பல கள்ள தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள்.

பல கள்ள தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள்.
(மத் 24:11)

கடைசி நாட்கள் நெருங்கி வரும்போது, கள்ள தீர்க்கதரிசிகளும், போதகர்களும் உலக மக்கள் மத்தியில் அதிகமாகக் தோன்றிக் கிரியை செய்து கொண்டிருப்பார்கள். 

இக்காலத்தில் கிறிஸ்துவ சமுதாயம் முழுவதும் உலகெங்கும் விசுவாசம் குறைந்த நிலையிலேயே காணப்படும். 

தேவனுடைய வார்த்தைக்கும்,
பரிசுத்த வேதாகமம் கூறும் நீதிக்கும் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள்.

இன்றைக்கு எழுப்புதல் வரும் என்று பேசுகிறவர்கள். 
எழுப்புதலுக்காக ஜெபிக்கிறவர்கள். தயவு செய்து சிந்திக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

1) உறுதியான விசுவாசிகள் கூட வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையுடன் முரண்படுவதாயிருந்தாலும் கூட, அவர்களுக்கு கூறப்படும் புதிய போதனைகளை ஏற்றுக் கொள்வார்கள். 

இந்த நிலை திருச்சபைகளில் பிரிவினைகளை ஏற்படுத்தும். 
(1தீமோ 4:1; 2தீமோ 3:8; 4:3)
இவ்வாறு புரட்டு உபதேசங்களைப்  போதிப்பவர்கள் கூட சபைப் பிரிவுகளில் உயர்ந்த பதவிகளை பிடித்துக் கொள்வார்கள்.

இறையியல் பள்ளிகளிலும் இடம் பிடித்துக் கொள்வார்கள். (மத் 7:22) இவர்களுடைய கிரியைனாலும் போதனைகளாலும், திருச்சபையில் உள்ள பலரை வஞ்சித்து தவறான வழியில் திருப்பி விட்டு விடுவார்கள். 
(கலா 1:9; 2தீமோ 4:3; 2பேது 3:3,4)

2) உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் மந்திரம், மாயஜாலம், குறி சொல்லுதல், வான சாஸ்திரம்,
மாந்திரீகம், பில்லி சூனியம், பூஜை செய்யப்பட்ட வினோதமான பொருட்களை வாங்குவதும், சாத்தானின் கொள்கைகள் ஆகியவற்றைச் செய்வதில் ஈடுபட்டிருப்பார்கள்.
அசுத்த ஆவிகள், பிசாசு, ஆகியவை பன்மடங்காக எங்கும் பெருகிவிடும். 
(1தீமோ 4:1)

3) இத்தகைய தீய சக்திகளை எதிர்த்து, நம்மை காத்துக் கொள்ள கிறிஸ்துவின் மேல் அளவற்ற அன்பு, நிலையான, உறுதியான விசுவாசம், ஆகியவற்றுடன் அவருடைய வார்த்தையின் சர்வ அதிகாரத்துக்கு நம்மை முழுவதும் அர்ப்பணித்தல் 
(மத் 24:4,11,13,25;) அவருடைய வார்த்தையைப் பற்றிய தெளிவான அறிவு (1தீமோ 4:16) ஆகியவை மூலம் வஞ்சகங்களிலிருந்து காக்கப்படலாம். ஆமென்.

தொடர்ந்து பரிசுத்த ஆவியின் நிறைவுடன் வாசியுங்கள் அப்போதுதான் நீங்கள் தெளிவான கருத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் ஒரு முறைக்கு இருமுறை வாசியுங்கள் நிச்சயமாக உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை உயர்வடையும்.

கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா 
98 41 711 591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை