கள்ள ஊழியர்களிடம் ஐக்கியம் கொள்ளும் ஊழியர்கள்.

போதகர் கூடுகை மூலமாக ஒட்டுமொத்த திருச்சபைகளும் இணைந்து ஆடுகளை ஓநாயினிடத்தில் ஒப்படைத்தல். 
பணத்திற்காக, பெயர், புகழுக்காக,

(வருமான வரி ரைடு மூலமாக 120 கோடி மற்றும் 4 1/2 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு பிரபல ஊழியர்களுடன் கூட்டணி அமைக்கும் ஊழியர்கள் ஐக்கியம்.)

திருச்சபை என்பது தேவனுடைய இரத்தத்தால் சம்பாதிக்கப்பட்டது. மந்தையைத் தவறாக வழிநடத்தி, சுய லாபத்திற்காகப் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு வேதம் எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்குகிறது. அதற்கான சில வேத ஆலோசனைகள் : 

மந்தையை மேய்ப்பதே பொறுப்பு, வியாபாரம் அல்ல:
சபை மக்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள். அவர்களை லாபத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது."உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை மேய்த்து... கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும்; அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாகமாயும்..." 
(1 பேதுரு 5:2)

மந்தை சிதறடிக்கப்படுவதற்கு நீங்களே பொறுப்பு:
தவறான போதகர்களிடம் மக்களை விடுவது அவர்களை அழிவுக்கு நேராக நடத்துவதாகும்."என் மேய்ச்சலின் ஆடுகளை அழித்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ!" 
(எரேமியா 23:1)

சுயநலத்திற்காக மக்களைப் பயன்படுத்தாதீர்கள்:
மக்களின் ஆவிக்குரிய வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், அவர்களை அடமானம் வைப்பது போன்ற செயல் கண்டிக்கத்தக்கது.
"மேய்ப்பர்கள் தங்களைத்தாங்களே மேய்க்கலாமா? மந்தையை அல்லவோ மேய்க்கவேண்டும்?" 
(எசேக்கி 34:2)

கள்ளத் தீர்க்கதரிசிகளை அடையாளம் காணுங்கள்:
ஊழியர்கள் விழிப்புடன் இருந்து, மக்களை ஓநாய்களிடமிருந்து (கள்ள ஊழியர்கள்) பாதுகாக்க வேண்டும்."கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்." 
(மத்தேயு 7:15)

மக்களைக் குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும்:
ஒவ்வொரு ஆத்துமாவைக் குறித்தும் தேவன் உங்களிடம் கணக்குக் கேட்பார்."அவர்கள் கணக்கு ஒப்புவிக்கிறவர்களாய், உங்கள் ஆத்துமாக்களுக்காக விழித்திருக்கிறவர்களானபடியால்..." 
(எபிரெயர் 13:17)

பொருளாசைக்கு விலகி இருங்கள்:
பணம் அல்லது வசதிக்காக விசுவாசிகளை தவறான கைகளில் ஒப்படைப்பது பெரிய பாவம்."பொருளாசையுள்ளவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்வார்கள்..." 
(2 பேதுரு 2:3)

மந்தையை விட்டு ஓடிப்போகும் கூலிக்காரனாக இருக்காதீர்கள்:
ஆபத்து வரும்போது மக்களைக் கள்ள போதகர்களிடம் விட்டுவிட்டு விலகிச் செல்வது உண்மையான ஊழியமல்ல."மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலிக்காரன் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்." 
(யோவான் 10:12)

மக்களுக்கு விவேகத்தைப் போதியுங்கள்:
மக்களைக் கள்ள ஊழியர்கள் வஞ்சிக்காமல் இருக்க, அவர்களுக்குச் சத்தியத்தைப் போதிக்க வேண்டும்."என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்..." (ஓசியா 4:6)

தேவனுடைய இரத்தத்தால் வாங்கப்பட்ட சபை என்பதை மறக்காதீர்கள்:
சபை உங்கள் சொத்து அல்ல, அது கிறிஸ்துவினுடையது."தேவன் தம்முடைய சுய இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு..." 
(அப்போ 20:28)

மனந்திரும்புதலே ஒரே வழி:
மக்களைக் கருவியாகப் பயன்படுத்தியிருந்தால், தேவனிடம் மன்னிப்பு கேளுங்கள்."உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்... நீ மனந்திரும்பாவிட்டால், நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து..." 
(வெளிப் 2:5) 
இந்த ஆலோசனைகள் ஒரு ஊழியக்காரன் மந்தையின் மேல் கொண்டிருக்க வேண்டிய உண்மையான அன்பையும் பொறுப்பையும் வலியுறுத்துகின்றன.
பரிசுத்த ஆவியானவர் வேதத்தின் மூலமாக நமக்கு நல்ல ஆலோசனைகளை தருகிறார். தொடர்ந்து வேதத்தை வாசியுங்கள் கடைபிடியுங்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா. 
WhatsApp 9841 711 591.

Comments

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை