரண பயங்கள், சாத்தானால் வரும் பயங்கள் ஆகியவற்றின் அடிமைத்தனத்தி லிருந்து விடுவிக்கப்படுவோம்.

'கர்த்தருக்குப் பயப்படுதல்' என்பதன் பொருள்: 'கர்த்தருக்குப் பயப்படு' என்னும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொதுவான கட்டளை, விசுவாசி தேவனோடு கொண்டுள்ள உறவின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது. 

(1) தேவனுடைய அன்பு, இரக்கம், இவற்றுடன் ஈடு செய்வதான அவருடைய பரிசுத்தம், நியாயம், நீதி இவற்றையும் நாம் அறிந்து கொள்வது நாம் கர்த்தருக்குப் பயப்படும் பயத்திற்கு அவசியமானது. அதாவது அவரை அறிந்து கொள்வதும், அவர் யார் என்று முற்றிலும் புரிந்து கொள்வதும் ஆகும். (நீதி 2:5). அப்படிப்பட்ட பயம் 'தேவன் பரிசுத்தமானவர், அவருடைய இயல்பான தன்மையே அவர் பாவத்தை நியாயந்தீர்க்கக் காரணமாகிறது' என்னும் உண்மையை அடிப்படையாகக் கொண்டது.

(2) கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது அவருடைய மாபெரும் மகிமை, பரிசுத்தம், இராஜகெம்பீரம், வல்லமை இவற்றை நினைத்து, பரிசுத்தமான பயத்துடனும், பக்தியுடனும், மகிமை செலுத்தி தேவனைத் தேவனாகக் கனம்பண்ணுவதாகும். (பிலி 2:12). உதாரணமாக, 
சீனாய் மலையில் தேவன் தம்மை வெளிப்படுத்தும்
போது, உண்டான இடிமுழக்கம், மின்னல், மலையின் மேல் எழும்பிய அடர்த்தியான மேகம், ஒரு பெரிய எக்காள சத்தம் இவைகளைக் கண்டதும் இஸ்ரவேலர் பயந்து நடுங்கினர். 
(யாத் 19:16) அப்பொழுது அவர்கள் "நீர் எங்களுடன் பேசும். தேவன் பேசவேண்டாம்" 
என்று மோசேயிடம் வேண்டினர். 
(யாத் 20:18,19; உபா 5:22-27) மேலும், எல்லாவற்றையும் படைத்தவர் என்று சிந்திக்கும் போது, "பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக. உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக, அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும்" (சங் 33:8,9) என்று சங்கீதக்காரன் வெளிப்படையாகக் கூறினான்.

(3) உண்மையாகக் கர்த்தருக்குப் பயப்படும் பயமானது விசுவாசிகள் தங்கள் முழு நம்பிக்கையையும் இரட்சிப்புக்காக அவர் மேலேயே வைத்து அவரை முற்றிலும் சார்ந்திருக்கச் செய்கிறது. உதாரணமாக, இஸ்ரவேலர் வெட்டாந்தரை வழியாகச் செங்கடலைக் கடந்து வந்தபின் எகிப்தியரின் சேனை முழுவதும் அழிந்து போனதைக் கண்டபோது அவர்கள் கர்த்தருக்குப் பயந்து தங்கள் நம்பிக்கையை அவர் மேல் வைத்தார்கள். (யாத் 14:31). அதுபோலவே, சங்கீதக்காரனும் கர்த்தருக்குப் பயப்படுகிற அனைவரிடமும், "கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள், அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்" என்று கூறினான், (சங் 115:11) அதாவது கர்த்தருக்குப் பயப்படும் பயம் தேவனுடைய மக்களில் தேவன் மேல் ஒரு அசையாத, உறுதியான, நம்பிக்கையையும், விசுவாசத்தையும் உண்டாக்குகிறது. அப்படிப்பட்ட விசுவாசிகள் இரட்சிக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. (சங் 85:9) மேலும் அவர்கள் தேவனுடைய மன்னிக்கும் அன்பையும், இரக்கத்தையும் பெறுவார்கள். (லூக 1:50; சங் 103:11; 130:4).

(4) இறுதியாக, கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது, தேவன், பாவத்தைக் கண்டு கோபமடைகிறவர்: அவருடைய நீதியான கட்டளைகளை மீறுகிற வர்களைத் தண்டிக்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறார்; அவர் அதை அக்காலத்திலும் செய்வார், நித்திய காலமாகவும் செய்வார். (சங் 76:7,8) என்பதை உணர்ந்து கொள்வதாகும். ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, அவர்கள் கர்த்தருக்குப் பயப்பட்டு, அவருடைய சமுகத்தில் நிற்கத் துணிவில்லாமல், தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக் கொண்டார்கள். 
(ஆதி 3:8-10). பாவம் நிறைந்த இஸ்ரவேலருக்காக மோசே நாற்பது நாள் இரவும், பகலும் தேவனிடம் மன்றாடிக்கொண்டிருந்தபோது இந்தக் 'கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை' உணர்ந்தான். அதுகுறித்து அவன் இவ்வாறு கூறினான். "கர்த்தர் உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும், உக்கிரத்திற்கும் பயந்திருந்தேன். கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டார்."(உபா 9:19) அதுபோலவே, புதிய ஏற்பாட்டில், எபிரெயர் நிருபத்தை எழுதியவன் தேவனுடைய நியாயத் தீர்ப்பைக் குறித்துக் கூறி உடனேயே, “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே" என்றான். (எபி 10:31).

கர்த்தருக்குப் பயப்பட வேண்டியதன் காரணங்கள்: 
நாம் கர்த்தருக்கு பயப்படவேண்டிய காரணங்கள் என்ன என்பது கர்த்தருக்குப் பயப்படுதல் என்றால் என்ன என்பதிலிருந்து தெரிகின்றன. 

(1) எல்லா மக்களையும், அனைத்துப் பொருட்களையும் படைத்தவர், சர்வவல்லமையுள்ளவர் என்ற காரணத்தால் நாம் தேவனுக்குப் பயப்படவேண்டும். (சங் 33:6-9; 96:4,5; யோனா 19) 

(2) படைக்கப்பட்ட நம்மீதும், அனைத்துப்பொருட்கள் மீதும் அவர் செலுத்திவரும் வல்லமையும் அதிகாரமும் நாம் அவருக்குப் பயப்படுவதற்குக் காரணமாகிறது. 
(யாத் 20:18-20; பிர 3:14; யோனா 1:11-16; மாற் 4:39-41), 

(3) நம் தேவனு டைய பரிசுத்தத்தை நாம் உணரும்போது, அதாவது பாலத்திற்கு விரோதமாக எப்போதும் எதிர்த்து நின்று, அதைவிட்டு முற்றிலும் பிரிந்திருக்கும். அப்படிப்பட்ட தேவனின் பரிசுத்தத்துக்கு முன் பயப்படுவது எந்த சாதாரண மனிதனுக்கும் இயற்கையானதாகும். (வெளி 15:4) 

(4) தேவனுடைய மகிமைப் பிரகாசத்தைப் பார்க்கும் எவரும் அவருக்குப் பயப்படாமலிருக்க முடியாது. (மத் 17:1-8) 

5) தேவனிடமிருந்து நாம் தொடர்ச்சியாகப் பெற்றுவரும் ஆசீர்வாதங்கள், சிறப்பாகப் பாவமன்னிப்பு, 
(சங் 130:4) நம்மை அவருக்குப் பயப்படவும், நேசிக்கவும் செய்யவேண்டும். 
(1 சாமு 12:24; சங் 34:9; 67:7; எரே 5:24;). 

(6) தேவன் ஒரு நீதியுள்ள நியாயாதிபதி. அவர் மனித இனம் முழுவதையும் நியாயந்தீர்க்கிறவர் என்னும் உண்மை கர்த்தர்மேல் நமக்குப் பயத்தை ஏற்படுத்துகிறது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. (உபா 7:12,13; ஏசா 59:18,19; மல் 3:5; எபி 10:26-31). 
நம்முடைய கிரியைகள் நன்மையாயிருந்தாலும், தீமையாயிருந்தாலும் தேவன் எப்போதும் நம்மைக் கவனித்துக் கொண்டும், நம் செயல்களை மதிப்பீடு செய்து கொண்டும் இருக்கிறார் என்பது ஒரு பரிசுத்தமான சத்தியம். இப்பொழுதும், இனிவரும் நியாயத்தீர்ப்பு நாளிலும் நம் கிரியைகளுக்கு நாம் கணக்குக் கொடுக்கவேண்டியது வரும் என்பதை மறந்துவிடக்கூடாது.

