கடைசிக் கால அடையாளங்கள்.

 கடைசிக் கால அடையாளங்கள்.


 மத் 24:3முதல் 14வரை இயேசு கிறிஸ்து அடையாளங்களைக் கூறுகிறார் அவை கடைசிக் காலத்தை அறிவதற்கான நிச்சயமான அறிகுறிகள் ஆகும்.

அவை கடைசிக் காலம் நெருங்க நெருங்க இன்னும் தீவிரமான முறையில் வெளிப்படும். கடைசிக் கால அடையாளங்கள் 


1) கள்ளத் தீர்க்கதரிசிகள்,

திருச்சபைகளில் சமயங்களைச் சமரசம் செய்கிறவர்கள், இவர்கள் அதிகமாகத் தோன்றி மக்களை வஞ்சிப்பார்கள். 

(மத் 24:4,5,11).


2) யுத்தங்கள், பஞ்சங்கள், பூமி அதிர்ச்சிகள் ஆகியவை அதிகரிப்பதால் (மத் 24:6,7) இவைகள் பிரசவ வேதனையின் ஆரம்பமாகும். 

(மத் 24:8)'புதிய மேசியாவின் காலம்'பிறப்பதற்குரிய முன் அடையாளங்கள்.இவை,


3) கடைசிக் காலம் நெருங்க நெருங்க தேவனுடைய மக்கள் பல்வகையான துன்பங்கள் உட்படுத்தப்படுவார்கள். 

(மத் 24:9) பலர் கிறிஸ்துவின் மேல் தங்களுக்குள்ள விசுவாசத்தை விட்டு விடுவார்கள். (மத் 24:9,10)


4) வன்முறை, குற்றங்கள், தேவனுடைய சட்டங்கள், புறக்கணிப்பு, இவை மிக வேகமாக, அதிகமாகப் பரவும்.

இயற்கையான அன்பும், குடும்பங்களிலும், பாசமும் குறைந்து விடும். 

(மத் 24:12;மாற் 13:12; 2தீமோ 3:3)


5) இவ்வாறு துன்பங்கள் அதிகமாக இருந்த போதிலும், கிறிஸ்துவின் நற்செய்தியானது, உலகெங்கும் பிரசித்தி பெற்றது.

(மத் 24:14)


6) இரட்சிக்கப்பட்டவர்கள் கடைசிக் கால உபத்திரவங்கள், துன்பங்கள், அனைத்தையும் சகித்து தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருப்பார்கள்.

(மத் 24:13)


7) விசுவாசத்தில் உண்மையாய் நிலைத்திருப்பவர்கள், இந்த அடையாளங்களெல்லாம் அதிகரித்து வரும் போது, ​​ஆண்டவரின் வருகை மிகவும் சமீபம் என்று அறிந்து கொள்வார்கள். 

(எபி 10:25; யோவா 14:3)


அநேகர் வந்து திருச்சபையை வஞ்சிப்பார்கள். 

(மத் 24:5)


இந்த முதல் பெரிய அடையாளத்துக்கு சிறப்பான முக்கியத்துவம் உள்ளது. 

இந்த கடைசிக் காலத்தில் சமயத்தின் பெயரால் மக்களை வஞ்சித்தால் உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. உலகம் முழுவதும் இத்தகைய வஞ்சித்தல் நடைபெறப் போவதை தமது விசுவாசிகள் எதிர்பார்த்து, அறிந்து, விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கிறிஸ்து இயேசு கவலைப்பட்டுக் கரிசணையுடன் இந்த ஒலிவ மலை உரையாடலில் இந்த இரண்டு முறை இதே எச்சரிக்கையை கூறுகிறது. 

(மத் 24:11,24,)


திருச்சபைகள் கிறிஸ்துவின் பாதுகாப்பை இழந்து சுய பாதுகாப்புக்காக மனித வளையங்களையும், அரசியல் சட்டத்தையும் வைத்து சமரச பாதையில் போகும்போதே இது கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளம்.

என்பதை உண்மைக் கிறிஸ்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

நமக்கு போதிக்கும் ஊழியர்கள் கூட இதில் சிக்கியிருக்கலாம், அல்லது நமக்கு முன்பாக நடித்துக் கொண்டு இருக்கலாம். 

இயேசு கிறிஸ்துவை தவிர எவரையும் இந்த கடைசி காலத்தில் நம்ப கூடாது .

எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறார். அதற்கு கீழ்படிவோ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை