பழைய ஏற்பாடு 5

 221 ஆவது தொடர்ச்சி 


பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளை பற்றிய ஒர் கண்ணோட்டம்.


*தீர்க்கதரிசியும், ஆசாரியனும்.*

இஸ்ரவேலரின் சரித்திரத்தில் பலவேளைகளில் தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். இவர்கள் இருவரும் ஒன்றாகச் செயல் புரிய வேண்டும் என தேவன் விரும்பிய போதும், தேவ மக்களின் ஊழல் நிறைந்த வாழ்வை எதிர்க்காமல் கண்டும் காணாதவர்களாய் ஆசாரியர்கள் வாழ்ந்தனர். 


1) பாரம்பரியங்களில் ஊறியிருந்த ஆசாரியர்கள் சடங்குகள், எழுதப்பட்ட திட்டங்கள் இவற்றின் மூலமில்லாமல் தேவனை ஆராதிக்க இயலாதிருந்தனர். அவர்களது இறையியலில் ஒழுக்கத்துக்கு இடமிருப்பினும் அது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.


2) ஆனால் தீர்க்கதரிசியோ வாழ்வு முறை, ஒழுக்கம், நெறிமுறை, இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தான். மதசடங்குகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தவர்களை அவன் எதிர்த்தான்.

(இன்றும் உதாரணமாக சபையில் சூரிய வழிபாட்டுக்குரிய பொங்கல் வாழ்த்துகளை அநேகர் எதிர்பதில்லை அப்படி செய்கிறவர்களை அழைத்து வந்து எழுப்புதல் கூட்டம் நடத்துகிறார்கள் சிந்தித்துப் பாருங்கள் நீங்கள் உண்மையில் ஊழியர்களா? )

அவன் தனது நீதி வாழ்வுக்காகத் தனியாய் நின்று போராடி தேவனுடைய தெய்வீகத் தீர்மானத்தை வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சாதித்தான்.

தீர்க்கதரிசி ஒரு அறநெறிப் போதகனாகவும், ஒழுக்க புரட்சியாளனாகவும், மனித மனதை பாதிப்பவனாகவும் இருந்தான். தொடர்ந்து பாவத்தையும், விசுவாசமில்லாத மாய்மாலத்தையும் வெளியாக்கி, மனிதர்களை பரிசுத்த வாழ்வுக்கெனக் தூண்டி விடுபவனாயிருந்தான்.


நாளை தொடரும். 

கடைசி காலத்தில் நாம் இருக்கிறோம். இவர்களைத் திருந்த மாட்டார்கள் என்று சொல்லி நாம் திருந்தாமல் போய் விடக்கூடாது. 

இவர்களை எச்சரிப்பது நமது கடமை. இப்படிப்பட்டவர்களை ஜனங்களுக்கு காட்டிக் கொடுப்பது நமது கடமை இல்லையேல் நாளை நமது சந்ததி இப்படிப்பட்ட பொல்லாத கள்ள ஊழியர்களுக்கு கள்ள தீர்க்கதரிசிகளுக்கு அடிமைப்பட்டு போய் நரகத்தை சந்திப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆகையால் வருமுன் காத்துக் கொள்ளுங்கள். தீமைகளுக்கு எதிர்ப்பு சொல்லுங்கள் 

தீமைகளை ஒருநாளும் ஆதரிக்காதீர் ஆதரிக்காதீர் 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை