நமக்காக வேண்டுதல்
நமக்காக வேண்டுதல் செய்யும்படி எப்பொழுதும் உயிரோடிருக்கிறவர்.
(எபி 7:25)
கிறிஸ்து பரலோகத்தில் பிதாவின் முன்னிலையில் வாழ்கிறார். (எபி 8:1)
தம்மைப் பின்பற்றுகிறவர்கள் ஒவ்வொருவருக்காகவும், பிதாவின் சித்தப்படி எப்போதும் பரிந்து பேசி வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்.
(ரோம 8:33,34; 1தீமோ 2:5; 1யோவா 2:1;).
1) கிறிஸ்துவின் இந்த பரிந்து பேசும் ஊழியத்தால் நாம் தேவனுடைய அன்பையும், பிரசன்னத்தையும் அனுபவிக்கிறோம். நம்முடைய எல்லாவித தேவைகளில் சந்திக்க (எபி 4:16)
சோதனை நேரத்தில் (லூக் 22:32)
பலவீன வேளையில் (எபி 4:15; 5:2)
பாவத்தில் (1யோவா 1:9; 2:1)
துன்ப நேரத்தில் (ரோம 8:31-39) உதவி பெற தேவனுடைய இரக்கத்தையும் கிருபையையும் பெற்றுக் கொள்கிறோம்.
2) கிறிஸ்துவின் பிரதான ஆசாரிய ஜெபம் தமது மக்களுக்காக ஏறெடுக்கப்படுகிறது. (யோவான் 17 ஆம் அதிகாரம் முழுவதும் வாசியுங்கள்.)
எல்லா விசுவாசிகள் மீதும் ஆவியை பொழிய அவருடைய விருப்பம்.
(அப் 2:33) ஆகியவை கிறிஸ்துவின் பரிந்து பேசும் ஊழியத்தின் சிறப்பை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
3) இயேசு கிறிஸ்துவின் பரிந்துப் பேசும் மன்றாட்டினால் தேவனிடம் வருகிறவர்களுக்கு பரிபூரணமாக இரட்சிக்கப்படுவதற்குரிய கிருபை கிடைக்கும். நம்முடைய பிரதான ஆசாரியர் என்ற நிலையில் நமக்காக இயேசு செய்யும் பரிந்து பேசும் ஜெப மன்றாட்டு, நம்முடைய இரட்சிப்புக்குத் தேவை.
அவருடைய கிருபையும், இரக்கமும், உதவியும் அவருடைய பரிந்து பேசும் ஜெபத்தால் நமக்குக் கிடைக்கின்றன. அவை இல்லாவிட்டால் நாம் தேவனை விட்டு விலகிச் சென்று விடுவோம். மறுபடியும் பாவத்திற்கு அடிமைப்பட்டு விடுவோம். சாத்தானின் ஆதிக்கத்துக்குள் விழுந்து விடுவோம். இதன் மூலம் நாம் கண்டனத்துக்கும், தண்டனைத் தீர்ப்புக்கும் ஆளாவோம். நம்முடைய ஒரே நம்பிக்கை கிறிஸ்துவின் மூலம் விசுவாசத்தினால் தேவனிடம் வந்து சேர வேண்டும் என்பதே. (1பேது 1:5).
4) தேவனோடு உள்ள உறவை விட்டு விலகுகிறவர்கள், பாவத்தை விட்டு விட மறுப்பவர்கள் போன்றவர்களுக்காக வாதாடும் ஒரு வழக்கறிஞராகவோ, பரிந்து பேசும் மத்தியஸ்தராகவோ இயேசு இருப்பதில்லை.
(1யோவா 1:5-7,9; 3:10)
அவர் மூலமாக தேவனிடம் வருகிறவர்களுக்கு மட்டுமே பரிபூரணமாக இரட்சிப்பதற்கு அவருடைய பரிந்து பேசும் ஜெப வேண்டுதல் உண்டு.
(எபி 4:16).
தேவனை தேட மறுக்கிறவர்களுக்கும், துணிகரமாக பாவம் செய்கிறவர்களுக்கும் அடைக்கலமும் பாதுகாப்பும் இல்லை.(எபி 10:21-31; 3:6)
5) கிறிஸ்து நம்முடைய ஒரே மத்தியஸ்தராகவும், பரலோகத்தில் நமக்காக பரிந்து பேசுகிறராகவும் இருப்பதால், தேவ தூதர்களையோ, மரித்துப்போன பரிசுத்தவான்களையோ, மத்தியஸ்தர்களாக வைத்துக் கொண்டு பிதாவிடம் ஜெபம் செய்வது, பிரயோஜனமற்றதும், பரிசுத்த வேதாகமத்துக்கு ஒத்ததாகவுமில்லை.
(கொலோ 1:2; 2:18).
என்பதை சிந்திக்கவும்.
இன்று சாத்தானுடைய வேலையாட்கள் தேவனோடு நீங்கள் உறவாடுவதை விரும்பாமல், உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம், எங்களிடத்தில் பங்காளர்களாக சேர்ந்து விடுங்கள். நீங்கள் ஜெபம் பண்ண வேண்டாம். நாங்கள் உங்களுக்காக ஜெபம் பண்ணுகிறோம். மாதம் மாதம் சந்தா மற்றும் செலுத்தினால் போதும்.
இவர்கள் ஒரு நாள் மரித்து விடுவார்கள்.
நம் ஆண்டவர் உயிரோடு கூட இருக்கிறார். நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அவரை நம்பி அவரிடத்தில் பங்காளர்களாக இருங்கள்.
வேதத்தை வாசிப்பதை விட்டு விடாதீர்கள். தியானிப்பதை மறந்து விடாதீர்கள். உங்களில் எரிந்து கொண்டிருக்கும் தேவனுடைய அக்கினியை அவித்து போடாதீருங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின்
பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments