முன் சொன்னது..

 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் 

*........ அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.*

(கலாத்தியர் 1:9)


*"சபிக்கப்பட்டவனாயிருப்பான"* என்ற வார்த்தைகளின் 

(கிரே அனதிமா) பொருள், தேவனால் சபிக்கப்பட்டிருப்பானாகில் அவன் அழிவுக்குப் பாத்திரனாயிருந்து தேவ கோபத்தையும், கோபாக்கினையையும் அடைவான் என்பதாகும். 


1) கிறிஸ்துவின் மூல சுவிசேஷத்தைப் புரட்டவும் 

(கலா 1:7) அப்போஸ்தல சாட்சியின் உண்மையை மாற்றவும் முயற்சிப்பவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தும் நியாயத்தீர்ப்பு, கோபம் ஆகிய அவருடைய மனப்பான்மையை அப்போஸ்தலனாகிய பவுல் மூலம் வெளிப்படுத்துகிறார். 


அதே மனப்பான்மை இயேசு கிறிஸ்து விடமும் (மத் 23:13 ஐ பார்க்கவும்)


அப்போஸ்தலன் பேதுருவிடமும் (2பேது 2)


அப்போஸ்தலன் யோவானிடமும் (2யோவா 7-11)


யூதாவிடமும் (யூதா 3-4,12-19)

பிரத்தியட்சயமாகக் காணப்பட்டது. அந்த மனப்பான்மை, தேவனுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை (நற்செய்தியை) நேசித்து, அதுவே பாவத்தினால் வழி தவறிய உலக மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான இரட்சிப்பின் நற்செய்தி என்று விசுவாசித்து, கிறிஸ்துவை பின்பற்றும் ஒவ்வொருவரின் இருதயத்திலும் காணப்படும். 

(ரோம 10:14-15).


2) கிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்ட படி 

(கலா 1:11-12,6,ஐயும் வாசிக்கவும்) அப்போஸ்தலன் பவுல் பிரசிங்கத்த செய்திக்கு மாறாக ஒரு சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் எல்லோரும் அக்கினைக்குட்படுவார்கள்.

ஒருவன் இயேசு கிறிஸ்து, அப்போஸ்தலர் ஆகியோரின் மூல அடிப்படை சுவிசேஷத்தோடு எதையாகிலும் கூட்டினாலோ அல்லது எடுத்து போட்டாலோ அவன் தேவனுடைய சாபத்திற்குட்படுவான்,

* "ஜீவ புத்தகத்திலிருந்து அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார்".*

(வெளி 22:18-19)

*அந்நிய பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுகிறவன். சூரியனுக்கு படைக்கப்படுகிற பண்டிகைகளை சபையில் கொண்டாடுகிறவன்.* *கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தனக்கு ஏற்றார் போல் மாற்றி பிரசங்க்கிறவன் சபிக்கப்பட்டவர்கள்.* 

*அவர்கள் மூலமாக எந்த விசுவாசியும் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ள முடியாது. என்பதை புரிந்து கொள்ளுங்கள்.*


3) விசுவாசத்திற்காக விசுவாசிகள் போராட வேண்டுமென்றும் (யூதா 3 வது வசன குறிப்பு) அன்புடன் திருத்த வேண்டுமென்றும் (2தீமோ 2:25-26), இயேசு கிறிஸ்துவினாலும், அப்போஸ்தலராலும் போதிக்கப்பட்ட பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படை உண்மைகளை மறுதலிக்கும் போதகர்கள், ஊழியக்காரர்கள், சபையில் உள்ள மற்றவர்களையும் விட்டு பிரிந்து விட வேண்டும் என்றும் தேவன் கட்டளையிடுகிறார்.

(கலா 1:8-9; ரோம 16:17-18; 2கொரி 6:17)


இந்த உண்மைகளை பின் வருமாறு பார்ப்போம்: 


அ) கிறிஸ்துவின் தெய்வத்துவமும், ஒரு கன்னியிடம் பிறந்ததான அவரின் பிறப்பும் (மத் 1:23;யோவா 20:28)


ஆ) தேவனுடைய வார்த்தை போதைக்கும் அனைத்திலும் உள்ள தேவ அருளும் அதிகாரமும் 


இ) ஆதாம் விழுந்து போன சரித்திரம் (ரோம 5:12-19);


ஈ) மனித சுபாவத்தின் உள்ளான கேடு. 

(ஆதி 6:5;8:21;ரோம 1:21-32; 3:10-18; 7:14,21);


உ) கிறிஸ்து இல்லாமல் மனித வர்க்கத்தின் இழப்பு. 

(அப் 4:12 குறிப்பு மற்றும் ரோம 1:16-32;10:13-15);


ஊ) கிருபையினால் கிறிஸ்துவை ஆண்டவரும், இரட்சகருமென்று  விசுவாசிப்பதன் மூலம் கிடைக்கும் இரட்சிப்பு, அது அவருடைய மரணம், இரத்த உடன்படிக்கையின் மூலம் முழுமையடைகிறது.

(ரோமர் 3:24-25;5:10)


எ) கிறிஸ்துவின் சரீர உயிர்த்தெழுதல் (மத் 28:6; 1கொரி 15:3-4);


ஏ) பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் உள்ள அற்புதங்களில் சரித்திர பூர்வமான உண்மை. 

(1கொரி 10:1);


ஐ) சாத்தான், அசுத்த ஆவிகள் ஆகியவை ஆவிக்குரியவைகள் என்ற உண்மை. 

(மத் 4:1; 8:28; 2கொரி 4:4;எபே 2:2; 6:11-18; 1பேது 5:8);


ஒ) நரகத்தைப் பற்றிய பரிசுத்த வேதாகம போதனை. 

(மத் 10:28);


ஓ) கிறிஸ்து வார்த்தையின்படி பூமிக்குத் திரும்பி வருவது.

(யோவா 14:3; அப் 1:11; 1கொரி 1:7; வெளி 19:11 );


4) கள்ளப் போதகர்களைக் குறித்து எச்சரிக்கும் இது போன்ற பகுதிகள் பின்வருமாறு (ரோம 16:17; 2பேது 2:17-22; 2யோவா 9-11;

யூதா 12-13; 2கொரி 11:13; குறிப்புகளை வாசிக்கவும்)

வசனங்களை நாம் தியானித்து புரிந்து கொள்ள வேண்டும் அதற்கு வேண்டிய கிருபைகளை தேவனாகிய கர்த்தர் தாமே தருவாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை