புத்தி சொல்கிறேன்.

 புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; 

இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.

(ரோமர் 12:8)


1)*"புத்தி சொல்லுதல்"* தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறவர்களின் இருதயம், மனசாட்சி, சித்தம் ஆகியவற்றைத் தொட்டு, விசுவாசத்தை தட்டியெழுப்பி, உலகத்திலிருந்து அவர்கள் முற்றும் பிரிந்திருப்பதையும் கிறிஸ்துவுக்குள் ஆழமான ஒப்புக்கொடுத்தலையும் உண்டாக்குமாறு, தேவனுடைய வார்த்தையைப் பிரஸ்தாபப்படுத்தும் படி தேவனால் அருளப்படும் விருப்பம், தகுதி, வல்லமையாகும்.

(அப் 11:23;14:22;15:30-32; 16:40;

1கொரி 14:3; 1தெச 5:14-22;எபி 10:24-25).


2*"கொடுத்தல்"*

 என்பது தேவனால் அருளப்பட்ட விருப்பம், தகுதி, வல்லமை ஆகியவையாகும்.

ஏனென்றால் தேவனுடைய வேலைக்காகவோ, அவருடைய மக்களுக்காகவோ, தாராளமாக தன்னுடைய சொந்த ஆசியிலிருந்து கொடுக்கும்படியாக, ஒருவரிடம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு மேலான வருமானம் உள்ளது. 

(2 கொரி 8:1-8; எபே 4:28).

அதை உற்சாகமாக தேவனுடைய வேலைக்காக கொடுக்க வேண்டும். 


3)*"ஆளுகை செய்தல்"அல்லது "தலைமைத்துவம்"*

என்பது மெய்ப்பனின் வேலையைச் செய்யவும், எல்லாருடைய ஆவிக்குரிய நன்மைகளுக்காகவும் சபையில் செய்யப்படும் பலவிதமான செயல்களையும் சரியாக நடக்கவும் மேற்பார்வையிடவும், தேவன் அருளும் விருப்பம், தகுதி வல்லமையாகும்.

(எபே 4:11-12; 1தீமோ 3:1-7;எபி 13:7,17,24;)


4)*"இரக்கம்"* என்பது தேவையோடு அல்லது கவலையோடு இருப்பவர்களுக்கு உதவியாயும், ஆறுதலாயும் இருக்கும்படி தேவன் அருளும் 

விருப்பம், தகுதி, வல்லமையாகும். 

(எபே 2:4).


*புத்தி சொல்லுதல், கொடுத்தல், ஆளுகை செய்தல், இரக்கம் காட்டுதல், இவை எல்லாமே தேவன் நமக்கு அருளுகிற விருப்பம், தகுதி, வல்லமையாகும்,* என்பதை புரிந்து கொண்டால் தான் பெருமையில்  விழுந்து போகாமல் தேவனிடத்தில் நாம் தாழ்மைப்பட்டு இருப்போம் என்பதை உணர்த்துகிறது.

தொடர்ந்து நாம் ஜெபிப்போம் வசனங்களை கவனிப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை