தகுதியாகுமா...

திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் ஒரு கிராமத்தில் எபினேசர் என்ற ஒரு ஊழியர் இருந்தார். அவருக்கு மனைவியும் பிள்ளைகளும் இருந்தனர் இந்த சமயத்தில் இன்னொருவர் மனைவியையும் அவர் சேர்த்துக் கொண்டார். இதைக் கேட்ட முதல் மனைவி அடித்து கீழ்பாக்கம் மனநிலை பாதிக்கப்பட்ட ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டார் அதன் பின்பு அந்த பெண்ணோடு வாழ்ந்து மரித்துவிட்டார். அதற்குப் பிறகு அவருடைய மகன் ஐசக் பாபு என்பவர் அந்த ஊழியத்தை எடுத்துக் கொண்டார். அவருக்கும் ஒரு மனைவி ஒரு மகள் உண்டு தற்பொழுது அதை விட்டுவிட்டு இன்னொரு திருமணத்தை செய்து கொண்டார் அதுமாத்திரமல்ல தகப்பன் விட்டு சென்ற மனைவியையும் அவர் வைத்துக் கொண்டார். இவர் சபை நடத்துவதற்கு தகுதியானவரா ? இப்படிப்பட்ட ஊழியர்கள் இன்றைக்கு பெருகி காணப்படுகிறார்கள். திருச்சபையில் வல்லமை காணப்படவில்லை என்றால் இப்படிப்பட்டவருடைய ஊழியங்கள் இன்று பெருகி இருக்கிறது. 
இதைத்தான்
1 கொரிந்தியர் 5-ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை நடவடிக்கை மற்றும் பாவம் குறித்த எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஏழு முக்கிய குறிப்புகளை கவனிக்க வேண்டும்

1) மறைக்கப்படாத பாவம்: 
சபைக்குள் ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியைச் சேர்த்துக்கொண்டது போன்ற, புறஜாதிகளுக்குள்ளும் காணப்படாத பயங்கரமான வேசித்தனத்தைப் பவுல் சுட்டிக்காட்டுகிறார் (வசனம் 1).

2) தவறான பெருமை: இப்படிப்பட்ட பாவம் நடந்தும் சபையார் துக்கப்படாமல், பெருமையுடனிருந்தது தவறெனக் கண்டிக்கப்படுகிறார்கள். அந்தப் பாவம் செய்தவன் சபையிலிருந்து நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பவுல் வலியுறுத்துகிறார் (வசனம் 2).

3) சபையின் அதிகாரம்: 
சபையார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலும், வல்லமையினாலும் ஒன்று கூடி, தீமை செய்தவனுக்கு எதிராகத் தீர்மானம் எடுக்க வேண்டும் (வசனம் 4).

4) ஆத்தும இரட்சிப்புக்காகத் தண்டனை: 
பாவம் செய்தவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, அவனுடைய மாம்சம் அழிவதற்காக அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது (வசனம் 5).

5) புளித்த மாவின் எச்சரிப்பு: 
"கொஞ்சம் புளித்த மாவு பிசைந்த மாவையெல்லாம் புளிப்பாக்கும்" என்று கூறுவதன் மூலம், ஒருவருடைய பாவம் முழு சபையையும் கறைப்படுத்தும் என்பதை பவுல் விளக்குகிறார் (வசனம் 6).

6) பழைய புளித்த மாவை நீக்குதல்: கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்ட பஸ்காவாயிருப்பதால், நாம் பழைய புளித்தமாவாகிய துர்க்குணத்தையும் பொல்லாப்பையும் நீக்கி, துப்புரவு மற்றும் உண்மையென்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்க வேண்டும் (வசனம் 7, 8).

7) சபை நீக்கம் (விலகியிருத்தல்): விசுவாசி என்று சொல்லிக்கொண்டு வேசி மார்க்கத்தாராய், பொருளாசைக்காரராய் அல்லது விக்கிரகாராதனைக்காரராய் இருக்கிறவர்களோடு புசிக்கவும் கூடாது, அவர்களுடனான உறவைத் துண்டிக்க வேண்டும் (வசனம் 11). 
தொடர்ந்து விசுவாசிகள் தேவனுடைய ஊழியர்கள் வேதத்தின் படி நடந்து தேவ நாமத்தை மகிமைப்படுத்த முயற்சி செய்யுங்கள் கர்த்தர் நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா 
தொடர்புக்கு 
9841711591.


Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை