தேவ ஊழியர்கள் கவனத்தில்
தேவ ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:
1) தரிசனத்தை நோக்கி (பயணம்) செய்யாமலிருப்பது,
1இரா 19:8; தவறான பாதையில் பயணம், 1இராஜா 19:15 ல் பாதையை திருத்திய தேவன் ("திரும்பி")
2) தரிசனத்திற்காக நேரத்தை, பணத்தை, ஆஸ்திகளை செலவழிக்க வேண்டும்.
2கொரி 12:15: மாற் 2:4ல் மேற்கூறையை பிரிக்கவும் திரும்பவும் அதை சரி செய்யவும் செலவு செய்யப்பட்டன. அப் 9:36 ல்
தொற்காள்(அ) தபீத்தாள் என்ற பெண் சீஷி செலவு செய்தால்.அப் 10 ஆம் அதிகாரத்தில் ஒரு கொர்நேலியு
மிகுந்த தர்மங்களை செய்தான்.
(அன்பு தேவ ஊழியர்களே பாட்டு பாடுவதும் ஆட்டம் ஆடுவதும் தரிசனமா ?
பாடல் தரிசனம் அல்ல ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் சங்கீதம் பாடலாம் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால்,
ஒரு பாட்டுக்கு பத்து லட்சம் வரை செலவு செய்கிறார்கள்.
இந்தியா நாட்டிலிருந்து அரபு நாட்டுக்கு போகிறான் வீடியோ எடுக்க
இது தரிசனமா ?
உன் தரிசனம் என்ன ?
பதில் : மத் 28:19,20;
யூதா 1:22;நீதி24:11;
3) யாக்கோபு 3:2 ன்படி சொல் சொல் தவறாதவர்களாக இருக்கவேண்டும்.அதே போல
சங்கீதம் 15:4 ன்படி தனக்கு நஷ்டம் வந்தாலும் சொன்னதை செய்து முடிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
4) ஒருவன் போதித்தாலும்,
தீர்க்கதரிசனம் உரைத்தாலும், விசுவாச அறிக்கை செய்தாலும், ஜெபித்தாலும், துதித்தாலும், கொடுத்தாலும், அது இயேசு கிறிஸ்து நமக்கு கற்றுக் கொடுத்த மாதிரியின் படியே இருப்பதாக அல்லது வேத வாக்கியங்களின்படி இருப்பதாக.
1பேது 4:11;லூக் 24:44;
ரோம 12:6;1பேது 2:21;5:3,.
5) சபையை விசாரிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்,
உடன் ஊழியர்கள் மேல் அல்லது சபை விசுவாசிகளை உண்மையான கரிசனையுடன் விசாரிக்க வேண்டும்.
மத் 25:36,43;யோவா 4:52;பிலி 2:20;1தீமோ 5:8;.
6) தேவன் நமக்கு கொடுத்த ஊழியப் பொறுப்பை நமது போர்டுக்காக ஒருபோதும் செய்யக் கூடாது.
திருச்சபைகளுக்கு பல பெயர்கள் ஒவ்வொரு தனி நபர்களால் பெயர் சூடப்பட்டு அது பெயர் பலகைகளாக ஆக்கப்பட்டு அதற்கு ஒரு லோகோ கொடுக்கப்பட்டு அந்த பெயருக்காக அநேக ஸ்தாபனங்கள் பயங்கரமாக உழைத்து களைத்து நிற்கின்றன. சில உழைத்து உழைத்து பல கோடியில் கட்டடங்களை கட்டி நாங்கள்தான் உண்மையாக உழைத்து இவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தை சுதந்திரத்து விட்டோம் என்று பாபேல் கோபுரத்தை கட்டி விட்டோம் என்று அறியாமல் மார் தட்டிக் கொள்கிறார்கள்.
மக்கள் மத்தியில் இயேசு கிறிஸ்து என்பவரை விட
ஒரு ஸ்தாபனத்தின் பெயர் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.
ஒருவர் தனது பெயர் பலகையை சுட்டிக் காட்டுகிறார் இன்னோருவர் தனது என்கிறார், இன்னொருவர் என்னுடையது என்கிறார், இப்படி ஒவ்வொரு திருச்சபைகளுக்கும் போட்டிகளும் பெருமையான பேச்சுக்களும் ஒவ்வொரு சபை போதகரும் பிரபல சில சுவிசேஷகர்ளும் , நித்தியானந்தா, சாய்பாபா, ராகவேந்திரா, மேல்மருவத்தூர் அம்மா, போன்ற சாமியாரை போல வணங்கப்பட்டும் ,
போற்றப்படும், உயர்த்தப்பப்பட்டும் ,
வருகிறார்கள்.
உண்மை ஊழியர்கள் தேவ அழைப்பை பெற்றவர்கள் கர்த்தருக்காகவே ஊழியம் செய்ய வேண்டும்.
பணத்திற்காக அல்ல, பெயர் புகழுக்காக அல்ல, ஆஸ்திகளை பெருக்கிக் கொள்வதற்காக அல்ல தேவன் எனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்ய வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.
1பேது 5:2,3;அப் 20:28;
7) கடைசியாக சபை பாகுபாடு இல்லாமல் எல்லா திருச்சபை மக்களுக்காகவும் போதகர்களுக்காகவும் தொடர்ந்து ஜெபியுங்கள்.
1தீமே 2:1,
ஒவ்வொரு போதகர்களும் திருச்சபை மக்களுக்காக தேவனுடைய சமூகத்தில் காத்திருக்க வேண்டும் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும், அவர்கள் நல்ல கிறிஸ்துவ வாழ்க்கை வாழ கர்த்தர் அவர்களுக்கு உதவி செய்யும்படியாக தொடர்ந்து தேவனுடைய பாதத்தில் மன்றாட வேண்டும்.
உலகத்துக்காக ஜெபிக்க வேண்டாமா ?
அந்த மக்களுக்காக நாம் தேவனுடைய சுவிசேஷத்தை நற்செய்தியை அறிவித்து அவருடைய வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வருவதற்கு பிரயாசப்பட வேண்டும். இப்படியாக தேவ சித்தத்தை நிறைவேற்றுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.
இதை கவனத்தில் வைத்துக் கொள்ள தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கிறேன்
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments