உங்கள் தேவசெய்தி–

 உங்கள் தேவசெய்தி– எப்படி இருக்க வேண்டும்?

ஒரு செய்தி அல்லது உபதேசம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் இதில் பார்ப்போம். உபதேசிக்கிறவனாகிய நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் முதலில் வாசிக்கவும்.

1. உபதேசத்துடன் அற்புதம் நடக்க வேண்டும்:
(மத்தேயு 4:23)

உபதேசம் + சொஸ்தம்

மாற்கு 16:17-18

அடையாளம்

அற்புதம்

மனமாற்றம்

தெளிவு

2. சுருக்கமானதாக மற்றும் ஆழமானதாக இருக்க வேண்டும்:
(மத்தேயு 4:17)

மனந்திரும்பு பரலோகராஜ்யம் சமீபத்திருக்கிறது.

மத்தேயு 5,6,7 – பல காரியங்கள், எளிய விதத்தில் ஆனாலும் அதிக முக்கியத்துவமானவைகள்.

3. தேவனுடைய கற்பனைகளை உபதேசிக்க வேண்டும்:
(மத்தேயு 15:9)

மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் தேவனை ஆராதனை செய்கிறார்கள்.

1 யோவான் 5:3 – தேவனுடைய கற்பனைகள் பாரமானவைகளல்லவே!

4. வசனத்தை வைத்தே புத்திச்சொல்ல வேண்டும்:
(2 தீமோத்தேயு 3:16,17)

வேதவாக்கியங்களெல்லாம் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

தீத்து 1:9 – உபதேசத்தினால் புத்திச்சொல்லு.

5. கட்டுக்கதை அல்ல தேவனுடைய வார்த்தையை போதிக்க வேண்டும்:
(மல்கியா 2:7)

ஆசாரியனுடைய உதடுகளில் வேதத்தை ஜனங்கள் தேடுவார்கள்.

1 தீமோத்தேயு 1:3, தீத்து 3:9 – வீணான தர்க்கங்கள் வேண்டாம்

வம்சவரலாறு

கிறிஸ்துமஸ் இந்த தேதியில் கிடையாது, அந்த தேதியில் போன்ற நாட்களை குறித்த விவாதங்கள்

தர்க்கங்கள்

இயேசு கிறிஸ்து இந்த வருடத்தில் வரப்போகிறார், இந்த வருடத்தில் உலகம் அழிக்கப்பட்டுவிடும் போன்ற தவறான, வேதத்திற்கு புறம்பான அலசல்கள்

தீத்து 1:11 – இழிவான ஆதாயம் – தகாதவைகளை உபதேசித்தல்

தீத்து 2:1 – ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளை பேசு

தீத்து 2:8 – குற்றம் கண்டுப்பிடிக்கப்படாடத ஆரோக்கியமான வசனத்தை பேசு

6. வசன ஆதாரத்துடன் போதிக்க வேண்டும்:

இயேசு போதிக்கும்போது வசன ஆதாரத்துடனே போதித்தார். இப்படி சொல்லப்பட்டிருக்கிறதே, ஏசாயா சொல்லியிருக்கிறான், தானியேல் சொல்லியிருக்கிறான்

7. அதிகாரத்துடன் போதிக்க வேண்டும்:
(மத்தேயு 7:28)

தெளிவாக, திட்டமாக, உண்மையாக

யோவான் 12:49 ஐ வாசிக்க
நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
ஆமென் அல்லேலூயா.

கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை