பெண்களால் பாதிக்கப்பட்ட

பெண்களால் பாதிக்கப்பட்ட சில மா மனிதர்கள்.

வேதாகமத்தில் சில பெண்கள் மூலம் பலவீனப்பட்ட அல்லது துன்பத்திற்குள்ளான முக்கிய நபர்கள் மற்றும் அதற்கான வசன ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஆதாம் (ஏவாள் மூலம்):
ஏவாள் விலக்கப்பட்ட கனியைப் புசித்ததோடு, அதை ஆதாமுக்கும் கொடுத்தாள். இதனால் ஆதாம் தேவனுடைய கட்டளையை மீறி, மரணத்திற்கும் சாபத்திற்கும் உள்ளானார்.
வசனம்:
 "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சத்தின் கனி புசிக்க நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதன் கனியைப் பறித்து புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்" 
(ஆதியா 3:6).

சிம்சோன் (தெலீலாள் மூலம்):
சிம்சோன் தெலீலாள் என்ற பெண்ணை நேசித்தார். அவள் அவனுடைய வல்லமையின் இரகசியத்தை வற்புறுத்திக் கேட்டு, அதைக் கொண்டு அவனைக் காட்டிக் கொடுத்தாள். இதனால் அவர் கண்களை இழந்து பெலிஸ்தர்களிடம் அடிமையானார்.
வசனம்: 
"நீ உன் இருதயத்தை என்னிடத்தில் வைக்காதிருக்க, உன்னை நேசிக்கிறேன் என்று எப்படிச் சொல்லுகிறாய்? ...என்று சொல்லி, அவனை நித்தம் தன் வார்த்தைகளினால் அலட்டிக்கொண்டிருந்தபடியால், அவன் ஆத்துமா சாகத்தக்கதாக விசனப்பட்டது. அப்பொழுது அவன் தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி..." (நியாய 16:15-17).

ஆகாப் (யேசபேல் மூலம்):
இஸ்ரவேலின் ராஜாவான ஆகாப், தன் மனைவி யேசபேலின் தூண்டுதலால் விக்கிரக ஆராதனை செய்து, நாபோத் என்பவரைக் கொன்று அவனது திராட்சத்தோட்டத்தைக் கைப்பற்றினான். இது அவனது அழிவுக்குக் காரணமாக இருந்தது.
வசனம்: 
"தன் மனைவி யேசபேல் ஏவினபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்யத் தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை" 
(1 இராஜா 21:25).

யோசேப்பு (போத்திபாரின் மனைவி மூலம்):
போத்திபாரின் மனைவி யோசேப்பைத் தவறான வழிக்கு அழைத்தாள். அவர் அதற்கு இணங்காதபோது, அவர் மீது பொய்க் குற்றம் சுமத்தி அவரைச் சிறையில் அடைக்கச் செய்தாள்.
வசனம்: 
"அவள் அவனைத் தன் வஸ்திரத்தைப் பிடித்து இழுத்து: என்னோடே சயனி என்றாள்; அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்... அவள் அவனைத் தன் எஜமான் வீட்டிற்கு வந்தபோது அவனை நோக்கி: 
எபிரெய மனுஷன் என்னை அவமானப்படுத்தும்படிக்குள்ளே வந்தான் என்று சொன்னாள்" (ஆதியா 39:12-14).

சாலொமோன் (அந்நிய நாட்டு மனைவிகள் மூலம்):
ஞானமுள்ள சாலொமோன் ராஜா, பல அந்நிய நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்ததால், அவர்கள் அவருடைய இருதயத்தைத் திருப்பி, அவரை விக்கிரகங்களை வணங்கச் செய்தார்கள்.
வசனம்:
 "சாலொமோன் முதிர்வயதானபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி திருப்பினார்கள்; அதினால் அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாயிருக்கவில்லை" 
(1 இராஜா 11:4).

யோவான் ஸ்நானகன் (ஏரோதியாள் மூலம்):
ஏரோதியாள் தன் மகளைக் கொண்டு ஏரோது ராஜாவிடம் தந்திரமாகப் பேசி, சிறையிலிருந்த யோவான் ஸ்நானகனின் தலையை வெட்டி வாங்கி வரச் செய்தாள்.
வசனம்: 
"அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான் ஸ்நானகனுடைய தலையை ஒரு தட்டில் வைத்து இங்கே எனக்குத் தரவேண்டும் என்றாள்" 
(மத்தேயு 14:8).

மேலே சொல்லப்பட்ட பெண்களில் யெசபேல் என்ற பெண்ணைக் குறித்து நாம் சிந்திப்போம்.
யேசபேல் (Jezebel) 
ஒரு கொடூரமான மற்றும் விக்கிரக ஆராதனைக்குத் துணையாக நின்ற அரசியாகச் சித்தரிக்கப்படுகிறார். எலியா தீர்க்கதரிசிக்கும் அவளுக்கும் இடையிலான மோதல் இஸ்ரவேலின் ஆன்மீக வரலாற்றில் மிக முக்கியமானது. 

யேசபேல் எப்படிப்பட்டவள்?
விக்கிரக ஆராதனையை அறிமுகப்படுத்தியவள்: 
சீதோன் நாட்டு ராஜாவின் மகளான இவள், இஸ்ரவேல் ராஜாவான ஆகாபை மணம் முடித்தபின், பாகால் மற்றும் அஷேரா வழிபாட்டை இஸ்ரவேலில் கட்டாயமாக்கினாள்.

தீர்க்கதரிசிகளைக் கொன்றவள்: 
கர்த்தருடைய தீர்க்கதரிசிகளைத் தேடித்தேடி கொலை செய்த கொடூர மனம் படைத்தவள்.

அதிகார துஷ்பிரயோகம் செய்தவள்: 
தன் கணவன் ஆகாபுக்காக, நாபோத் என்பவனைப் பொய்க் குற்றம் சுமத்திக் கொன்று, அவனது திராட்சத்தோட்டத்தைக் கைப்பற்றினாள்.

தூண்டுதல் அளிப்பவள்: 
தன் கணவன் ஆகாபை தீய வழியில் நடத்தத் தூண்டியவளாகக் கருதப்படுகிறாள் 
(1 இராஜா 21:25).

எலியாவை மிரட்டியதற்கான காரணங்கள்
பாகால் தீர்க்கதரிசிகளின் அழிவு: 
கர்மேல் மலையில் நடந்த சோதனையில், கர்த்தர் வானத்திலிருந்து அக்கினியை அனுப்பித் தம்மை மெய்யான தெய்வம் என்று நிரூபித்தார். அதன் பிறகு, எலியா பாகாலின் 450 தீர்க்கதரிசிகளையும் கொன்று போட்டார்.

பழிவாங்கும் உணர்ச்சி: 
தன் மதத் தலைவர்கள் கொல்லப்பட்ட செய்தியை ஆகாப் மூலம் அறிந்த யேசபேல், மிகுந்த ஆத்திரமடைந்து எலியாவைப் பழிவாங்கத் துடித்தாள்.

அதிகாரத்தை நிலைநாட்ட: 
எலியாவின் வெற்றி ஜனங்களிடையே கர்த்தர் மீதான நம்பிக்கையை அதிகரித்திருந்தது. இது யேசபேலின் ஆன்மீக மற்றும் அரசியல் அதிகாரத்திற்குப் பெரும் சவாலாக அமைந்தது.

வசன ஆதாரம் (மிரட்டல்)
யேசபேல் எலியாவிற்கு விடுத்த நேரடி மரண மிரட்டல்: 
"நாளை இந்நேரத்திற்கு நான் உன் பிராணனை அவர்களில் (கொல்லப்பட்ட பாகால் தீர்க்கதரிசிகளில்) ஒருவனுடைய பிராணனைப்போல ஆக்காவிட்டால், தேவர்கள் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்கள் என்று சொல்லச் சொல்லி, எலியாவினிடத்தில் ஆள் அனுப்பினாள்"
(1 இராஜா 19:2). 

எலியாவின் ஊழியம் தடுக்கப்பட்டது எப்படி?
இந்த மிரட்டலால் எலியா மிகுந்த பயமடைந்து, தன் உயிரைக் காக்க வனாந்தரத்திற்கு ஓடினார். ஒரு சூரைச் செடியின் கீழ் அமர்ந்து, "இது போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்" என்று சொல்லுமளவிற்கு அவர் மனச்சோர்வடைந்தார். (1 இராஜா 19:4). இவ்வாறு, யேசபேலின் மிரட்டல் தற்காலிகமாக எலியாவின் தைரியத்தை உலைத்து, அவரை ஊழியம் செய்ய விடாதபடி முடக்கியது.
 
1 இராஜாக்கள் 19-ஆம் அதிகாரத்தில், யேசபேலின் மிரட்டலுக்குப் பயந்து ஓடிய எலியா, அதன்பின் செய்த முக்கியமான காரியங்கள் மற்றும் அவனுக்கு நடந்த நிகழ்வுகள் :

1). பெயெர்செபாவில்
தன் வேலைக்காரனை நிறுத்துதல்.

2).வனாந்தரத்திற்குத் தப்பி ஓடுதல் 
(வசனம் 3-4): 
தனது உயிருக்கு பயந்த எலியா, , வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் செய்து தனித்துச் சென்றான்.

3). சாவை விரும்பி ஜெபித்தல் 
(வசனம் 4): 
ஒரு சூரைச்செடியின் கீழ் அமர்ந்து, "இப்பொழுது போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்" என்று மிகுந்த சோர்வுடன் மரணத்திற்காக வேண்டினான்.

4) நான் நல்லவன் அல்ல என்று புலம்பினான்
(1இராஜா 19:4)

5) சோர்வு அவனை தூங்க வைத்தது. 
(1இராஜா 19:5)

6) தேவதூதனால் போஷிக்கப்படுதல் (வசனம் 5-8): 
எலியா தூங்கிக்கொண்டிருந்தபோது ஒரு தேவதூதன் அவனை எழுப்பி, சுடப்பட்ட அடையும் தண்ணீரும் கொடுத்தான். அந்த உணவின் பலம் 40 நாள் இரவும் பகலும் நடக்கக்கூடிய ஆற்றலை தரக்கூடியது. ஆனாலும் அவன் சாப்பிட்ட பின்பு தேவனோடு கூட பேசவில்லை அடுத்து எங்கு போக வேண்டும் என்றும் கேட்காமலேயே தேவனுடைய மலையாகிய ஓரேப் வரை சென்றான்.
(சுமார் 480 கிலோமீட்டர் தூரம் இரவு பகலாக நடந்தான்) 
(1இராஜா19:9-10): 

7) கர்த்தர், அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.
(1 இராஜா 19:9,13)
கர்த்தர் எலியாவை விசாரித்தார் 
(ஏசாயா 29:6;1பேது 5:7)

எலியாவின் பதில்:
ஓரேப் மலையில் ஒரு கெபியில் தங்கியிருந்தபோது, தேவன் அவனிடம் பேசினார். அப்போது எலியா, இஸ்ரவேல் மக்கள் உடன்படிக்கையை மீறிவிட்டார்கள் என்றும், தான் ஒருவன் மாத்திரம் எஞ்சியிருப்பதாகவும், தன் உயிரையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றும் தன் ஆதங்கத்தைக் கூறினார்.
(வசனம் 11,13)

எலியா மீண்டும் தேவனுக்கு முன்பாக வந்து நின்றதால் புதிய பொறுப்புகளை கொடுத்தார்.
 (வசனம் 15-16): 
தேவன் எலியாவிற்கு மூன்று முக்கிய கட்டளைகளைக் கொடுத்தார்:
ஆசகேலைச் சீரியாவின் மேல் ராஜாவாக அபிஷேகம் செய்ய வேண்டும்.

யெகூவை 
இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் செய்ய வேண்டும்.

எலிசாவை
தனக்குப் பதிலாகத் தீர்க்கதரிசியாக அபிஷேகம் செய்ய வேண்டும்.

7000 பேரைப் பற்றிய செய்தியை அறிதல் (வசனம் 18): 
தான் ஒருவன் மட்டுமே பக்தியுள்ளவன் என்று நினைத்த எலியாவிடம், பாகாலுக்கு முன்பாக முழங்கால் படியிடாத ஏழாயிரம் பேரை இஸ்ரவேலில் இன்னும் மீதியாக வைத்திருப்பதாகத் தேவன் கூறினார்.

எலிசாவை அழைத்தல் 
(வசனம் 19-21): 
எலியா அவ்விடம் விட்டுப் போய், ஏரோயை ஏழுதுகொண்டிருந்த எலிசாவைக் கண்டார். தன் சால்வையை அவன்மேல் போட்டு, அவனைத் தன்னைப் பின்பற்றி வரும்படி அழைத்தார். எலிசாவும் தன் அனைத்தையும் விட்டுவிட்டு எலியாவுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினான். 
இந்த அதிகாரத்தின் மூலம், சோர்வுற்றிருந்த எலியாவைத் தேவன் தேற்றி, அவருக்குப் புதிய தரிசனத்தையும் ஒரு உதவியாளரையும் (எலிசா) வழங்கியதை நாம் காணலாம்.
எலியாவுக்கே இந்த சோதனை என்றால் !!!

இன்றைக்கும் பிசாசினால் ஏவப்பட்டவர்கள் சபைக்கு விரோதமாக பெண்களை பயன்படுத்தி ஊழியர்களையும், திருச்சபை விசுவாசிகளையும் கலங்க பண்ணுகிறார்கள் என்பதற்கு யெசபேல் ஒர் உதாரணம் ஆகும். 
அங்குசம் என்ற ஒரு பத்திரிக்கையில் (பந்தநல்லூர் ஆரலூர் கிராமம் ஒரு கள்ள ஊழியன் மூலமாக உருவாக்கப்பட்ட அவலமான செயல்கள்) வாசிக்கும் பொழுது இதே போல் ஒரு சம்பவத்தை பிசாசு சில நபர்கள் மூலம் அரங்கேற்றியதை காண முடிந்தது. ஒரு போலியான செய்தி உண்மை செய்தியாக வெளியிட்டவர் உண்மையாகவே 😈 பிசாசின் வேலையால் என்பது உறுதியாகிறது.
இப்படிப்பட்ட வேலையாட்கள் நம்மோடு கூட பயணிக்கலாம் நண்பர்களாக இருக்கலாம் ஆகவே ஜாக்கிரதையாக இருங்கள் கர்த்தர் உங்களை பாதுகாப்பாராக ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.




Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை