கார் பங்களா தான் ஆசீர்வாதமா ?

ஆசிர்வாதம் என்றாலே வீடு, பங்களா தோட்டம், விலை உயர்ந்த கார்கள், வங்கிய கணக்கில் ஏராளமான பணம். பீரோவில் கிலோ கணக்கில் தங்கம், சொத்து பத்திரங்கள், பல தொழில் துறைகள், அரசியல் பலம் , தனிப்பட்ட ஆள் பலம் பெயர் புகழ் என அநேகர் நினைக்கிறார்கள்.
நமது தேசத்தில் ஆண்டவரை அறியாத நம்பர் 1, பணக்காரர்களை
(முகேஷ் அம்பானி அதானி) நாம் அறிந்திருக்கிறோம்.

ஆகையால்,
'ஆசீர்வாதம்' என்பது வெறும் பணக்கார வாழ்க்கையை மட்டும் குறிப்பதல்ல, அதேபோல் ஏழ்மை என்பது ஆசீர்வாதக் குறைவும் அல்ல. இது குறித்த விளக்கங்களை காணலாம்:


1. ஆசீர்வாதம் என்பது ஐசுவரியம் மட்டும்தானா?
வேதத்தில் சில இடங்களில் ஆசீர்வாதம் என்பது பொருளுதார வளர்ச்சியைக் குறிக்கிறது, ஆனால் அது மட்டுமே ஆசீர்வாதம் அல்ல.

பொருளாதார ஆசீர்வாதம்:
 "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்" (நீதி 10:22). சிலருக்கு தேவன் பூமியின் செல்வங்களை ஆசீர்வாதமாக அளிக்கிறார்.
ஆசீர்வாதங்கள் பெருகும் போது ஏழைகளுக்கு இரங்க வேண்டும் அது தேவனுக்கே நிதி கொடுப்பதாகும்.(நீதி 19:17)
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.(2 கொரி 9:9)
பவுலின் ஆலோசனை:
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும்,
நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்க வேண்டுமென்று சொல்லுகிறார்.
(1 தீமோ 6:17-18)

ஆவிக்குரிய ஆசீர்வாதம்:
 உண்மையான ஆசீர்வாதம் என்பது தேவனுடனான உறவு, சமாதானம் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சியாகும். "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது" 
(மத்தேயு 5:3). 
பிறருக்கு ஆசீர்வாதமாக இருத்தல்: 
ஆபிரகாமின் ஆசீர்வாதம்
(ஆதி 12:2-3) போல, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதே உண்மையான ஆசீர்வாதம்.

2. ஏழ்மையாய் இருப்பது ஆசீர்வாதக் குறைவா?
வேதாகமம் ஏழ்மையை ஒருபோதும் ஆசீர்வாதக் குறைவாகவோ அல்லது சாபமாகவோ சித்தரிக்கவில்லை. 
இயேசு கிறிஸ்து நம்மை அந்த வறுமை என்ற சாபத்திலிருந்து மீட்டுள்ளார்
(கலா 3:13-14). பரிசுத்த வேதம் வறுமையை ஒரு சாபமாகக் கருதுவதை விட, ஏழைகளுக்கு உதவுவதை ஒரு கடமையாகவும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதையும் போதிக்கிறது. 

ஏழைகளின் பாக்கியம்: 
இயேசு கிறிஸ்து ஏழைகளை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று அழைத்தார். "ஏழைகளே, நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது"
( லூக்கா 6:20).

விசுவாசத்தில் ஐசுவரியவான்கள்: "உலகத்தின் ஏழைகளை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும்... தேவன் தெரிந்துகொள்ளவில்லையா?" 
(யாக்கோபு 2:5).
லோக ரீதியாக ஏழையாக இருப்பவர்கள் தேவனுடைய பார்வையில் விசுவாசத்தில் பெரும் செல்வந்தர்களாக இருக்கலாம்.

ஏழ்மைக்கான காரணங்கள்: 
ஏழ்மை என்பது ஆசீர்வாதக் குறைவல்ல, மாறாக அது சமூக அநீதியாலோ அல்லது ஒருவருடைய வாழ்க்கையில் தேவன் தரும் சோதனையாகவோ இருக்கலாம்.
  
சுருக்கமான விளக்கம்:
ஐசுவரியம்: 
இது தேவன் கொடுத்த ஒரு பொறுப்பு (Stewardship). இதை பிறருக்கு உதவ பயன்படுத்த வேண்டும்
பணக்கார வாலிபனுக்கு இயேசு கிறிஸ்து சொன்னது.
போய் உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்; அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வம் பெற்றிருப்பீர்; பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார்.
இந்தச் சம்பவம் மத்தேயு 19:16-22, மாற்கு 10:17-22 மற்றும் லூக்கா 18:18-23 ஆகிய விவிலியத்தின்  நற்செய்தி பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஏழ்மை: 
இது ஆசீர்வாதக் குறைவல்ல. தேவன் ஏழைகளுக்குத் துணையாயிருக்கிறார் (நீதி 19:17). 
எனவே, ஒருவருடைய வங்கிக் கணக்கை வைத்து அவருடைய ஆசீர்வாதத்தை அளவிட முடியாது. தேவனுடைய சமாதானமும், அவருடைய சித்தத்தைச் செய்வதும், பரலோக பொக்கிஷங்களைச் சேர்ப்பதுமே உண்மையான ஆசீர்வாதம். 
மேலும் அறிந்து கொள்ள வேதத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை