அவருடைய விருப்பத்தின்படி
நம்முடைய விருப்பத்தின்படி அல்ல...
தேவனுடைய இருதயத்தை அறிந்து அவருடைய விருப்பத்தின்படி செய்வது தான் ஊழியம்.
ஏனென்றால் மனிதனுடைய நினைவுகள் பொல்லாததாய் இருக்கிறது. (ஆதி 6:6)
அவர் எல்லாருடைய நினைவுகளின் தோற்றத்தை அறிந்திருந்தபடியால் யாரையும் அவர் நம்புவதில்லை.
(யோவா 2:24,25)
அப்படியானால் அவர் யாரை நம்புவார் ?
பவுல் அப்போஸ்தலன் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது இவ்வாறு சொல்லுகிறார்
1 தீமோத்தேயு 1:12
என்னைப் பலப்படுத்துகிற *நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.*
தேவனுடைய இருதயத்தை அறிந்து அவருடைய சித்தத்தை உண்மையாக செய்யும்போது அவர் நம்மை நம்புகிறார்.(லூக்கா 19:17,1கொரி 4:2)
*தேவனுடைய இருதயத்தை அறிந்தும் முழு மனதோடு செய்யாமல் பாதி மனதோடு செய்தால்....*
கர்த்தர் யெகூவை நோக்கி: *என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.*
ஆனால் யெகூ
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை;
(2 இராஜா 10:30,31)
இன்றைக்கும் சிலர் ஆரம்பகால ஊழியத்தில் மிகவும் உண்மையாக உத்தமமாக கர்த்தருடைய சித்தத்தை செய்து வந்தவர்கள், இன்று இந்த யெகூவைப் போல கர்த்தருடைய சித்தத்தின்படி செய்யாமல் அதைக் குறித்த கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள்.
ஆனால் உண்மை ஊழியன் தன்னுடைய ஜீவன் முடியும் வரை தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாகவே வாழ்வான். அதுதான் தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
தாவீது ராஜா சொல்லும் பொழுது
(1 நாளாகமம் 17:19ல்)
*கர்த்தாவே, உமது அடியானின் நிமித்தமும், "உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியப்பண்ணும்படிக்கு, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர்".*
இந்த 17 ஆம் அதிகாரத்தை வாசிக்கும் போது தாவீதை தேவன் எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு கொண்டு வந்தார் என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது தாவீதுடைய வாழ்க்கையில் தேவன் பெரிய காரியத்தை செய்தார் ஆதலால் தேவனுடைய இருதயத்தில் இருக்கிற பெரிய காரியத்தை தாவீது அறிந்து கொண்டான்.
அதைத்தான் ஒரு மிஷனரி இவ்வாறு சொல்லுகிறார்.
தேவனிடத்தில் பெரிய காரியத்தை எதிர்பாருங்கள், அதே வேளையில் தேவனுக்காக பெரிய காரியத்தை செய்யுங்கள் என்றார்.
தாவீது கர்த்தருக்கு சித்தமானவைகளை எல்லாம் செய்தான், தேவன் அவனைப் பார்த்து என்னுடைய இருதயத்திற்கு ஏற்றவன் என்றார்.
அதே தேவன் இன்றைக்கு நம்மையும் பார்த்து இவர்கள் என்னுடைய இருதயத்திற்கு ஏற்றவர்கள் என்று சொல்ல வேண்டும்.
*தாவீதுக்கு பிறகு தேவன் சாலமோனுக்கு சொன்ன அறிவுரைகள்.*
உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால்,
உன் இராஜ்ஜியம் நிலைத்து நிற்க்கும்.
வழி விலகி போனால்
அந்நியர்களுக்கு
பழமொழியாக மாறிப் போவீர்கள்
(2 நாளா 7:16-20)
இன்றைக்கும் தேவன் நம்மை அறிவுறுத்துகிறார். இந்த கடைசி காலத்தில் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு நாம்ஆயத்தப்படவேண்டும்.
யோபு புத்தகத்தில் இவ்வாறு வாசிக்கிறோம்.
மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,
காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
(யோபு 7:17-18)
பூமியின்மேல் மனுஷனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? பூச்சக்கரம் முழுதையும் ஒழுங்குப்படுத்தினவர் யார்?
அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.
அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான்.
(யோபு 34:13-15)
கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
(சங்கீதம் 33:11)
தொடர்ந்து கர்த்தருடைய இருதயத்தின் நினைவுகளை அறிந்து நாம் செயல்படுவோம். கர்த்தருடைய ஆலோசனையை கேட்டு கீழ்படிவோம். கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments