யெகோவாயீரே
யெகோவாயீரே
ஆதி 22:14; வாசிக்கிறோம்.
இந்த பெயரின் பொருள்:"கர்த்தர் பார்த்துக் கொள்வார்" என்பது. கர்த்தர் ஆபிரகாமைச் சோதித்ததிலிருந்து நாம் கற்றுக் கொள்பவை.
1) சில தடவைகளில் தேவன் தமது பிள்ளைகளின் விசுவாசத்தை சோதிக்கிறார்.
(1பேதுரு 1:6,7 எபி 11:35)
சோதிக்கப்படுதல், தேவனுடைய ராஜ்யத்தில் ஒரு கனம் உள்ளதாக கருதப்பட வேண்டும். (1பேதுரு 4:12-14)
2) எந்தச் சந்தர்ப்பத்திற்கும், சூழ்நிலைக்கும், தேவையான தம்முடைய பிரசன்னத்தையும், கிருபையையும் அவருடைய சித்தத்துக்குட்பட்ட அத்தனையையும் தர தேவனால் கூடும் என்று நாம் நம்ப வேண்டும்.
(சங் 46:1-3; 2கொரி 9:8; 12:9; எபே 3:20).
3) ஒரு தரிசனம் அழிவதன் மூலம் தேவன் தமது மீட்பின் நோக்கத்தை செயல்படுத்துகிறார். அதாவது சில வேலைகளில் நம்முடைய வாழ்வில் சில காரியங்களை நடக்க தேவன் அனுமதிக்கிற போது அதை நம்முடைய நம்பிக்கைகளையும், கனவுகளையும், தகர்ப்பவகையாக இருக்கும்.
(ஆதி 17:15-17; 22:1-12; 37:5-7,28;
மாற் 14:43-50; 15:25,37).
4) விசுவாசம் சோதிக்கப்பட்ட பின் தேவன் அதை உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைப்படுத்தி, விசுவாசிக்கு நன்மைகளை அருளிச் செய்கிறார். (ஆதி 22:16-18; 1பேதுரு 5:10).
5) கர்த்தருக்குள் உண்மையான வாழ்வு தரும் வழியை அறிய வேண்டுமானால், தேவன் விரும்புகிற அனைத்தையும் நாம் தியாகம் செய்ய முன்வர வேண்டும்.
(மத் 10:37-39;16:24,25;யோவா 12:25)
6) துன்பங்கள், விசுவாச சோதனை ஆகியவற்றுக்குப் பின் தேனுடைய இந்த செயல்களின் முடிவில், விசுவாசியிடம் தேவன் மிகுந்த உருக்கமும், இரக்கமுள்ளவராயிருக்கிறார்.(யாக் 5:11).
ஆகையால் சோர்ந்து போக வேண்டாம் கர்த்தர் நம்முடைய எல்லா காரியங்களையும் பார்த்துக் கொள்வார்.
நாமும் ஜெபத்தினால் தேவனுக்கு தெரியப்படுத்துவோம்.
நமது ஜெபம் கேட்கப்பட....
வேதத்திற்கு செவி கொடுப்போம்.
தேவப் பக்தியாய் வாழ்வோம்.
பரிசுத்தமாய் வாழ்வோம்.
கர்த்தர் நிச்சயமாய் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்: சிலுவை ராஜா.
Comments