ஏழு திருச்சபைகளுக்கும்
ஏழு திருச்சபைகளுக்கும் கிறிஸ்துவின் செய்தி
(வெளி 1:19-20 ல்)
“நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது; என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்து விளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்;
நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்."
மேற்கு ஆசியா மைனரிலிருந்த ஏழு சபைகளுக்குக் கிறிஸ்து கொடுத்த செய்தி (வெளி 1:4) இக்காலத்திலுள்ள சபைகளுக்கும், விசுவாசிகளுக்கும் உரிய போதனைகள், எச்சரிக்கைகள், உபதேசங்கள் ஆகியவற்றைக் கொடுக்கும் நோக்கங் கொண்டுள்ளன. (2:7,11,17,29, 3:6,13,22), சபைகளுக்கான செய்திகளின் மதிப்பீடுகள் பின்வருமாறு:
1) தமது சபைகளில் இயேசு கிறிஸ்து எவற்றை விரும்புகின்றார் என்றும் எவற்றை வெறுத்து, கண்டிக்கிறார் என்பதையும் பற்றிய வெளிப்படுத்தல் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
2)
அ) கீழ்ப்படியாமை, ஆவிக்குரிய வீழ்ச்சி இவற்றின் முடிவு,
ஆ) ஆவிக்குரிய கவனம், கிறிஸ்துவுக்கு உண்மை இவற்றின் பலாபலன் ஆகியவற்றைக் குறித்து கிறிஸ்துவின் தெளிவான உபதேசம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
3) ஒரு சபையோ, தனி நபரோ தேவனுக்கு முன்பாகத் தமது ஆவிக்குரிய நிலையைச் சீர்தூக்கிப் பார்க்கும் முறை இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
4) சபையையும், தனிப்பட்ட மக்களையும் பிசாசு எதிர்க்கும் முறை விவரிக்கப்பட்டுள்ளது. (நியா 3:7)
கேள்வி, பதில் வடிவத்தில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இக்கட்டுரையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
1) கிறிஸ்து எதைப் புகழுகிறார்? பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளாத சபையைக் கிறிஸ்து புகழுகிறார்.
(வெளி 2:2),
கிறிஸ்தவ தலைவர்களின் வாழ்வு, உபதேசம், உரிமை இவற்றைப் பரிசோதித்தறியும் சபைகளைப் புகழுகிறார். (2:2), விசுவாசம், அன்பு, சாட்சி, ஊழியம், கிறிஸ்துவுக்காய் பாடு சகித்தல் இவற்றில் நிலைத்து நிற்கும் சபைகளைப் புகழுகிறார். (2:3,10,13,19,26)
தேவன் வெறுக்கும் சபையைத் தானும் வெறுப்பவர்களை (2:6) பாவம். பிசாசு, தெய்வபயமற்ற உலகம் இவற்றை மேற்கொள்ளுபவர்களை (2:7,11,17,26, 3:5; 12,21);
சபையிலும் உலகிலும் உள்ள ஒழுக்கக்கேடுகளை ஒத்துக் கொள்ளாத சபைகளை (2:24; 3:4) தேவ வார்த்தைகளைக் கைக்கொள்பவர்களைக் (3:9,10)
கிறிஸ்து புகழுகிறார்.
2) தமக்கும், தமது வார்த்தைகளுக்கும் உண்மையாய் இருப்பவர்களுக்கு கிறிஸ்து எப்படி பிரதிபலன் அளிக்கிறார்?
அ) உலக முழுவதும் சோதனைக்காலம் வரும்போது அவர்களை விடுவிக்கிறார். (3,10)
ஆ) அவர்களுக்குத் தமது அன்பு, பிரசன்னம், ஐக்கியம் இவற்றைத் தருகிறார். (3:20) தேவனுடைய நித்திய ஜீவனை அவர்களுக்கு அளிக்கிறார். (வெளி 2:11,17,26, 3:5,12; 21:7).
3) கிறிஸ்து கண்டிப்பவை யாவை? தம்மோடும், பிதாவோடும் தனிப்பட்ட உறவு கொள்ளாத சபையைக் கிறிஸ்து கண்டிக்கிறார்.
(வெளி 2:4) வேதத்தின் விசுவாசத்திலிருந்து விலகி, ஒழுக்கமற்ற சபைத் தலைவர்கள், போதகர்கள், சபைமக்கள் இவர்களுடன் ஒத்துப் போகிறவர்களைக் கண்டிக்கிறார். (2:14-15.20) ஆவிக்குரிய மரணமடைந்தவர்களையும் (3:1), வெதுவெதுப்பானவர்களையும் (3:15-16) வெளிப்புறமான வெற்றிகளையும் செல்வத்தையும் பெரிதுபடுத்தி உண்மையான ஆவிக்குரிய நிலையை விட்டுவிடுபவர்களையும் (3:17) அவர் கண்டிக்கிறார். அதாவது, தூய்மை, நீதி, ஆவிக்குரிய ஞானம் இவற்றை விட்டு விடுகிறவர்களைக் கண்டிக்கிறார். (3:18).
4) ஆவியில் விழுந்துபோய் ஒழுக்கக்கேடுகளில் அமிழ்ந்த சபையைக் கிறிஸ்து எப்படி தண்டிக்கிறார்?
அ) தேவனுடைய இராஜ்யத்தில் அவர்களுக்கிருக்கும் இடத்திலிருந்து அவர்களைப் பிடுங்குவதின் மூலமும் (வெளி 2:5; 3:16)
ஆ) தேவ பிரசன்னம், பரிசுத்தாவியின் உண்மையான வல்லமை, தேவனுடைய மீட்பின் செய்திகள், சாத்தானின் அழிக்கும் வல்லமையினின்று பாதுகாப்பு போன்றவற்றை இழக்கச் செய்கிறார். (வெளி 2:5,16, 22-23, 3:4,16; மத் 13)
இ) சபைத் தலைவர்களை நியாயத்தீர்ப்பின் கீழ் கொண்டுவருவதின் மூலமும்
(வெளி 2:20-23) கிறிஸ்து சபைகளைத் தண்டிக்கிறார்.
5) ஆவிக்குரிய மந்தநிலை, வீழ்ச்சி, துர் உபதேசம் இவற்றைக் குறித்து கிறிஸ்துவின் செய்தி கூறுவதென்ன?
அ) துர் உபதேசங்களை ஏற்றுக் கொள்ளுதல், தீமையைப் பின்பற்றுதல், தேவனுக்கு எதிரான பொருட்களை நேசித்தல் இவை அனைத்தும் சபைகளில் பொதுவாக உருவாகும் என ஏழுசபைகளுக்கெழுதப்பட்ட கடிதங்கள் கூறுகின்றன.
(கலா 5:17 )
ஆ) இவை மட்டுமின்றி சபைகளில் விசுவாசத்தை மறுதலிக்கிற, தீய, உண்மையற்ற மக்களும் இருப்பதைக் காண்கிறோம்.
(வெளி 2:2,14-15,20) எனவே இன்றைய சபைகளின் நிலையை ஆவிக்குரிய தகுதியாகவும். உண்மைக்கும், உபதேசத்துக்கும் எடுத்துக்காட்டாகவும் கொள்ளுதல் இயலாது. உண்மையையும், பொய்யையும் நிர்ணயிப்பதற்கு இயேசுவும், அவரது சீஷர்களும் அறிவித்த நற்செய்தியே அடிப்படைத் தகுதியாகும்.
6) ஆவிக்குரிய வீழ்ச்சியையும், கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பையும் சபை எப்படி தவிர்க்கலாம்?
இந்தக் கடிதங்கள் பல வழிகளைக் கூறுகின்றன.
அ) ஆவியானவர் சபைகளுக்குச் சொல்வதை சபைகள் முதலாவது கேட்க வேண்டும்.
(வெளி 2:5-7,16-17,21) கிறிஸ்துவின் வார்த்தைகள் சபைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்
(வெளி 1:1-5) ஏனெனில் பரிசுத்த ஆவியின் மூலமாக புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர்களுக்குக் கொடுக்கப்பட்டதே வார்த்தை மூலமாகவே சபை தனது விசுவாசத்தையும், செயலையும் வரைமுறைப்படுத்தி ஆவிக்குரிய வாழ்வைப் புதுப்பிக்க முடியும், (2:7,11,17,29)
ஆ) சபை தேவனுக்கு முன்பாகத் தங்களது ஆவிக்குரிய நிலையைச் சோதித்து, உலகம், ஒழுக்கக்கேடு இவற்றில் அதன் அங்கத்தினர்கள். இணைந்திருப்பின் அதிலிருந்து சரியாக்கப்படவேண்டும். (வெளி 2:4,14-15,20; 3:1-2, 14-17)
உ.) ஒரு சனபயிலாவது, ஒரு குழுவிலாவது உண்மையான மனந்திரும்புதல், ஆதியிலிருந்த அன்பு, உண்மை, பரிசுத்தம், கிறிஸ்துவின் வல்லமை, வேத வெளிப்பாடு இவற்றுக்குத் திரும்பவேண்டும் என்ற ஆவல் உருவாகும்போதுதான் ஆவிக்குரிய வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்படும். (2:5-7,16-17; 3:1-3; 15-22).
தொடர்ந்து வேதத்தை வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
தொடர்புக்கு
9841711591
Comments