Posts

Showing posts with the label மகளை இழந்த ஒரு தகப்பனின் ஒப்பாரி.

மகளை இழந்த ஒரு தகப்பனின் ஒப்பாரி.

Image
மகள்களை  இழந்த தகப்பன்மார்களே வாருங்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைப்போம்.... இந்த வலி எனக்கு புதிதும் இதயத்தை குத்தும் கூர்மையான அம்புமாக இருக்கிறது....... விழுந்தவனுக்கும் இழந்தவனுக்கும் இளைப்பாறுதல் கொடுக்கும் எம்பெருமான் எனக்கு இளைப்பாறுதல் கொடுப்பாரா... ஊழியங்களை தவிர ஒன்றுமே தெரியாத அப்பாவி அப்பாவை விட்டு..... எங்கே போனாய் மகளே.... வீட்டில் உன் நினைவுகள் சபையில் உன் நினைவுகள் ரயில் நிலையத்தில் உன் நினைவுகள்... விமான நிலையத்தில் உன் நினைவுகள்.... சாப்பிடும் போதும் உன் நினைவுகள்..... எங்கேயும் எப்போதும் உன் நினைவுகளே.... நினைவுகளே நினைவுகளே உங்களுக்கு சாவு வராமல் என் பிள்ளைக்கு வந்தது என்ன? அழுவதற்கு பெலன் இல்லையம்மா என் தங்கமே.... உன்னை இழந்த இந்த பாவி ஆறுதல் இல்லாமல் அலைகிறேன் என் செல்லமே.... திடீரென நீ வந்திடுவாயா என்று பால்கனியில் நின்று பார்க்கிறேன்... மகள் வந்து விட்டாள் என்று ஆசையாக கதவை திறக்கும் நான் படபடப்புடன் திறக்கிறேன்..... என்னை நீ தானே அடக்கம் செய்யனும்.. அது தானே இறை நீதி...... உன்னை அடக்கம் செய்யும் இந்த கொடிய தண்டனை திடீரென விழுந்துவிட்டதே..... பேச முடி...