பொதுவான கருத்துக்கள்
பொதுவான கருத்துக்கள்*
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியவைகள்.
என்றாவது ஒரு நாள் நீங்கள் முகக் கண்ணாடியை பார்க்கும் போது, நம்முடைய பிறப்பு நம்முடைய விருப்பத்தின்படி நடந்ததா ?
நமக்கு இவர் தான் தாய் தகப்பனாக வரவேண்டுமென்று திட்டமிட்டு நாம் தேர்ந்தெடுத்தோமா ?
நம்முடைய நிறம், முகத்தோற்றங்கள், அழகு இவையெல்லாம் நாம் தேர்ந்தெடுத்தோமா ?
ஏன் சாதி மதங்களைக் கூட நாம் தான் தேர்ந்தெடுத்தோமா ?
இப்படி பல கேள்விகளை நீங்கள் உங்களுக்குத்தானே கேட்டது உண்டா ?
கொஞ்சம் கேட்டு தான் பாருங்களேன்.!
அறிவு லேசாய் வரலாம்.!!
ஒன்று தெளிவாகப் புரிகிறது. யாரோ ஒருவருடைய திட்டத்தின் படி அல்லது அவருடைய விருப்பத்தின்படி நாம் இந்த பூமியில் பிறந்து வாழ்ந்து மடிகிறோம்.
அதை என்றாவது கண்டுபிடிக்க நீங்கள் விரும்பியிருக்கீங்களா ?
சம் டைம் நினைத்து பார்த்திருக்கிறேன், ஆனா, நேரம் கிடைக்கல என்று தான் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனால் இன்று கல்லூரி படிப்பு,வேலை,துணைவி
அல்லது கணவன், ஒன்றை வாங்குவது அதை விற்பது, இது எல்லாமே நம்முடைய விருப்பமாய் கொடுத்தது யார் ?
எல்லாவற்றையும் உங்களுடைய விருப்பத்தின் படி செய்யும் போது
நீங்கள் திருமணம் செய்து பெற்றுக் கொள்ளும் பிள்ளைகளுக்கு டிசைனிங் யார் கொடுத்தது ?
அது பரிபூரணமாகவோ, அல்லது பரிபூரணம் இல்லாமலோ பிறக்க வைப்பது யார் ?
இந்தக் கேள்வி கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கும் தேவை, கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கும் தேவை.
ஏனென்றால் நாம் நம்முடைய இஷ்டத்தின் படி இந்த பூமிக்கு வரவில்லை என்பது உண்மை.
அப்படியானால் கடவுள் ஒருவர் உண்டு என நம்பித்தான் ஆக வேண்டும்.
கடவுள் முதல் மனிதனாக ஆதாமையும் அவனுக்கு மனைவியாக ஏவாளையும் உண்டாக்கினார்.
அதன்பின் இருவருக்கும் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும் "விதி"யை அவர்களுக்குள் வைத்து விட்டார். இது அவர்களுக்கு மாத்திரம் அல்ல அனைத்து ஜீவராசிகளுக்கும் இது பொருந்தும்.
அந்த விதியை மாற்ற முடியாது மாற்றவும் கூடாது.
தற்போது உள்ள விஞ்ஞானம் அதை மாற்ற முயற்சிக்கிறது.
அதுதான் ஒரு ஆண் இல்லாமல் ஒரு பெண்ணுக்குள் குழந்தையை உருவாக்கும் முறை.
ஆனால் அதற்கும் ஒரு ஆணுடைய ஃபோம் (விந்தணுக்கள்)தேவைப்படுகிறது. இங்கே என்ன பிரச்சனை என்றால்
பிள்ளைக்கு ஒரிஜினல் அப்பா யாரென்று ?
மனிதன் எந்த திட்டத்தை போட்டாலும் தேவனுடைய திட்டத்திலிருந்து தான் செயல்படுத்துகிறான், என்பதை விஞ்ஞானம் அறியவில்லை.
ஆகையால் சற்று சிந்தித்து
பரிசுத்த வேதாகமத்தை வாசித்துப் பாருங்கள்.
அங்கு உங்களுடைய பிறப்பை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அது உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி விவரிக்கிறது.
உங்களை உண்டாக்கினவர் தேவனுடைய ராஜ்ஜியத்தை விட்டு இந்த பூமிக்கு வந்து, உங்களுக்காக கல்வாரி சிலுவையில், கடைசிச் சொட்டு இரத்தத்தையும் சிந்தி மரித்து ,அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார்.
அவர்தான் உங்களை உண்டாக்கி நீங்கள் அவருடைய சித்தத்தை அல்லது விருப்பத்தை
செய்து முடிக்க உங்கள் உள்ளத்துக்குள்ளே செய்கையையும், விருப்பத்தையும் உண்டாக்குவாராக ஆமென்.
கிறிஸ்துவின்
பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா.
Comments