பழைய ஏற்பாடு 6

 222 ஆவது தொடர்ச்சி 


பழைய ஏற்பாட்டு 

தீர்க்கதரிசிகளை பற்றிய ஓர் கண்ணோட்டம்.


*பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளின் செய்தி.*


தீர்க்கதரிசிகளின் செய்திகள் மூன்று முக்கிய கருத்துகளின் அடிப்படையிலானவை. 


1) தேவனுடைய பண்பு (நிலை) 

(அ) தேவன் சிருஷ்டி கர்த்தர் என்றும், உலகின் சர்வ அதிகாரமுள்ள ஆட்சியாளர் என்றும் வெளிப்படுத்தி, அதனைச் சாதித்தனர்.

(உதாரணமாக, ஏசா 40:28) அவர் சரித்திரத்தின் தேவன் என்றும், தனது நித்திய நோக்கமான இரட்சிப்பு, நியாயத் தீர்ப்பு, இவை நிறைவேற சரித்திர சம்பவங்களை அமைக்கிறார் என்றனர். (ஏசா 44:28; 45:1;ஆமோ 5:27;ஆப 1:6)


(ஆ) தேவன் பரிசுத்தம், நீதி, நியாயம் நிறைந்தவரென்றும் பாவம், அநீதி, அநியாயம் இவற்றை வெறுத்தார் என்றும் போதித்தனர். அவரது பரிசுத்தம் கிருபையுடன் இணைந்ததால் அவரது கோபம், நியாய தீர்ப்பு இவற்றைச் செயல்படுத்த தாமதமாகவும், மெதுவாகவும் இருக்கின்றார்.

அவர் பரிசுத்தராயிருப்பதால் அவரது மக்கள் தங்களை கர்த்தருக்குப் பரிசுத்தம் என அர்ப்பணம் செய்து கொள்ள விரும்புகிறார். (சகரி 14:20;ஏசா 29:22-24;எரே 2:3)

உடன்படிக்கையின் தேவன் இஸ்ரவேலருடன் ஒரு தனித்தன்மை வாய்ந்த விசேஷ தொடர்பை உருவாக்கியதால் தனது மக்கள் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்றனர்.


2) பாவமும், 

மனந்திரும்புதலும்.

உடன்படிக்கையின் மக்கள் தொடர்ந்த கீழ்ப்படியாமை, உண்மையில்லாமை, விக்ரக ஆராதனை, ஒழுக்க கேடு, இவற்றைக் குறித்த தேவனது கவலையை பழைய ஏற்பாட்டை தீர்க்கதரிசிகள் பிரதிபலித்தனர். எனவே நியாயத்தீர்ப்பை குறித்த கடினமான வார்த்தைகளை அவர்களுக்கு எதிராக உபயோகித்தனர். "மனந் திரும்புங்கள் அல்லது அழிவீர்கள்"என்ற யோவான் ஸ்நானகன் , இயேசு கிறிஸ்து அவர்களின் செய்தியைப் போலவே தீர்க்கதரிசிகளின் செய்திகளும் அமைந்திருந்தன. அசீரியாவினால் சமரியாவும் 

(உதாரணமாக 

 ஓசி 5:8-12;9:3-7;10:6-15)

பாபிலோனால் எருசலேமும் 

(உதாரணமாக எரே19:7-15;32:28-36;எசே 5:5-12;21:2, 24-27) அழிக்கப்படும் எனும் பயங்கரமான நியாயத்தீர்ப்பின் தீர்க்கதரிசனங்களை அவர்கள் முன்னறிவித்து கூறினார்கள்.


3) *கணித்தலும், மேசியாவை குறித்த எதிர்பார்ப்பும்.*

(அ) உடன்படிக்கையின் ஜனங்கள் தேவனுக்கும் அவரது கற்பனைகளுக்கும் உண்மையற்றவர்களாயிருப்பினும், தீர்க்கதரிசிகள் தங்களது நம்பிக்கையின் செய்தியை விட்டு விடவே இல்லை. உண்மையுள்ளதும், தேவனுக்கு பயப்படுகிறதுமான மீந்திருக்கும் ஜனத்தின் மூலம் ஆபிரகாமின் உடன்படிக்கையையும், வாக்குத்தத்தங்களையும், தேவன் நிறைவேற்றுவார் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். இறுதியாக மேசியா வருவார் என்று அவர் மூலமாக தேவன் உலகின் அனைத்து மக்களுக்கும் இரட்சிப்பை அருளுவார் என்றும் அவர்கள் போதித்தனர். 


(ஆ) அவர்களது தலைமுறைினரின் ஆவி கூறிய வீழ்ச்சிக்கும், மேசியாவின் நாட்களைக் குறித்த நம்பிக்கைக்கும் இடையே பாலமாக தீர்க்கதரிசிகள் விளங்கினார்கள். தங்களது செய்தியை அவர்கள் அசர்ட்டை பண்ணுவார்கள் என அறிந்திருந்து, வணங்கா கழுத்துள்ள ஜனங்களிடம் பேச வேண்டிய நிலை. அவர்களுக்குத் தீர்க்கதரிசனம் குறித்த காரியம் சிக்கலாக இருந்தது.

(ஏசா 6:9-13) தீர்க்கதரிசிகள் பழைய உடன்படிக்கையின் வீரர்களாகவும், பொது உடன்படிக்கையின் முன்னோடிகளாகவும் திகழ்ந்தனர். நிகழ்காலத்தில் வாழ்ந்து எதிர்காலத்தை காட்டுபவர்களாய் விளங்கினார்கள்.


*பொய்தீர்க்கதரிசிகள்.*


பழைய ஏற்பாட்டில் பொய் தீர்க்கதரிசிகளைக் குறிக்கும் பல பகுதிகள் உள்ளன. 

ஆகாப் ராஜாவின் மூலமாக நான் ஒரு போய் தீர்க்கதரிசிகள் அழைக்கப்பட்டதாகவும் 

(2நாளா 18:4-7)

அவர்கள் வாயில் வஞ்சனையின் ஆவி இருந்ததாகவும் வேதம் கூறுகிறது. 

(2நாளா 18:18-22)

மழையே ஏற்பாட்டின் படி, 

1) உண்மையான தெய்வத்தை விட்டு விக்கிரங்களுக்கு நேராக மக்களை திசை திருப்புகிறவனும்

(உபா 13:1-5)

தமிழ்நாட்டு தீர்க்கதரிசி ஒருவன் உலக தமிழ் கிறிஸ்தவர்களை விக்கிரக வழிபாட்டுக்கு நேராக திசை திருப்புகிற காரியத்தை அறிவோம்.


2) ஆவி வணக்கம், குறி சொல்லுதல், டெல்லி சூனியம் போன்றவற்றைச் செய்கிறவனும் 

(உபா 18:10-11)


3) வேதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைக்கு எதிராகவும், அதை விட்டு விலகி பேசுகிறவனும் 

(உபா 13:1-5)

பழைய ஏற்பாட்டு அறுப்பின் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை என்கிறான். 

பழைய ஏற்பாட்டு யூதர்கள் அரிசி அறுவடை செய்யவில்லை அவர்கள் கோதுமையை விதைத்து கோதுமை அறுவடை செய்தார்கள். எந்த பண்டிகையிலும் இனிப்பு சேர்க்கக்கூடாது 

லேவி 2:11ல் வாசிக்கிறோம். பண்டிகை எல்லாம் கிறிஸ்துவை பட்டினது என்று பவுலடியார் எழுதுகிறார். 

இதையெல்லாம் சிந்தித்துப் பாருங்கள்.


4) தேவ மக்களின் பாவங்களை உணர்த்தாதவனும்

(எரே 23:9-18) அல்லது அவன் கூறுகின்ற எதிர்காலத்தை குறித்த குறிப்பிட்ட செய்திகள் நிறைவேறாமல் போனாலும் 

(உபா 18:20-22) அவன் பொய் தீர்க்கதரிசி எனப்பட்டான். புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனத்தை போல துல்லியமாகவும், முடிவானதாகவும் இருக்கவில்லை, ஏனெனில் அக்காலத்து தீர்க்கதரிசனங்கள் இஸ்ரவேலருக்கு கூறப்படும் தேவனுடைய நேரடி வார்த்தைகளாக இருந்தன. 

புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனம் என்பது சபைக்குக் கொடுக்கப்பட்ட ஐந்து ஈவுகளில் ஒன்று மட்டுமேயாகும்.

பழைய ஏற்பாட்டுத்  தீர்க்கதரிசிகளை போலன்றி புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளுக்குப் பல தடுப்பு எல்லைகள் உண்டு. 

ஏனெனில் புதிய ஏற்பாட்டில் பலவித ஊழியங்கள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பவைகளாக உள்ளன.

(1கொரி 14:29-33)

ஆகையால் உலகளாவிய தீர்க்கதரிசி என்று யாரையும் நம்பாதீர்கள். ஐந்து வித ஊழியத்தில் ஒன்று தீர்க்கதரிசன ஊழியம் அது சபைக்குள் மாத்திரமே செயல்படும். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

எவன் ஒருவன் தன்னை தீர்க்கதரிசி என்று சொல்லி உலகத்தில் வருகிற காரியங்களை சொல்லுகிறானோ உண்மையாகவே அவன் தீர்க்கதரிசி அல்ல. 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை