இரட்சிப்பின் உறுதி
இரட்சிப்பின் உறுதி
1 யோவா 5:13ல் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்."
ஒவ்வொரு கிறிஸ்தவனும் இரட்சிப்பின் நிச்சயத்தைப் பெற விரும்புகிறான். அதாவது, கிறிஸ்து திரும்பிவரும்போது அல்லது மரணம் வரும்போது அவனோ அல்லது அவளோ பரலோகத்தில் ஆண்டவராகிய இயேசுவோடு இருக்கும்படி அவரிடம் போவதற்குரிய நிச்சயம் (பிலி 1:23) ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். யோவான் தன் முதல் நிருபத்தை எழுதுவதற்கான அவனுடைய நோக்கம் என்னவென்றால் தேவனடைய மக்கள் அந்த நிச்சயத்தைப் பெற்றிருக்கவேண்டும் என்பதாகும்
(1 யோவா 5:13).
ஒரு கடந்த கால மனந்திரும்புதலின் அனுபவம் இரட்சிப்பின் ஒரு உறுதியையோ அல்லது உத்தரவாதத்தையோ அமைத்துக் கொடுக்கும் என்று யோவான் இந்த நிருபத்தில் எந்த இடத்திலும் கூறவில்லை என்பதை கவனிக்கவும் தற்போது எந்த முக்கியத்துவமும் பெறாத ஒரு கடந்தகால அனுபவத்தை அல்லது ஒரு விசுவாசத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, நாம் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறோம் என்று நாமாக நினைத்துக் கொள்வது ஒரு அபாயகரமான தவறாகும்.
இயேசு கிறிஸ்துவோடு ஒரு இரட்சிப்புக்கேற்ற உறவில் நாம் இருக்கிறோமா என்று நாம் அறிய இந்த நிருபத்தில் ஒன்பது வழிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
(1) "தேவகுமாரனுடைய நாமத்தின் மேல்" நாம் விசுவாசமாயிருந்தால் நமக்கு நித்திய ஜீவனைப் பற்றிய நிச்சயம் உண்டு.
(1 யோவா 5:13; 4:15; 5:1 5). நம்ஆண்டவரும் இரட்சகருமாக அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவை தேவ குமாரனென்று அறிக்கையிடும் ஒரு உண்மையான விசுவாசம் இல்லாவிட்டால் நித்திய ஜீவனோ அல்லது இரட்சிப்பின் நிச்சயமோ நமக்குக் கிடையாது.
(2) கிறிஸ்துவை நம் வாழ்க்கைகளுக்கு ஆண்டவராக நமக்கு அவரை கனப்படுத்தி அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள உண்மையாகவே முயற்சித்தோமானால் நமக்கு நித்திய ஜீவனுக்குரிய நிச்சயம் உண்டு. "அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால் அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான். அவனுக்குள் சாத்தியமில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும், நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை இக்காரியங்களால் அறிகிறோம்."
(1 யோவா 23-5, 3:24; 5:2, யோவா 8:31,51, 14:21-24: 15:9-14: எபி 5:9).
(3) உலகத்தைக் காட்டிலும் நாம் பிதாவையும் குமாரனையும் அதிகமாக நேசித்து உலகத்திலுள்ள ஈடுபாட்டின் மேல் வெற்றி கொண்டால் நமக்கு நித்திய ஜீவனைப் பற்றிய நிச்சயம் உண்டு. "உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில் மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்" (1 யோவா 2:15-16; 4:4-6; 5:4;)
(4) பாவத்தைக் காட்டிலும் நீதியை அதிகமாக பழக்கப்படுத்திக் கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்தால் நமக்கு நித்திய ஜீவனைப் பற்றிய நிச்சயம் உண்டு. “அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்" (1யோவா 2:29). அதற்கு மாறாக "பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்." (3:7-10; 3.9 பார்க்கவும்).
(5) நம் சகோதரர்களிடத்திலும், சகோதரிகளிடத்திலும் நாம் அன்பு கூருவோமானால் நமக்கு நித்திய ஜீவனைப் பற்றிய நிச்சயம் உண்டு, “நாம் சகோதரரிடத்தில் அன்பு கூருகிறபடியால் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம்... இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்."
(1யோவா 3:14,19: 2:9-11, 3:23, 4:8, 11-12,16,20; 51;
யோவா 13:34-35).
(6) நம்மில் வசிக்கும் பரிசுத்த ஆவியைப் பற்றிய உணர்வுள்ளவர்களாக நாம் இருந்தால் நமக்கு நித்திய ஜீவனைப் பற்றிய நிச்சயம் உண்டு. "அவர் (இயேசு கிறிஸ்து) நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்"
(1 யோவா 3:24). மறுபடியும் "அவர் தம்முடைய ஆவியை நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்” (4:13).
(7) நாம் இயேசுவின் முன் மாதிரியைப் பின்பற்றவும் அவர் வாழ்ந்தது போல் வாழவும் முயற்சித்தோமானால் நித்திய ஜீவனைப் பற்றிய நிச்சயம் நமக்கு உண்டு, "அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன் அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்"
(1 யோவா 2:6; யோவா 8:12).
(8) "ஜீவ வார்த்தை"அதாவது உயிருள்ள கிறிஸ்துவையும்
(1 யோவா 1:1), கிறிஸ்து, புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர் ஆகியோரின் மூல செய்தியையும் விசுவாசித்து, ஏற்றுக்கொண்டு நிலைத்திருந்தால் நமக்கு நித்திய ஜீவனைப் பற்றிய நிச்சயம் உண்டு. "ஆதி முதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால் நீங்களும் குமாரனிலும், பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.'' (2:24; 1:1-5; 4:6).
(9) கிறிஸ்துவின் வருகையில் அவரிடமாய் நம்மை ஏற்றுக் கொள்ளுவாரென்று ஒரு தீராத ஆசையும் ஒரு வளைந்து கொடுக்காத நம்பிக்கையும் நாம் கொண்டிருந்தோமானால் நமக்கு நித்திய ஜீவனைப் பற்றிய நம்பிக்கை உண்டு. "பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது, அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவளொவனும் அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்"
(1 யோவா 32-3; யோவா 14:1-3).
மேலும் அறிந்து கொள்ள வேதத்தை தொடர்ந்து வாசியுங்கள். நம்முடைய உயர்ந்த முத்துக்கள் பதிவுகளை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments