இவரை காதலித்தால் சுகமாய் வாழலாம்.
இயேசு கிறிஸ்துவை உண்மையாக நேசிக்கிறவர்களுக்கு வேதாகமம் அநேக ஆசீர்வாதங்களை வாக்குறுதியளிக்கிறது. அவற்றில் முக்கியமான சில ஆசீர்வாதங்கள் வசன ஆதாரங்களுடன் :
பிதாவின் அன்பு:
இயேசுவை நேசிப்பவரை பிதாவாகிய தேவன் நேசிப்பார்.
(யோவான் 14:21) "என்னை நேசிக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்".
தேவன் அவரோடு வாசம் செய்தல்:
தேவன் நம் இதயத்தில் குடிகொள்வார். (யோவான் 14:23) "நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்".
நித்திய ஜீவன்:
அழிவில்லாத பரலோக வாழ்வு கிடைக்கும். (யாக்கோபு 1:12,) "கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்".
அனைத்தும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்:
வாழ்வில் ஏற்படும் சோதனைகளும் நன்மைக்கே முடியும். (ரோமர் 8:28) "தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்".
கற்பனை செய்ய முடியாத ஆசீர்வாதங்கள்:
மனித மனம் எண்ணிப்பார்க்க முடியாத ஆச்சரியங்களை தேவன் வைத்திருக்கிறார்.
(1 கொரி 2:9)
"தேவன் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை..."
பாவ மன்னிப்பு:
கிறிஸ்துவை நேசிக்கும்போது அவர் நமது பாவங்களை மன்னிக்கிறார். (லூக்கா 7:47)
"இவள் மிகுதியாய் அன்புகூர்ந்தபடியால் இவளுடைய அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது".
பரலோக சுதந்தரம்:
நாம் தேவனுடைய ராஜ்யத்திற்கு வாரிசுகளாகிறோம். (யாக்கோபு 2:5)
"தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாக..."
ஜெபத்திற்குப் பதில்:
நாம் எதைக் கேட்டாலும் அவர் செய்வார்.
(யோவான் 15:7) "நீங்கள் எதைக் கேட்டுக்கொள்வீர்களோ அது உங்களுக்குச் செய்யப்படும்".
சமாதானம்:
உலகத்தால் தர முடியாத தெய்வீக சமாதானம் கிடைக்கும். (யோவான் 14:27) "என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்".
பாதுகாப்பு மற்றும் மீட்பு:
ஆபத்து காலங்களில் அவர் நம்மை விடுவிப்பார்.
(சங்கீதம் 91:14) "அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்". என்ன வாக்கு தத்தம் செய்கிறது அன்பு.
இயேசு கிறிஸ்துவை காதலித்து அவருக்கு ஏற்ற மணவாட்டியாக வாழ்வோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
WhatsApp 9841 711 591.
Comments