பழைய ஏற்பாடு

 218 உயர்ந்த முத்துக்கள் 


பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளை பற்றி ஒரு கண்ணோட்டம். 


(ஏசாயா 6:8,9)

"பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.

அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்".


எபிரேய சரித்திரத்தில் தீர்க்கதரிசியின் நிலை


1)அக்காலத்தில் இருந்த மக்களிடையே ஆவிக்குரிய நிலையில் உயர்ந்து நின்ற ஆண்களும், பெண்களுமே பழைய ஏற்பாட்டின் காலத்தில் தீர்க்கதரிசிகளாக இருந்தனர்.

தீர்க்கதரிசிகளைப் படம் பிடித்துக் காட்டுவது போல வேறெந்த வித மக்களையும் 

இலக்கியங்கள் விளக்குவதில்லை. இஸ்ரவேலரின் சரித்திரத்தில் ஆசாரியர்கள், நியாயாதிபதிகள், ராஜாக்கள், ஞானமுள்ள ஆலோசகர்கள், சங்கீதக்காரர்கள், ஆகியவர்களுக்கு தனிப்பட்ட இடங்கள் கொடுக்கப்பட்டிருப்பினும், அவர்கள் யாரும் தீர்க்கதரிசிகளை போல் மக்களிடம் உயர்ந்த நிலையுடன் பிற்கால மீட்பின் சரித்திரத்தில் செல்வாக்கு பெறும் அளவுக்கு உயர்ந்துவிடவில்லை.

2) பழைய ஏற்பாட்டின் அமைப்பிலேயே தீர்க்கதரிசிகள் ஒரு பெரும் செல்வாக்குடையவராயிருந்தனர். எபிரேய வேதாகமத்தின் மூன்று பிரிவுகளே இதனை விளக்குகின்றன. 

(1) தோரா

(2) தீர்க்கதரிசிகள் 

(3) எழுதப்பட்டவை 

(லூக்கா 24:44). தீர்க்கதரிசிகளின் புத்தகங்களில் தீர்க்கதரிசன நோக்கங்களுடன் எழுதப்பட்ட யோசுவா, நியாயாதிபதிகள், 1,2,சாமுவேல் 1,2, ராஜாக்கள் எனும் ஆறு சரித்திர புத்தகங்களும் அடங்கும். இப்ப புத்தகங்களை எழுதியவர்களும் தீர்க்கதரிசிகளே என்பது புலனாகின்றது.

இரண்டாவதாக பிரத்தியேகமாக 16 தீர்க்கதரிசன புத்தகங்கள் உள்ளன. (ஏசாயா முதல் மல்கியா வரை) இறுதியாக வேதாகமத்தில் முதல் ஐந்து புத்தகங்களை (தோரா) எழுதிய மோசேயும் தீர்க்கதரிசியாக (உபா 18:15) இருந்தான். எனவே பழைய ஏற்பாட்டின் மூன்றில் இரண்டு பகுதிகள் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டுள்ளன.


தீர்க்கதரிசிகளைக் குறிப்பிடும் எபிரேய வார்த்தைகள்.


1) ரோயே. இந்த எபிரே பெயர்ச்சொல் "காண்பவர்"எனப் பொருள் படும். இது ஆவிக்குரிய கோளத்தையும், எதிர்கால சம்பவங்களையும் காண்கின்ற விசேஷ தன்மையைக் காட்டுகின்றது.

தீர்க்கதரிசிகள் வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்து ஏமாறுபவர்கள் அல்ல என்றும், தேவன் எப்படி பிரச்சினைகளை காண்கின்றாரோ அதே நிலையில் காண்பவர்கள் என்பதையும் இந்த வார்த்தை விளக்குகிறது. 'காண்கின்ற'வராக இருப்பதால் தேவனிடத்தில் இருந்து சொப்பனங்கள், தரிசனங்கள், வெளிப்பாடுகள் இவற்றைப் பெற்று ஆவிக்குரிய உண்மைகளை மனிதர்களுக்குப் போதித்தனர்.


2) நபி (அ) இது தீர்க்கதரிசியைக் குறிப்பிடும் முக்கிய வார்த்தையாகப் பழைய ஏற்பாட்டில் 309 முறை காணப்படுகிறது.

இந்த வார்த்தையின் மூலம் 

(வேர்) என்னவென்று தெரியாவிட்டாலும்"தீர்க்கதரிசனம் சொல்"எனும் எபிரேய வினைச் சொல்லுக்கு "தேவனது மனதிலிருந்து அவரது ஆவியின் மூலம் வார்த்தைகளைப் பேசு" என்பது பொருளாகும். எனவே 'நபி'என்பதற்கு தேவனது ஆவியின் ஏவுதலினால் தேவனுக்காகப் பேசுகிறவர் என்று பொருள் கொள்ளலாம். 

(ஜெசீனியஸ், எபிரேயச் சொல் அகராதி), தீர்க்கதரிசி 

(ப்ராபெட்டஸ்) இந்த கிரேக்க சொல்லுக்கும், 'இன்னொருவருக்காகப்' பேசுபவர் என்று பொருளாகும்.

தேவனிடத்தில் கேட்டதும், கண்டதும், பெற்றதுமான செய்திகளை அவருக்காக அவரது உடன்படிக்கையின் பிள்ளைகளிடத்தில் பேசுவதே தீர்க்கதரிசியின் வேலை ஆகும். 


(ஆ) பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிக்கு

1) தேவ மனுஷன் 

(2இராஜா 4:21)

2) தேவ ஊழியக்காரன் 

(ஏசா 20:3; தானி 6:20)

3) ஆவியின் மனிதன் 

(ஏசா 61:1-3)

4) காவல்காரன் 

(எசே 3:17)

5) தேவனுடைய தூதுவன் 

(ஆகாய் 1:13)

என்கிற வேறு பெயர்களும் உண்டு. தீர்க்கதரிசன சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லி நிகழ் கால, எதிர்கால சரித்திரங்களைப் படம்பிடித்து காட்டும் திறமையும் தீர்க்கதரிசிகளுக்கு உண்டாயிருந்தன.

(உதாரணமாக யோசேப்பு, தானியேல்)


நாளை தொடரும். 

தொடர்ந்து வாசித்தால் நாம் கற்றுக் கொள்ளலாம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 

ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை