கர்த்தருடைய பந்தி

 கர்த்தருடைய பந்தி அல்லது இராபோஜனம்.

(1கொரி 11:21)


கர்த்தருடைய இராபோஜனம் நான்கு பகுதிகளில் கூறப்பட்டுள்ளன. 

(மத் 26:26-29;மாற் 14:22-25; லூக் 22:15-20; 1கொரி 11:23-25)

அதன் முக்கியத்துவம் கடந்த கால, நிகழ்கால, வருங் கால தொடர்புள்ளது.


1) கடந்த கால முக்கியத்துவம். 


அ) அது பாவத்திலிருந்தும், ஆக்கினையிலிருந்தும் விசுவாசியின் மீட்புக்கான கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூர்வதாகும்.

(கிரே.அநெம்நசிஸ். 1கொரி 11:24-26;லூக் 22:19) கர்த்தருடைய இராபோஜனத்தினால் இரட்சிப்புக்கேதுவான கிறிஸ்துவின் மரணத்தையும், நம் வாழ்க்கையில் அதன் மீட்பின் முக்கியத்துவத்தையும் நாம் மறுபடியும் எதிர்கொள்கிறோம். பாவத்தில் விழாதபடி அதற்கு எதிர்த்து நிற்பதாகும் பொல்லங்காய் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுவதற்கும் (1தெச 5:22) கிறிஸ்துவின் மரணம் நம்முடைய முடிவான தூண்டுதலாக உள்ளது. 


ஆ) சிலுவையில் கிறிஸ்து பலியிடப்பட்டதால் நமக்கு அதன் மூலம் தேவனுடைய ஆசீர்வாதங்களும், இரட்சிப்பும் அருளப்பட்டதற்காக அது ஒரு நன்றி செலுத்தும் தருணம் ஆகும். (கிரே.யூகரிஸ்டியா)

(1கொரி 11:24;மத்26:27;மாற் 14:23;லூக் 22:19)


2) நிகழ்கால முக்கியத்துவம்.

கர்த்தருடைய இராப்போஜனம் என்பது கிறிஸ்துவோடு ஐக்கியமாவதாகும். மேலும் அது (கிரே.காயினோனியா)

அவருடைய பலியான மரணத்தினாலுண்டாகும் ஆசீர்வாதங்களில் பங்கு கொள்ளுவதோடு, கிறிஸ்துவினுடைய சரீரத்தின் மற்ற அங்கங்களோடு ஐக்கியங் கொள்வதாகும்.(1கொரி 10:16-17) இந்த இராப்போஜனத்தில் உயிர்த்தெழுந்த ஆண்டவர் விருந்தளிப்பவராக ஒரு விசேஷித்த வகையில் இப்போதும் இங்கே இருக்கிறார்.(மத் 18:20;லூக் 24:35)


ஆ) இது புதிய உடன்படிக்கையின் (கிரே.கெய்னிடையதெக்கே) அங்கீகாரமாகவும் அதிகாரப்பூர்வமான அறிக்கையாகவும் உள்ளது. இதனால் விசுவாசிகளாகிய நாம் கிறிஸ்துவின் ஆளுகையை மறுபடியும் உறுதிப்படுத்தி அவருடைய சித்தத்தை செய்யவும், அவருக்கு உண்மையாய் இருக்கவும், பாவத்தை எதிர்க்கவும், அவருடைய சேவையில் நம்மையும் இணைத்துக் கொள்ளவும் வாக்கு கொடுக்கிறோம். 

(1கொரி11:25;மத் 26:28;மாற் 14;24;லூக் 22:20;)


3) வருங்கால முக்கியத்துவம். 

அ) கர்த்தருடைய இராப்போஜனம், எல்லா விசுவாசிகளும் ஆண்டவரோடு சேர்ந்து வருங்கால தேவனுடைய இராஜ்ஜியத்தில் மேசியாவின் விருந்தை, முன் முன் ருசி பார்த்தலாகும்.

(மத் 8:11;22:1-4;மாற் 14:25;லூக் 13:29;22:17-18,30)


ஆ) அது தம்முடைய மக்களுக்காக வரப்போகும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்குவதாகும். (1கொரி 11:26) "உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக " என்ற ஜெபத்தை நடித்துப் பார்ப்பதாகவும் உள்ளது.

(மத் 6:10; வெளி 22:20).


கர்த்தருடைய இராப்போஜனத்தின் போது, நாம் உண்மையான விசுவாசத்தோடும், உருக்கமான ஜெபத்தோடும் தேவனுடைய வார்த்தைக்கும், சித்தத்துக்கும் நம்மை ஒப்புக்கொடுத்து, ஆண்டவரிடம் வரும்போது மாத்திரம் தான் மேற்கண்ட எல்லா முக்கியத்துவங்களும் நம் வாழ்க்கையில் அர்த்தம் உள்ளதாக மாறும். ஆகையால்

 திருவிருந்து பகுதியில் கவனம் செலுத்துவோம் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை