விசுவாசிகளின் நியாயத்தீர்ப்பு
விசுவாசிகளின் நியாயத் தீர்ப்பு:
2 கொரி 5:10 "ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது, தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்'
விசுவாசிகள் ஒரு நாளில் "கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக" நின்று கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று வேதாகமம் போதிக்கிறது. விசுவாசிகளின் நியாயத் தீர்ப்பைப் பொறுத்த மட்டில் பின்வரும் விஷயங்களை மனதிற் கொள்ளவேண்டும்.
1) எல்லா கிறிஸ்தவர்களும் நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டவர்கள். அதற்கு யாரும் விதிவிலக்கு கிடையாது.
(ரோம 14:12; 1 கொரி 3:12-15; 2 கொரி 5:10: பிரச 12:14).
2) கிறிஸ்து தம் சபைக்காகத் திரும்பி வரும்போது, இந்த நியாயத்தீர்ப்பு நடைபெறும்.
(யோவா 14:3; 1 தெச.4:14-17).
3) கிறிஸ்துவே நியாயாதிபதி (யோவா. 5:22; 2 தீமோ 4:8).
4) விசுவாசிகளின் நியாயத்தீர்ப்பு பயபக்தியுள்ளதும், சீரிய முறையிலும் இருக்கும் என வேதாகமம் கூறுகிறது. விசேஷமாக அதில் பழுது அல்லது “நஷ்டம்” இருக்க வாய்ப்புகள்
(1 கொரி 3:15, 2 யோவா 8), "அவர் வருகையில்” அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகக்கூடிய வாய்ப்புகள்
(1 யோவா 228), ஒருவன் வாழ்க்கை முழுவதும் செய்த வேலை அக்கினியால் வெந்து போகக்கூடிய வாய்ப்புகள் ஆகியவை உள்ளன.
(1 கொரி 3:13-15) எப்படியானாலும் ஒரு விசுவாசியின் நியாயத்தீர்ப்பு, தேவனுடைய ஆக்கினைத் தீர்ப்பைக் கொண்டுவரும் தீர்ப்பு அல்ல.
5) ஒவ்வொரு காரியமும் வெளியே கொண்டுவரப்படும். "வெளிப்படவேண்டும்" என்ற வார்த்தை (கிரே ஃபாரூ, 2 கொரி 5:10) வெளிப்படையாகவோ அல்லது மற்றவர்கள் முன்பாகவோ காணப்படவேண்டும் என்று பொருள்படும். தேவன்.
(அ) நம் அந்தரங்க செய்கைகள் (மாற் 4:22, ரோப 2:16),
ஆ) நம் நடத்தை (ரோம 2:5-11) இ) நம் வார்த்தைகள் (மத் 12;36-37),
ஈ) நம் நற்கிரியைகள் (எபே. 6:8),
உ) நம் மனப்பான்மைகள்
(மத் 5:22),
ஊ) நம் உள்நோக்கங்கள்
(1 கொரி 4:5),
எ) அன்பு செலுத்துவதில் நம் குறைபாடுகள் (கொலோ 3:18-4:1),
ஏ) நம் வேலையும், ஊழியமும் (1 கொரி 3:13) ஆகியவற்றின் உண்மை நிலையைப் பரிசோதித்து அவற்றை வெளிப்படையாகக் காண்பிப்பார்.
6) மொத்தத்தில், விசுவாசிகள் தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவர்களாய் இருந்தார்களா, உண்மையற்றவர்களாய் இருந்தார்களா என்பதைக் குறித்தும் (மத் 25:21,23; 1கொரி 4:2-5), அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபை, தருணம், அவர்களுக்குக் கிடைத்த அறிவு ஆகியவற்றின் வெளிச்சத்தில் அவர்களுடைய செய்கைகளைக் குறித்தும் கணக்குக் கொடுக்க வேண்டும். (லூக் 12:48; யோவா 5:24; ரோம 8:1).
7) விசுவாசிகளின் கெட்ட கிரியைகள், அவர்கள் மனந்திரும்பும்போது, நித்திய ஆக்கினையைப் பொறுத்தமட்டில் மன்னிக்கப்படும் (ரோம 8:1) ஆனால் மறுபடியும் திருப்பிக் கொடுக்க வேண்டிய விஷயத்தில் அவர்கள் இன்னும் கணக்குக் கொடுத்தாகவேண்டும். "அநியாயஞ் செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்"
(கொலோ 3:25; பிர 12:;14; 1 கொரி 3:15; 2 கொரி 5:10) விசுவாசிகளின் நல்ல கிரியைகளும், அன்பும், தேவனால் நினைவுகூரப்பட்டு ஏற்ற வெகுமதி பெறும். (எபி 6:10) ஒருவன் என்னென்ன நன்மைகளைச் செய்கிறானோ, அவற்றிற்கெல்லாம் தேவன் பதிலளிப்பார்."
(எபே 6:8).
8) விசுவாசியின் நியாயத்தீர்ப்பில், முடிவுகள் பலதரப்பட்ட விதமாக இருக்கும். அதில், அவர்களின் சந்தோஷத்தில் இலாபம் அல்லது நஷ்டம் (1 யோவா 2:28) தெய்வீக ஆமோதிப்பு (மத் 25:21) வேலையும் அதிகாரமும் (மத் 25:14-30), பதவி (மத் 5:19; 19:30), வெகுமதி (1கொரி 3:12-14; பிலி 3:14 2 தீமோ 4:8), கனம் (ரோம 2:10; 1 பேது 1:7) ஆகியவை இருக்கும்.
9) கிறிஸ்தவர்களுக்கு வரப்போகிற நியாயத்தீர்ப்பு, அவர்களில் ஆண்டவருக்குப் பயப்படும் பயத்தை முழுமையாக்குகிறது. மேலும் அவர்கள் (2 கொரி 5:11; பிலி 2:12, 1 பேது 1:17) தெளிந்த புத்தியும், சுய கட்டுப்பாடும் உள்ளவர்களாய், விழித்திருந்து ஜெபிக்கவும், (1 பேது 4:5,7), பரிசுத்தமும், தேவபக்தியுமுள்ள நடத்தையோடு வாழவும் (2 பேது 3:11) எல்லாரிடமும் இரக்கமும், அன்பும் காண்பிக்கவும், (மத் 5:7; 2 தீமோ 1:16-18), ஜாக்கிரதை யுள்ளவர்களாய் இருக்கும்படி, அவர்களைத் தூண்டுகிறது.
என்பதை அறிந்து கொள்கிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா
WhatsApp 9841 711 59 1
Comments