கள்ளன்
இயேசு கிறிஸ்துவின் பக்கத்தில் அறையப்பட்ட இரண்டு கள்ளர்களை பற்றிய தகவல்.
நல்ல கள்ளன் அல்லது பின்மாற்றத்திலிருந்து மனம்மாறிய கள்ளன்.
லூக்கா நற்செய்தியில்
பெயர் குறிப்பிடப்படாமல், சிலுவையில் இயேசு கிறிஸ்துவின் இரு பக்கத்திலும் அறையப்பட்ட கள்ளர்களுள் ஒருவராவார்.
பாரம்பரியப்படி இவரின் பெயர் புனித தீஸ்மாஸ் ஆகும். இவர் சிலுவையில் தன் பாவங்களுக்காய் மனம்வறுந்தி இயேசுவிடம் மன்னிப்பு பெற்று விண்ணகம் சென்றார் என்பது திரு விவிலிய அடிப்படையில் கிறிஸ்த்துவ நம்பிக்கை ஆகும்.
புனித தீஸ்மாஸ்
செக் குடியரசில் உள்ள புனித தீஸ்மாஸின் சிலை (1750).
நல்ல கள்ளன்
இறப்பு: சுமார். 33 கி.பி
ம,இடம் : கொல்கொதா மலை, எருசலேமுக்கு வெளியே நடந்தது.
இதை ஏற்கும் சபை/சமயங்கள்,
கிழக்கு மரபுவழி
கத்தோலிக்க திருச்சபை.
திருவிழா: மார்ச் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.
பாரம்பரிய கிறிஸ்தவர்களிடம் ஞானஸ்நானத்தை குறித்து பேசும்போது அநேக கிறிஸ்தவர்கள் இந்த கள்ளணை ஒப்பிட்டு தான் பேசுவார்கள். அவன் ஞானஸ்நானம் பெற்றானா ?
அவன் ஞானஸ்நானம் பெற்றானா ? பெற்றுக்கொள்ளவில்லையா?
என்பது ஒரு பக்கம் இருந்தாலும்.( மத்தேயு 28:18,19,20, ஞானஸ்நானம் கொடுங்கள் என்பது தேவனுடைய கட்டளை. அந்தக் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போனால் நாம் என்ன கிறிஸ்தவர்கள் ?
ஞானஸ்நானாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பாவமும் செய்யாத அவரே யோவான் ஸ்நானகனிடம் மூழ்கி திருமுழுக்கு பெற்றுக் கொண்டார்.)
கள்ளன் ஞானஸ்நானம் எடுத்தற்க்கு போதிய ஆதாரம் வேதத்தில் சொல்லப்படவில்லை என்றாலும் அவன் ஞானஸ்நானம்
பெற்றுயிக்கலாம் என்பதற்கான அவனுடைய வாய் மொழிகள் கூறுகின்றன.
வலது புறத்திலுள்ள கள்ளன் பெயர் தீஸ்மாஸ்
அவனுடைய வாய் மொழிகள்.
1)லூக்கா 23:40, ஆக்கினையை அறிந்தவன்.
செப்பனியா 3:15, ஆக்கினையை அகற்றுபவர்
இயேசு கிறிஸ்து.
2) தேவனுக்கு பயப்படுகிறவன்
லூக்கா 23:40,
அப் 10:22 கொர்நேலியு தேவனுக்கு பயந்தான்.
3) தக்கப் பலனைக் குறித்து அறிந்தவன்.
லூக்கா 23:41; வெளி 22:12; நான் அளிக்கும் பலன் கூடவே வருகிறது.
4) இயேசு கிறிஸ்து தகாததை நடப்பிக்கவில்லை என்று சாட்சி கொடுத்தான்.
லூக்கா 23:41,
மத் 3:11 என்னிலும் வல்லமை உள்ளவர்
5) மற்றவனை கடிந்து கொண்டான். (எச்சரித்தான்)
லூக்கா 23:41; யோவா 8:11; நீ போ இனிப் பாவம் செய்யாதே
6) ராஜ்யத்தில் என்னை நினைத்தருளும்.
(பரலோகத்துக்காக ஜெபித்தான்)மத் 10,32,33; இயேசுவை அறிக்கை செய்தான் பரலோகம் கிடைத்தது.
இடது பக்கத்திலுள்ள கள்ளன்.
பெயர்: ஹெஸ்பாஸ்
1) லூக்கா 23:39 இயேசுவை நீ என்றான்.(இயேசுவை தன்னுடைய அடிமையை போல் நினைத்தான்)
மத் 26:62 பிரதான ஆசாரியனும் இயேசுவை நீ என்றான்.
2) லூக்கா 23:39 கிறிஸ்துவானால் (இயேசுவோ என்று சந்தேகப்பட்டான்)
மத் 14:31 ஏன் சந்தேகப்பட்டாய்.
3) லூக்கா 23:39 உன்னையும்
(இயேசுவை அவமரியாதை செய்தான்.
மத் 26:61 இவன் சொன்னான் என்றார்கள் இயேசுவை.
4) லூக்கா 23:39, இரட்சித்துக் கொள்
(இரட்சிப்பைக் குறித்து கிண்டல் செய்தான்)
அப் 16:17 குறி சொல்லுகிற பெண் பவுலையும் கிண்டல் பண்ணினாள்
5) லூக்கா 23:39 இகழ்ந்தான்
(இயேசுவை திட்டினான்)
மத்தேயு 26:74 பேதுருவோம் இயேசுவைத் திட்டினான்.
வலது புறத்தில் உள்ள கள்ளன் செயல்பாடுகளை பார்க்கும் பொழுது
யோவான் ஸ்நாகன் இயேசு கிறிஸ்துவை அறிமுகம் செய்யும் பொழுதோ அல்லது திருமுழுக்கு கொடுக்கும் பொழுதோ தீஸ்மாஸ் என்ற கள்ளன் திருமுழுக்கு பெற்று இருக்கலாம், பின் நாட்களில் பின் மாற்றத்தில் சென்று கள்ளனாக மாறிவிட்டான்.
(யாக் 5:19,20; யூதா 1:22; இயேசு கிறிஸ்து அவனை திருப்பினார்.)
ஆனால் இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்ட பொழுது முதலில் இருவரும் நிந்தித்தாலும் பின்வரும் அவனுடைய வார்த்தைகள் கிறிஸ்துவை மேசியா என அடையாளம் கண்டு கொண்ட மாத்திரத்தில் அவருடைய இராஜ்ஜியம் இவ்வுலகத்திற்குரியது அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொண்டபடியால் இயேசு கிறிஸ்துவிடம் உம்முடைய இராஜ்யத்தில் என்னை நினைவு கூறும் என்று வேண்டினான். இயேசு கிறிஸ்து அவனை ஏற்றுக் கொண்டு என்னோடு கூட பரதீசியில் இருப்பாய் என்றார்.
ஒரு முறைக்கு இருமுறை வாசியுங்கள். அவன் அறிக்கையை கவனித்து பாருங்கள்.
உங்கள் கருத்தை எனக்கு பதிவு செய்யுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments