எல்லாவற்றிலும் வாழ்ந்து

 எல்லாவற்றிலும் வாழ்ந்து

(3யோவா 2)


தேவனை விசுவாசிக்கிறவர்கள் ஆரோக்கியம் உள்ளவர்களாகவும், அவர்களுடைய வாழ்க்கையின் எல்லா பகுதியிலும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆசீர்வாதங்கள் காணப்படவும் பிதாவாகிய தேவன் சித்தமுள்ளவராய் இருக்கிறார்.

நாம் எல்லாவற்றிலேயும் வாழ்ந்து சுகித்திருக்கவே தேவன் விரும்புகிறார். 

அதாவது நம்முடைய வேலைகள், திட்டங்கள், நோக்கங்கள், ஊழியங்கள், குடும்ப வாழ்க்கை மற்றும் யாவும் அவருடைய சித்தத்தின்படியும், வழி நடத்துதலின்படியும் ஆசீர்வதிக்கப்படவே அவர் விரும்புகிறார். எனவே, இயேசு கிறிஸ்துவின் மீட்பின் மூலம் நாம் பெறும் ஆசீர்வாதங்கள் நம்முடைய சரீர தேவைகள் மற்றும் ஆவிக்குரிய தேவைகள் ஆகிய இரண்டினையும் நமக்கு பூர்த்திச் செய்கிறது.


சரீர பிரகாரமான செழிப்பினைக் குறித்தும் ஆவிக்குரிய வாழ்க்கையின் செழிப்பினைக் குறித்தும் வேத வசனங்கள் நமக்கு போதிப்பவைகள் பின்வருமாறு:


1) எல்லாவற்றிலும் வாழ்ந்து 

(கிரே,கிரியோரே) என்பதின் அர்த்தங்கள் என்னவெனில், 

"நல்ல பிரயாணம், நல்வழியில் நடத்தப்படுதல்" என்பவையாகும். இந்த அர்த்தத்தை மனதில் கொண்டவராகவே பரிசுத்த ஆவியானவர் யோவான் மூலமாக இதை எழுதியுள்ளார். அவருடைய பிரதான விண்ணப்பம் என்னவெனில், விசுவாசிகள் இரட்சிப்பின் பாதையில் நடந்து, தேவ சித்தத்தையும், சத்தியத்தையும் அறிந்தவர்களாய் அவருடைய ஆசீர்வாதங்களை பெற்று அனுபவிக்க வேண்டும் என்பதாகும். 

(3 யோவான் 3-4)


2) நமக்கும் நம்முடைய குடும்பத்தினருக்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகிய தேவைகளை பூர்த்தி செய்வதற்குப் போதுமான செல்வத்தை சம்பாதிக்கவும், மற்றவர்களுக்கும் நாம் உதவி செய்யவும், கிறிஸ்துவின் பணிக்கும் நாம் உதவி செய்யும் அளவிலும் (பிலி 4:15-19), ஆசீர்வதிக்கப்படுவதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. தேவன் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வல்லவர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் (2 கொரி 9:8-12).

மேலும் "தேவன் தம்முடைய ஐசுவரியத்தின் படி.....

நம்முடைய குறைவுகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" என்கின்ற அவருடைய வாக்குத் தத்தத்தையும் நாம் அறிவோம்.(பிலி 4:19;)


3) தேவனுடைய பொருளாதார தேவைகள் அனைத்தையும் சந்திப்பார் என்று நாம் அறிந்திருந்தாலும், அவர் நம்முடைய பிள்ளைகளை தேவைகள் நிறைந்த அனுபவங்களை சந்திக்கச் செய்கிறார் என்று வேதம் கூறுகிறது. 


அ) நமக்குத் தேவைகள் வரும் பொழுது நாம் தேவனையே சார்ந்திருக்கும் படியாகவும், நம்முடைய விசுவாசம், சகிப்புத்தன்மை, சேவைகள் ஆகியவைகள் பெருகும்படியாகவும் அவற்றை அனுமதிக்கிறார். 

(ரோம 8:35-39; 2கொரி 4:7-12;

6:4-10;12:7-10; 1பேது 1:6-7)


ஆ) கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி பகரும்போதும், அவருடைய பணியை நாம் நிறைவேற்றும் போதும், உபத்திரவங்கள், மற்றும் எதிர்ப்புகள் நமக்கு பெரும் நெருக்கத்தினை கொண்டு வரும்.

(லூக் 6:20-23;எபி 10:32-34; 1பேது 2:19-21; வெளி 2:9-10)


இ) தேசத்திலே உண்டாகும் மற்றும் இயற்கை சூழலால் உண்டாகும் யுத்தம், பஞ்சம், வறட்சி மற்றும் சமூகப் பொருளாதார சீற்றங்களால் நாம் வறுமையும் கூட அனுபவிக்க நேரிடலாம்.

(அப் 11:28-30; 2கொரி 8:2; 12-14).


4) சரீர பிரகாரமான இவ்வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் தேவப்பிரசன்னம், அவருடைய ஒத்தாசை மற்றும் ஆசீர்வாதங்கள் அனைத்தும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் செழிப்பினை அளவிடுகின்றது. அதற்கு நாம் செய்ய வேண்டுபவைகள் அவருடைய சித்தத்தை அறிந்திட வேண்டும். 

(மத் 6:10;26:39;எபி 10:7-9).

பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்ப்படிய வேண்டும். 

(ரோம 8:14)

உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும். 

(ரோமர் 12:1-2; 2கொரி 6:16-18).

வேத வசனத்தை நேசிக்க வேண்டும். 

(யாக் 1:21; 1பேது 2:2).

ஜெபத்தில் தேவனுடைய ஒத்தாசையை நாட வேண்டும்.

(மத் 6:9-13;எபி 4:16).

கடினமாக ஊழியஞ் செய்ய வேண்டும்.

(1தெச 3:6-12).

நம்முடைய தேவைகளுக்கு தேவனையே சார்ந்திருக்க வேண்டும்.

(மத் 6:25-34; 1பேது 5:7)

தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் முதன்மையாக தேட வேண்டும்.

(மத் 6:33;கொலோ 4:12;மத் 6:11;லூக் 11:3 ஆகிய வசனங்களை வாசிக்கவும்.)


5) நம்முடைய ஆத்துமா சுகமாய் வாழும்போது, நம்முடைய வாழ்க்கையில் மற்ற பகுதிகளில் கஷ்டங்களே நேரிடாது என்று அர்த்தம் இல்லை. அன்றாட வாழ்க்கையில் கஷ்டங்களை நாம் சந்திக்கவே நேரிடும். ஆனாலும் அக்கஷ்டங்களை ஜெபத்தின் மூலமும், தேவன் மேல் நாம் வைக்கும் விசுவாசத்தின் மூலமும் மேற்கொள்ள முடியும். 

ஆமென் அல்லேலூயா. 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.




Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை