மூன்றாம் உலகப் போர் வந்துவிட்டால் ?
தற்போது நடக்கிற யுத்தங்கள் பெரிய பரபரப்பை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இந்த யுத்தம்
மூன்றாம் உலகப்போர் போன்ற ஒரு பேரிடர் சூழல் ஏற்பட்டால், தமிழ்நாட்டு மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டிய சில முக்கியமான ஆயத்தப்பணிகளை செய்து கொண்டு தயாராக இருக்க வேண்டும்.
உணவு மற்றும் குடிநீர் சேமிப்பு:
குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற கெட்டுப்போகாத உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கவும். சுத்தமான குடிநீரைச் சேமிப்பதோடு, நீரைச் சுத்திகரிக்கும் முறைகளையும் (தேற்றான் கொட்டை, வடிகட்டி) தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
முதலுதவி பெட்டி (First Aid Kit): அத்தியாவசிய மருந்துகள், கிருமிநாசினிகள், தழும்புகளுக்கான களிம்புகள் மற்றும் காயங்களுக்குப் போடும் கட்டுகள் அடங்கிய முதலுதவி பெட்டியைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
மின்சாரம் இல்லாத சூழல்:
மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதால், சோலார் விளக்குகள் (Solar lights), டார்ச் லைட் மற்றும் கூடுதல் பேட்டரிகளை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.
முக்கிய ஆவணங்கள்:
ஆதார், ரேஷன் கார்டு, சொத்துப்பத்திரங்கள் மற்றும் வங்கி ஆவணங்களை ஒரு
நீர்,தீ புகாத (Waterproof) பையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றின் நகல்களை (Copies) வைத்திருப்பது நல்லது.
பணப் புழக்கம்:
ஏடிஎம் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முடங்கக்கூடும் என்பதால், தேவையான அளவு சில்லறைப் பணத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
தொடர்பு சாதனங்கள்:
செல்போன் டவர்கள் வேலை செய்யாதபோது தகவல்களைத் தெரிந்துகொள்ள 'பேட்டரி மூலம் இயங்கும் ரேடியோ' (Transistor) மிக முக்கியமானது
பாதுகாப்பான இடம்:
போர் பதற்றம் அதிகரித்தால் தங்குவதற்கு உங்கள் வீட்டிலேயே பாதுகாப்பான உள் அறையையோ அல்லது கிராமப்புறங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களையோ முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
எரிபொருள் மேலாண்மை:
சமையல் எரிவாயு (Gas) தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால், விறகு அடுப்பு அல்லது மாற்று எரிபொருள் வசதிகளைச் தயார் நிலையில் வைத்திருப்பது புத்திசாலித்தனம்.
சமூக ஒற்றுமை:
அக்கம் பக்கத்தினருடன் நல்லுறவைப் பேணுங்கள். ஆபத்து காலத்தில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
மன உறுதி மற்றும் விழிப்புணர்வு:
வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கவனிக்க வேண்டும். இக்கட்டான சூழலை எதிர்கொள்ளத் தேவையான மன வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்
இந்தத் தயாரிப்புகள் போருக்கு மட்டுமின்றி, இயற்கைச் சீற்றங்களின் போதும் உங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
ஆகையால் பொதுமக்கள் ஒரு விழிப்புணர்வோடு நடக்கும் சம்பவங்களை தெளிவோடு கவனித்து விவேகமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே உங்களை பாதுகாப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
தொடர்புக்கு
9841711591.
Comments