பண ஆசையே கள்ள ஊழியர்களின் அடையாளம்.
கள்ள ஊழியர்களின் முதல் அடையாளமே
பண ஆசை.
இந்த கள்ள ஊழியர்களின் அவதாரங்கள் மூன்று: 1)சுவிசேஷகர், 2)அப்போஸ்தலர், 3)தீர்க்கதரிசிகள்
கிறிஸ்தவ சபைகளில் விசுவாசிகளை ஏமாற்றி லாபம் ஈட்டுவதற்காகப் பல்வேறு பொருட்களை
விற்று வருகின்றனர். "அதிசயம்" அல்லது "ஆசீர்வாதம்" தரும் என்ற பெயரில் விற்கப்படும் சில பொதுவான பொருட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
அபிஷேக எண்ணெய் மற்றும் தீர்த்தம்:
"யோர்தான் நதி நீர்" அல்லது "அபிஷேக நீர்" என்ற பெயரில் சாதாரணத் தண்ணீர் மற்றும் "ஒலிவ எண்ணெய்" அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
கைக்குட்டைகள் மற்றும் துணிகள்:
இவை ஜெபிக்கப்பட்டவை என்றும், இவற்றை வைத்திருந்தால் நோய் குணமாகும் என்றும் கூறி விற்கப்படுகின்றன.
ஆன்மீகப் பொருட்கள்:
வளையல்கள் (Bracelets), ஸ்டிக்கர்கள், காலெண்டர்கள், மோதிரங்கள் மற்றும் பேனாக்கள் போன்றவை ஆசீர்வாதத்திற்காக விற்கப்படுகின்றன.
மந்திரப் பொருட்கள் போன்ற பொருட்கள்:
"தாவீதின் திறவுகோல்" (சாவி), "யூதாவின் சிங்க டி-ஷர்ட்கள்", "அதிசயப் பணப் படங்கள்" மற்றும் "அபிஷேகம் செய்யப்பட்ட தலையணைகள்" "செங்கல்கள்" "இஸ்ரவேல் தேசத்து மணல்" ஒரேப் பர்வதத்தின் கற்கள்"
போன்றவை இதில் அடங்கும்.
ஊடகப் பொருட்கள்:
போதகர்களின் பிரசங்கங்கள் அடங்கிய டிவிடிக்கள் (DVDs) மற்றும் புத்தகங்கள், அவற்றைத் தொட்டாலே அதிசயம் நடக்கும் என்ற பிரச்சாரத்துடன் விற்கப்படுகின்றன.ஆசிர்வாத டிவி, ஆசிர்வாத அடுப்பு, ஆசீர்வாதமான ஜெபங்கள், ஆசீர்வாதமான வசனங்கள், ஆசீர்வாதமான வளையல்கள் மற்றும் மோதிரங்கள். விற்பனைக்கு தயாராக இருக்கின்றன.
பேரம் பேசும் ஊழியர்கள்:
பிரசங்கத்திற்கு பிரபல பாடகரையோ, அல்லது பிரபல ஊழியரை பிரசங்கத்திற்கு அழைத்தால் பல ஆயிரங்கள் பேரம் பேசப்படுகிறது.
சபை மக்கள் ஊழியத்திற்காக கொடுக்கிற பணங்கள். அவர்கள் பாடல்களை பாடி அதை வீடியோவாக எடுக்க செலவிடப்படுகிறது. பின்பு அந்த பாடல் youtube மூலமாக பல லட்சங்களை அவருக்கு சம்பாதித்து தருகிறது . அது என்ன செய்கிறார்கள் என்பதை கர்த்தர் அறிவார்.
மக்களின் காணிக்கை பணத்தினால் பிரபல கிறிஸ்தவ ஊழியர்கள்.
பலர் கல்லூரிகள். மற்றும் இன்டர்நேஷனல் ஸ்கூல், மருத்துவமனைகள், சிறுவர் இல்லங்கள், முதியவர் இல்லங்கள், வேலைவாய்ப்பு திட்டங்கள், இப்படி பல செயல்பாடுகள் மூலமாக வருமானத்தை ஈட்டுவது சரிதானா ?
கிறிஸ்துவ பிள்ளைகளுக்கு ஏன் இலவசமாக கொடுக்க முடியவில்லை.
சபைகளில் ஏலம் விடப்படும் ஆசீர்வாத பொருட்கள்:
"ஆசிர்வாத தட்டு" என்ற பெயரில் பல லட்சங்களில் ஏலம் விடப்படுகிறது. 100ரூ அல்லது 50ரூ "உணவு பொருட்களை" 200,300 ரூ. என்று அநியாய விலைக்கு திருச்சபையில் விற்கப்படுகிறது.
உப்பு மற்றும் மணல்:
"பரிசுத்த உப்பு" அல்லது "அதிசய மணல்" போன்றவை வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டுவரும் என விற்கப்படுகின்றன.
விவிலியம் (பைபிள்), . எனவே, ஆன்மீக ஆசீர்வாதங்களை விலைக்கு விற்பது வேதாகமத்திற்குப் புறம்பான செயலாகும். என்பதை அநேக மக்கள் என்ன உணர்ந்து கொள்ளவில்லை.
காரணம் அவர்கள் முந்தின வழிபாட்டில் அவர்கள் செய்தவைகள் ஆகும். கள்ள ஊழியர்கள் இதை அறிந்து இவர்கள் இயேசு கிறிஸ்துவின் பெயரினால் புனித பொருள்கள் என்று தங்கள் வியாபாரத்தை தொடங்கி விட்டார்கள்.
விருதுநகரைச் சார்ந்த ஒரு கள்ள ஊழியர் வருடத்திற்கு 5 கோடி ரூபாய்க்கு ஆசிர்வாத எண்ணெய் விற்று வருகிறார். கோயம்புத்தூரில் ஒருவர் ஆசிர்வாதமான செங்கல், இன்னொருவர் ஜெபித்த கைக்குட்டைகள், தலையணைகள் விற்று ஆண்டுக்கு பல கோடிகளை சம்பாதித்து வருகிறார். சென்னையில் சாவி, பேனா, புனித பயணங்கள், புனித பொருள்கள் எனச் சொல்லி பல கோடிகளை சம்பாதிக்கிறார்கள்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையிலும் இப்படிப்பட்ட வியாபாரங்கள் ஏலங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
சிஎஸ்ஐ சபைகளிலும் இந்த வியாபாரங்கள் பெருகி இருக்கிறது.
இந்த வியாபாரங்கள் பெருகுவதற்கு மிகப்பெரிய காரணம். கிறிஸ்துவை அறிய வேண்டிய பிரகாரம் அநேக மக்கள் அறியவில்லையே என்பதுதான் உண்மை.
தொடர்ந்து வேதத்தை வாசியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
Comments