தானியேல்

 தானியேல்

கி.மு.605 ல் யோயாக்கீமின் மேல் நேபுகாத்நேச்சாருக்கு தேவன் வெற்றியளித்த போது, ​​அந்த பாபிலோனிய ஏகாதிபதி தேவாலயத்திலிருந்து சில பாத்திரங்களையும், சில ராஜகுமாரர்களையும் கொண்டு சென்றான். ஏழு வருடங்களுக்கு முன்னதாக நினைவேந்திய காலத்திலிருந்து பாபிலோனிய சாம்ராஜ்யம் மிக வேகமாக வளரத் தொடங்கியது. ஆயினும் அவர்களது அரசாங்கத்தை நடத்தப் போதுமான கல்விமான்கள் அவர்களுக்கு இல்லாதிருந்தார்கள். எனவே, நல்ல அழகும், ஆரோக்கியமும், அறிவுமுடைய வாலிபர்களை பாபிலோனுக்கு கொண்டு சென்று கல்தேயருடைய (பாபிலோனியர்) மொழிகளையும், கலாச்சாரத்தையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து, ராஜ அரண்மனையின் சேவைக்கு அவர்களை பயன்படுத்த நேபுகாத்நேச்சார் நினைத்தான். அத்தகையோரில் * தானியேலும் * அவனது மூன்று நண்பர்களும் அடங்குவர்.

* தானியேலுக்கு மறுபெயர் *

தானியேலும், அவனது நண்பர்களும் ராஜ சேவைக்குள் பிரவேசிக்க அவர்கள் அந்நாட்டு குடிமக்களாக வேண்டியது அவசியமாயிருந்தது. எனவே அவர்களுக்கு பாபிலோனிய பெயர்கள் கொடுக்கப்பட்டன.

இளம் ராஜகுமாரனாகிய தானியேலுக்கு ("தேவன் எனது நியாயாதிபதி"), பெல்தெஷாத்சார் (என்றால், பாபிலோனிய தெய்வங்களின் தலைவன்
"பேல் அவன் வாழ்க்கையை காக்கும்") என்று பெயரிடப்பட்டது;

அனனியாவுக்கு ("கர்த்தர் கிருபை
உள்ளவராயிருக்கிறார்"),
சாத்ராக் (என்றால், சந்திர தேவனாகிய"அக்கு"வின் ஊழியன்) என்று பெயரிடப்பட்டது;

மீஷாயேலுக்கு("தேவனுக்கு நிகர் யார்"), மேஷாக் (என்றால்,"ராஜகுமாரனின் நிழல்"அல்லது "யார் இது")
என்று பெயரிடப்பட்டது;

அசரியாவுக்கு ("கர்த்தர் உதவி செய்கிறார்"),ஆபேத் நேகோ
(என்றால்,"ஞானத்தின் தேவனாகிய அல்லது விடிவெள்ளி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் "நேகோவின் ஊழியன்") என்று பெயரிடப்பட்டது;

இப்பொழுது அவர்கள் பாபிலோனிய குடிமக்கள் ஆகிவிட்டதால் அரசாங்க பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்கள். இந்த புதிய பெயர்கள் சூட்டபப் பட்டிருந்தாலும், இந்த யூத மனிதர்கள் ஒரே மெய்தேவனுக்கே உண்மையாயிருக்கும்படி தீர்மானித்தார்கள்.

இவர்களுடைய மாற்று பெயரை வைத்திருப்பவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள் உங்கள் பெயரின் அர்த்தம் என்னவென்று....
அல்லது ஞானஸ்நானம் கொடுக்கும் ஊழியர்களும் சிந்திக்க வேண்டும்.

தானியேல்.... தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று,
தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணினான்.
(தானி 1:8)
பாபிலோனின் ஒழுக்க முறைமைகள் புறஜாதியாரின் முறைமைகளாயிருந்தன. அங்கே தானியேலுக்கும் அவன் நண்பர்களுக்கும் கற்றுக்கொடுக்கப்பட்ட காரியங்கள் தேவனுடைய நியாயத்திற்கும் நீதியின் கொள்கைகளுக்கும் முரணாகக் காணப்பட்டது என்று நிச்சயமாக அறிவோம்.
விக்ரங்களுக்குப் படைக்கப்பட்ட ஆகாரமும் திராட்சரசமும் ராஜா நேபுகாத் நேச்சாருக்கு பரிமாறப்பட்டது. அதே ஆகாரமும் திராட்சரசமும் இவர்களுக்கும் பரிமாறப்பட்டது. அத்தகைய உணவை உண்பது தேவனுடையது நியமங்களுக்குக் கீழ்ப்படியாததற்கு ஒத்ததாகும்; அத்தகைய உணவில் போதையின் சக்தி இருந்ததால் அது அவர்களின் மூளையை மந்தப்படுத்தியிருக்கும்.

1) தன்னைத் தீட்டுப்படுத்தக் கூடாது என்று ஆரம்பத்திலேயே தானியேல் தீர்மானித்து விட்டான். மரணத்தை சந்திக்க நேர்ந்தாலும் தன்னுடைய நம்பிக்கையைத் தளர்த்தி மற்றவர்களோடு ஒத்துப் போக மாட்டான். அவனுடைய பெற்றோர் அவனுக்கு ஆலோசனை சொன்ன பிறகு அங்கு இல்லை என்பதை கவனிக்க வேண்டும்; சிறுவனாக இருந்த போதே தேவன் மேலும் அவரது நியாயப்பிரமாணத்தின் மேலும் அவருக்கு செலுத்தப்பட்ட இதயபூர்வமான அன்பு கர்த்தரை மாத்திரம் சேவிக்க அவனில் விருப்பத்தைத் தந்தது.(உபா 6:7)

2) தேவனுக்கு உண்மையாய் இருக்க வேண்டுமென்று தீர்மானித்தவர்கள் சோதனையைச் சந்தித்தாலும், அதை மேலும் தேவனுக்காக உறுதியாயிருக்க பலன் பெறுவார்கள். ஆனால், ஏற்கனவே தேவனுக்கென்று உண்மையாய் இருக்க தீர்மானிக்காதவர்களுக்குப் பாவத்தை எதிர்க்கவோ உலகத்தின் வழிகளிலிருந்து விலகி வாழவோ கடினமாக இருக்கும்.

தேவனுடைய பிள்ளைகள் தங்களுடைய தீர்மானத்தில் உறுதியாக இருக்க தீர்மானம் எடுங்கள்.
அப்பொழுதுதான் நமது பெலன் அதிகரிக்கும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை