பாவம் செய்யாதிருங்கள்.

 பாவம் செய்யாதிருங்கள்.


நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;
(எபேசியர் 4:26)
மனிதனுடைய சுபாவத்தில் ஒன்று கோபம்.
கோபத்தின் மூலமாக பலவிதமான விபரீதங்கள் பல குடும்பங்களில் நடப்பதை நாம் அறிவோம்.

தேவன் தம் பிள்ளைகளுக்கு  கொடுக்கும் நல் ஆலோசனை என்னவென்றால், கோபப்படுவது தவறல்ல, ஆனால், "கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்" என்கிறார்.

மனிதனுடைய கோபம் ஒருவனை பாவத்துக்குள் தள்ளிவிடுகிறது அது ஒரு நாளும் தேவனுடைய நீதியை செய்யாது.(யாக் 1:20)

(கொலோசெயர் 3:8 ஐ வாசி)
இப்பொழுதோ "கோபமும்" மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். என பரிசுத்த ஆவியானவர் ஆலோசனை சொல்லுகிறார்.

"கோபம்" வரும் பொழுது மூர்க்கமும், வாயில் அருவருப்பான வார்த்தைகளும், தூஷணங்களும், இன்னொருவரையும் கோபப்படுத்தக்கூடிய வம்பு வார்த்தைகளும் பிறந்து மிகப்பெரிய கலவரங்களையும் விபரீதங்களையும் செய்து விடுகிறது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு வருந்தி என்ன பயன், ஆகையால், அவைகள் நடப்பதற்கு முன்னமே ஆண்டவர் நம்மில் இரக்கம் உள்ளவராய் நம்மை நாமே பாதுகாக்கும் படியாக நமக்கு நல்ல ஆலோசனையை இந்த பரிசுத்த வேதாகமத்தின் மூலமாக எழுதி தந்துள்ளார் என்பதை நான் இங்கே நினைவு கூறுகிறேன்.

மோசே 40 நாட்கள் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து பெற்றுக் கொண்ட கற்பலகைகளை கோபத்தினால் மலையின் அடிவாரத்தில் உடைத்து போட்டான் .
(யாத் 32:19)

யாக்கோபு தன் பிள்ளைகள் (சிமியோன், லேவி) பற்றி சொல்லும் பொழுது  "கோபத்தினாலே" ஒரு புருஷனை கொன்றார்களே 
(ஆதி 49:5-7) உக்கிரமான அவர்கள் கோபமும், மூர்க்கமும் சபிக்கப்பட்டுப் போவதாக  என்று கூறினான்.
இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

கோபத்தினால் ஒருவர் கன்னத்தில் பளார் என்று அறைந்து விடுகிறோம்.
இயேசு கிறிஸ்து என்ன சொல்லுகிறார் என்பதை கவனித்து பாருங்கள்.


மத்தேயு 5:39
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.

நூற்றுக்கு 90% வலது கை பழக்கம் உடையவர்கள் அதிகம் 10% இடது கை பழக்கம் உடையவர்கள் இருக்கலாம்.

ஒரு கிறிஸ்துவரோ அல்லது கிறிஸ்தவர் அல்லாதவரோ தன்னுடைய வலது கையினால் இன்னொருவருடைய வலது கன்னத்தில் அடிக்கவே முடியாது, இடது கன்னத்தில் தான் அடிக்க முடியும். இடது கன்னத்தில் அடித்தால் வலது கன்னத்தை காட்டு என்று இயேசு சொல்லவில்லை மாறாக வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தை காட்டு என்கிறார்.
யாரும் கோபத்தில் யோசித்து அடிப்பதில்லை யோசித்தால் கோபம் நம்மை விட்டு நீங்கிவிடும் என்பதை ஆண்டவர் நமக்கு இதன் மூலமாக சொல்லுகிறார். 

இயேசு கிறிஸ்துவை ஒருவன் கன்னத்தில் அறைந்தான் ஆனால் ஆண்டவர் அவனுக்கு மறு கன்னத்தை காட்ட வில்லை அவனைக் கேள்வி கேட்டார்.
(மத் 26:67; மாற் 14:65;லூக் 22:64; யோவா 18:22,23ஐ வாசி..)

இயேசு கிறிஸ்துவுக்கு கோபம் வரும் பொழுது அவர் ஆலயத்தை சுத்திகரித்தார்.(யோவா 2:15-17)

ஒருவனுடைய கையை சொஸ்தமாக்கினார். (மாற் 3:5)

இன்றைய உயர்ந்த முத்துக்கள் மூலமாக நாமும் பரிசுத்த ஆவினால் நிறைந்து நம்மிடம் காணப்படும் மாம்சிக குணங்களை அழித்து தேவனுடைய திவ்ய சுபாவங்களை நல்ல குணங்களை வெளிப்படுத்துவோம். கர்த்தர் நல்லவர் என்று சொல்வது போல நாமும்....
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் சிலுவை ராஜா



Comments

Anonymous said…
Amen. Praise GOD

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை