பவுலின் உபத்திரவங்கள்
அப்போஸ்தலனாகிய பவுலின் உபத்திரவங்கள்.
(2கொரி 11:23)
பவுலின் வார்த்தைகள் மூலம் பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவுக்கும், அவருடைய வார்த்தைக்கும், கிறிஸ்து எதற்காக மரித்தாரோ அதற்கும், தங்களை முற்றிலும் அர்ப்பணித்த சிலர் படும் வேதனைகளையும் உபத்திரவங்களையும் வெளிப்படுத்துகிறான்.
*தேவனுடைய உணர்ச்சிகளோடும், கிறிஸ்துவின் இருதயத்திலுள்ள பரிதாபம், இயக்கங்களோடும் பவுல் ஐக்கியங் கொண்டிருந்தான். கிறிஸ்துவின் பாடுகளில் பவுல் பங்கு கொண்டதில் 20 வகைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.*
1) தேவனுக்கு ஊழியம் செய்வதில் எதிர்கொண்ட "அநேக உபத்திரவங்கள்"
(அப் 14:22)
2) சமுதாயத்தில் நிறைந்திருந்த பாவத்தை குறித்த பெரிய கவலை
(அப் 7:16);
3) "அதிக கண்ணீரோடு" ஆண்டவருக்கு ஊழியம் செய்தது(2கொரி 2:4);
4) பரிசுத்த வேதாகமத்தில் உள்ள அப்போஸ்தல விசுவாசத்துக்கு உண்மையாய் இல்லாத போதகர்களினால் திரித்துக் கூறப்பட்ட சுவிசேஷத்தின் மூலம் உண்டான அழிவை குறித்து மூன்று வருட காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடு சபைக்கு புத்தி சொன்னது.
(அப் 20:31).
5) அன்பு மிகுந்த விசுவாசிகளை விட்டு பிரிந்து போகும் போது உண்டான துக்கமும் (அப் 20:17-38) அவர்களுடைய வருத்தத்தைக் கண்டு, அவனுடைய இருதயம் உடைக்கப்பட்டது. (அப் 21:13);
6) கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்க மறுத்த அவருடைய"சகோதரருக்காக"அவர் இருதயத்தில் உண்டான மிகுந்த"துக்கமும் இடைவிடாத மனவேதனையும்"(ரோம 9:2-3; 10:1);
7) கிறிஸ்துவுக்காக அவர் செய்த வேலையில் உண்டான அனேக சோதனைகளும், துன்பங்களும் (2கொரி 4:8-12; 11:23-29; 1கொரி 4:11-13);
8) சபை பொறுத்துக் கொண்டிருக்கிற பாவத்தை பற்றிய துக்கம்.
(2கொரி 2:1-3; 12:21; 1கொரி 5:1-2; 6:8-10);
9) கிறிஸ்துவையும் அவருடைய உண்மையான சுவிசேஷத்தையும் கைவிடுவோருக்கு எழுதும்போது உண்டான "மிகுந்த வியாகுலமும், மனவேதனையும்"(2கொரி 2:4)
10) பாவத்திலிருந்தும், உலகத்தின் பாரத்திலிருந்தும் விடுதலையாகி கிறிஸ்துவுடனே கூட இருக்க வேண்டுமென்ற ஆசையினால் உண்டான நெருக்கம் (2கொரி 5:1-4;பிலி 1:23);
11) சபையின் ஒழுக்கநெறி, உபதேசம் ஆகியவற்றின் தூய்மைக்கென்ற அவருடைய அர்ப்பணிப்பினால் "எப்பக்கத்திலேயேயும் உபத்திரவ பட்டோம்"என்று அவருடைய நிலை (2கொரி 7:5; 11:3-4);
12) தினமும் அவருக்கு இருந்த எல்லாச் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை (2கொரி 11:28)
13) கிறிஸ்தவர்கள் பாவத்துக்குள் இடறி விழுவதைக் குறித்து அவர் மனம் எறிந்தது.(2கொரி 11:29)
14) வெளிப்படுத்தப்பட்ட புதிய ஏற்பாடு விசுவாசத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை பிரசிங்கிப்போருக்கு நித்திய ஆக்கினையை அறிவிக்க வேண்டிய நிலை(கலா 1:6-9)
15) கிருபையிலிருந்து வழுவி விழுந்தவர்களுக்காக அவர் அனுபவித்த
"கர்ப்ப வேதனை"(கலா 4:19; 5:4);
16) கிறிஸ்துவின் "சிலுவைக்கு பகைஞர்"ஆனவர்களுக்காக விடும் "கண்ணீர்" (பிலி 3:18);
17) விசுவாசத்திலிருந்து சிலர் விழுந்து விடுவார்களோ என்ற அவருடைய வியாகுலம்.
(1தெச 3:5-8)
18) நீதி, தேவபக்தி ஆகியவற்றின் மேல் உள்ள தாபத்தினாலுண்டாகும் துன்பம். (2தீமோ 3:12)
19) ஆசியா நாட்டு விசுவாசிகள் அவரை விட்டு விலகினார்கள் என்ற கவலை.
(2தீமோ 1:15);
20) வர இருக்கும் விசுவாச மறுதலிப்பிலிருந்து உண்மையான விசுவாசத்தை காத்துக் கொள்ளும்படி
தீமோத்தேயுவுக்கு மன நெருக்கத்தோடுள்ள வேண்டுகோள்.(1 தீமோ 4:1;6:20;2தீமோ 1:14).
அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுக்காக சுவிசேஷத்தின் வேலைக்காக, திருச்சபைகளுக்காக, உடன் ஊழியர்களுக்காக,
கிருபையை இழப்பவனுக்காக. விசுவாசத்தை விட்டு வழுவி போனவனுக்காக
அவர் பட்ட கவலைகள், வியாகுலங்கள் இவையெல்லாம் நாமும் சிந்தித்து நம்முடைய வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும் தேவன் அனுமதித்திருந்தால்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில் சகோதரன்
சிலுவை ராஜா.
Comments