திருச்சபைகளை சீரழிக்கும் ஊழியர்கள்.
பெண்களை தவறாக பயன்படுத்தும் கள்ள ஊழியர்கள்.
திருச்சபைகளைச் சீர்குலைக்கும் நோக்கத்தில் தவறான வழிகளில் பெண்களைப் பயன்படுத்தும் ஊழியர்களைக் குறித்து வேதம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறது. இத்தகைய நபர்களுக்கு வேதம் அளிக்கும் சில முக்கியமான அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகள்.
1).தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு பயப்படுங்கள்:
தேவனுடைய ஆலயத்தைப் பாழாக்குகிறவனை தேவன் பாழாக்குவார் என்று வேதம் எச்சரிக்கிறது.வசனம்: "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைப் பாழாக்கினால், அவனைத் தேவன் பாழாக்குவார்."
(1 கொரி 3:17)
2).கள்ளத் தீர்க்கதரிசிகளின் வேஷம் வெளிப்படும்:
ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டு வரும் ஓநாய்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
வசனம்:
"கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்."
(மத்தேயு 7:15)
3).பெண்களை வஞ்சிப்பவர்களுக்குக் கடும் தண்டனை:
பாவங்களில் சிக்கியுள்ள பெண்களைத் தங்கள் வசப்படுத்தும் ஊழியர்களைப் பற்றி பவுல் குறிப்பிடுகிறார்.
வசனம்:
"பாவங்களால் நிறைந்து, பலவிதமான இச்சைகளால் நடத்தப்படுகிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளுக்குள் நுழைந்து, அவர்களைச் சிறைபிடித்துக்கொள்ளுகிறவர்கள் இவர்களில் உட்பட்டவர்கள்."
(2 தீமோ 3:6)
4).இயேசபெல் போன்ற போதனைகளைத் தவிருங்கள்:
விபசாரத்திற்கும் விக்கிரக ஆராதனைக்கும் வழிநடத்தும் போதனைகளைக் குறித்து எச்சரிக்கிறது.
வசனம்:
"தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற இயேசபெல் என்னும் ஸ்திரீயானவள்... என் ஊழியக்காரருக்கு விபசாரஞ்செய்யவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் போதித்து, அவர்களை வஞ்சிக்கிறதற்கு நீ இடங்கொடுக்கிறாய்." (வெளிப் 2:20)
5).தன் வயிற்றுக்காக ஊழியம் செய்தல்:
இவர்கள் தேவனுக்கு அல்ல, தங்கள் சுய இச்சைகளுக்கே ஊழியம் செய்கிறார்கள்.
வசனம்:
"இப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல், தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, இச்சகமான பேச்சினாலும் நயவஞ்சகத்தினாலும் கபடற்றவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்." (ரோமர் 16:18)
6).மனந் திரும்பாவிட்டால் அழிவு நிச்சயம்:
தவறான வழிகளில் நடப்பவர்களுக்கு மனந்திரும்ப அவகாசம் கொடுத்தும் மாறாவிட்டால் தண்டனை வரும்.
வசனம்:
"அவள் மனந்திரும்புகிறதற்கு நான் அவளுக்குத் தவணை கொடுத்தேன்; அவள் தன் விபசாரத்தை விட்டு மனந்திரும்பவில்லை. இதோ, நான் அவளைப் படுக்கையிலே தள்ளுகிறேன்..." (வெளி 2:21-22)
7).சாத்தானின் வேஷத்தைத் தரித்த ஊழியர்கள்:
சாத்தான் ஒளியுள்ள தூதனின் வேஷத்தைத் தரிப்பது போல, அவனது ஊழியர்களும் நீதியின் ஊழியக்காரரைப் போல வேஷம் தரிப்பார்கள்.
வசனம்:
"சாத்தானும் ஒளியுள்ள தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது பெரிய காரியமல்ல; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்."
(2 கொரி 11:14-15)
8).தேவபக்தியின் வேஷத்தைப் போடாதீர்கள்:
பக்தியின் வேஷத்தைப் போட்டுக்கொண்டு அதன் பெலனை மறுதலிக்கிறவர்களை விட்டு விலக வேண்டும்.
வசனம்:
"தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயிருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு."
(2 தீமோ 3:5)
9).சபையைப் பிரிக்கிறவர்களுக்கு எச்சரிக்கை:
சபையில் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
வசனம்:
"சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்." (ரோமர் 16:17)
10).முடிவு மரணம் மற்றும் நியாயத்தீர்ப்பு:
அநியாயம் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
வசனம்:
"அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாராவது... விபசாரக்காரராவது... தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை." (1 கொரிந்தியர் 6:9-10)
இப்படிப்பட்ட ஊழியர்களிடம் இருந்து சபையார் விழிப்புடனும், ஜெபத்துடனும் விலகி இருப்பதே பாதுகாப்பானது. என பரிசுத்த வேதாகமம் நமக்கு அறிவுறுத்துகிறது. தொடர்ந்து வேத வசனங்களை கடைப்பிடிப்போம் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென். கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா தொடர்புக்கு 9841711591.
Comments