கர்த்தருக்குப் பயப்படுதல் பற்றிய தனிமனிதர் சார்ந்த கருத்துகள்: 'கர்த்தருக்குப் பயப்படுதல்' என்பது ஒருவெறும் வேதாகம உபதேசம் மட்டுமல்ல. அது நம்முடைய அன்றாட வாழ்வில் பலவகைகளில் செயல்படுகிறது. 

(1) முதலாவதாக நாம் உண்மையிலேயே கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களானால்,நாம் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும், பாவத்துக்கு 'நான் இடமளிப்பது இல்லை' என்று உறுதியுடன் மறுப்பு தெரிவிப்பவர் கமாகவும் இருப்போம். தேவன் சீனாய் மலையில் காட்சியளித்து இஸ்ரவேலரைப் பயப்படச் செய்ததன் நோக்கம் அவர்கள் பாவத்தை விட்டு விலகியோடி அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்பதே. (யாத் 20:20). மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தனது கடைசிச் செய்தியில் திரும்பத் திரும்ப கர்த்தருக்குப் பயப்படவேண்டிய அவசியத்தையும் அவருக்குக் கீழ்ப்படிந்து, அவருக்கே வஊழியம் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினான்.(உம் உபா 5:29; 6:2,24; 8:6; 10:12; 13:4, 17:19; 31:12), சங்கீதக்காரனின் கருத்துப்படி, 
(சங் 112:1) கர்த்தருக்குப் பயப்படுகிறவன், .
கர்த்தருடைய கட்டளைகளில் பிரியமாயிருப்பான் என்றும் (சங் 112:1) கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவார்கள். (சங் 19:63) என்றும் தெரிகிறது. மேலும் ஞானியாகிய சாலொமோன் இப்படிப் போதிப்பதைக் காண்கிறோம்: "கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையைவிட்டு விலகுவார்கள்.'' 
(நீதி 16:6; 8:13) பிரசங்கி புஸ்தகத்தில் மனித இனம் முழுவதின் கடமைகள் இரண்டு முக்கிய கட்டளைகளாகத் தரப்பட்டுள்ளன. "தேவனுக்குப் பயந்து அவர் கட்டளைகளைக் கைக்கொள்"
(பிர 12:13) ஒருவன் தன் வாழ்வில் எப்பொழுதும் திருப்தியுடன் தன் அக்கிரமங்களிலேயே நிலைத்திருந்தால், அவன் அப்படிச் செய்வதன் காரணம், அவனிடம் "கர்த்தருக்குப் பயப்படும் பயம் இல்லை"" (சங் 36:1-4) என்பதாகும். 

(2) முதல் கருத்தைச் சார்ந்த இன்னொரு அம்சம், விசுவாசிகள் தங்கள் பிள்ளைகளுக்கும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தைக் கற்பித்து, பாவத்தை வெறுக்கவும், ஆண்டவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் பயிற்சியளிக்க வேண்டும். 
(உபா 4:10; 6:1,2, 6-9) வேதாகமத்தில் அடிக்கடி "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" என்று கூறப்படுவதைக் காண்கிறோம். (சங் 111:10; நீதி 9:10; யோபு 28:28; நீதி 1:7) நம்முடைய குழந்தைகளின் கல்விப்பயிற்சியின் அடிப்படை இலட்சியம் தேவனுடைய ஞானத்தைப் பற்றிய கொள்கைகளுக்கேற்ப அவர்களை வாழச் செய்வதே. (நீதி 11-6) கர்த்தருக்குப் பயப்படுதலை அவர்களுக்குக் கற்பிப்பதே கடினமான முதற்படி. 

(3) கர்த்தருக்குப் பயப்படும் பயம் தேவனுடைய பிள்ளைகளைப் பரிசுத்தவான்களாக இருக்கச் செய்கிறது. தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தில் பரிசுத்தம் இருப்பது போலக் கர்த்தருக்குப் பயப்படும் பயத்திலும் பரிசுத்தம் இருக்கிறது. (யோவா 17:17) அது நம்மைப் பாவத்தை வெறுக்கவும், தீமையை விட்டுவிலகவும் செய்கிறது. (நீதி 3:7; 8:13; 16:6) அது நம்முடைய பேச்சில் மிகவும் கவனமாகவும், கட்டுப்பாட்டுடனும் இருக்கச் செய்கிறது. (நீதி 10:19; பிர 5:2,6,7) அது நமது மனச்சாட்சி தவறி விடாமல் பாதுகாக்கிறது. நம்முடைய ஒழுக்கநெறி பற்றிய தீர்மானங்களை மீறாமலிருக்கவும் உதவுகிறது. கர்த்தருக்குப் பயப்படும் பயம் தூய்மையானது; அது நம்மைச் சுத்திகரித்து பரிசுத்தப்படுத்தும். (சங் 19:9) பரிசுத்தமான தேவபயத்துக்கு மீட்கும் ஆற்றல் உண்டு.

(4) கர்த்தருக்குப் பயப்படும் பரிசுத்தமான பயம், தேவனுடைய பிள்ளைகளை, அவரை முழு இருதயத்தோடு தொழுதுகொள்ளத் தூண்டுகிறது. நம்மிடம் உண்மையான தேவபயம் இருந்தால் நாம் அவரைத் தொழுது கொண்டு அவரை ஆண்டவரென்று மகிமைப்படுத்துவோம். (சங் 22:23) தாவீது தேவனைத் தொழுது கொள்ளும் கூட்டத்தாரைக் கர்த்தருக்குப் பயப்படுபவர்களுக்குச் சமமாகக் கருதுகிறான். 
(சங் 22.25) அதுபோலவே வரலாற்றின் இறுதியில் பாலோக தூதன் நித்திய சுவிசேஷத்தை அறிவித்து பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தருக்குப் பயப்படவேண்டும் என்று கூறினான். தொடர்ந்து அவன், "தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்... வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுக்களையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்கள்" என்றான். 
(வெளி 14:6,7)

(5) தமக்குப் பயப்படுகிறவர்களுக்குக் கர்த்தர் நல்ல பலன் அளிப்பதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். "தாழ்மைக்கும், கர்த்தருக்குப் பயப் படுதலுக்கும் வரும்பலன் ஐசுவரியமும், மகிமையும் ஜீவனுமாம்" (நீதி 22:4) கர்த்தருக்குப் பயப்படுவதற்குக் கிடைக்கும் மற்ற பலன்கள் என்னவெனில் கர்த்தருக்குப் பயப்படுவதால் மரணக் கண்ணிகளுக்குத் தப்பலாம். 
(நீதி 14:26,27) அவருக்குப் பயந்தவர்களுக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங் களும் கிடைக்கும். 
(சங் 34:9; 111:5) அடுத்தபடியாகக் கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும், (நீதி 10:27) "தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள்." தங்களைச் சுற்றிலும் என்ன, எப்படி நடந்தாலும் அவர்களுக்கு நன்மையாக முடியும். ( 8:12-13).

(6) இறுதியாக, தேவனுடைய மக்களுக்குக் கர்த்தருக்குப் பயப்படும் பயம், சொல்லமுடியாத ஆவிக்குரிய சந்தோஷத்தையும், சமாதானத்தையும், ஆறுதலையும் தரும் என்னும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் கர்த்தருக்குப் பயப்படும் பயம் பரிசுத்த ஆவியின் ஆறுதலைத் தருகிறது என்று கூறப்பட்டுள்ளது. 
(அப் 9.31) கர்த்தருக்கும் பயப்படும் பயம் இல்லாமல் வாழ்பவர்கள், தேவனுடைய சமுகத்தையும், பிரசன்னத்தையும் உணருவ தில்லை. தேவனுடைய கிருபையையும், பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ளுவதில்லை. (உபா 1:26); அதே வேளையில் கர்த் தருக்குப் பயந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் தங்கள் வாழ்வில் ஆவிக்குரிய பாதுகாப்பு அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறு கிறார்கள். அவர்களுக்குப் பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் உண்டு. 'தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிப்பார்" 
(சங் 33:18,19) என்ற உறுதி கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களுக்கு உண்டு. 
தொடர்ந்து வேதத்தை வாசியுங்கள். நம்முடைய உயர்ந்த முத்துக்கள் பதிவை ஃபாலோ செய்யுங்கள் கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை