சத்துருவை தோற்க்கடிக்கும்

 சத்துருவை தோற்கடிக்கும் பரிசுத்தம்


உப்பு பொதுவாக கடல் நீரிலிருந்து உப்பு பெறப்படுகிறது. கடல் நீரை கால்வாய் வழியாக பாயச் செய்து பின்னர் அதை சூரிய ஒளியில் காயவிடுவார்கள். கடல்நீர் வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியாகப் போய்விடும். பின்னர் நீரின் மேலே உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். இதை உப்பளங்கள் என்று அழைப்பார்கள். கடல் போன்று பாவமும் அதை செய்பவர்களும் பெருகியிருந்தாலும் நீங்களும் நானும், *அந்தகாரத்தினின்று தம்முடைய ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் (பேதுரு 2:9). அந்த பாதிகளில் வேறுபிரிக்கப்பட்ட தண்ணீரைப் போன்று இருகின்றீர்கள். இவ்வாறு வேறுபடுத்தப்பட்ட தண்ணீர் சூரிய ஒளியில் காயும் பொழுதுதான் உப்பு வெளிப்படுகிறது. அது போல நம்முள் மறைந்திருக்கும் பரிசுத்தத்தை வெளிப்படுத்தவே நமக்கு உபத்திரவங்கள் மற்றும் சோதனைகள் வருகின்றன. இந்த வேறுபிரிக்கப்பட்ட தண்ணீரோடு ஒருகாலும் பழைய கடல் தண்ணீரை சேர்க்க மாட்டார்கள். ஏனெனில் அந்த பழைய கடல் நீர், இந்த வேறுபிரிக்கப்பட்ட தண்ணீரின் உவர்ப்பு தன்மையை குறையபண்ணி அதிலிருக்கும் உப்பை வெளிப்படுத்த விடாமல் மறைத்துவிடும். வேறுபிரிக்கப்பட்ட நாமும் பழைய பாவங்களை செய்து வந்தால் நம்மிடம் இருந்து பரிசுத்தம் வெளிப்படாது.


ஏற்ற நேரத்தில் இந்த வேறுபிரிக்கப்பட்ட தண்ணீரானது தனது உப்பைக் கொடுக்க உப்பளத்தின் எஜமான் ஆவலோடு காத்திருப்பார். அந்த தண்ணீர் தனக்கான உப்பைக் கொடுக்காத பட்சத்தில் அந்த தண்ணீரை குப்பைக்கு நேராகவும், சாக்கடைக்கு நேராகவும் கொட்டிப் போடுவார். நீங்களும் நானும் தேவனுக்காய் பரிசுத்தமாய் வாழ அழைக்கப்பட்டவர்கள். நம்மிடத்திலிருந்து பரிசுத்தம் வெளிப்படாவிட்டால் தேவன் நம்மை குப்பையாகிய அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்கும், சாக்கடையாகிய அக்கினி கடலுக்கும் நேராய் நம்மை கொட்டிப் போடுவார். ஆகவே தான் அருள்நாதர் இயேசு லூக்கா 14:34-ல் சொல்கின்றார், * உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? 35. அது நிலத்துக்காகவும் எருவுக்காகவும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்*.


யோசுவா 7-ம் அதிகாரத்தில் இச்சையின் நிமித்தம் கொல்லப்பட்ட ஆகான் என்ற மனிதனைக் குறித்து பார்க்கமுடியும். ஆகான் சொல்கிறான், *நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன். கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான். (யோசுவா 7:20-21). இச்சித்து பாவம் செய்தது அல்லாமல் அதை பூமிக்கடியில் மறைத்து வைக்கிறான். இன்றைக்கு நாமும் பாவம் செய்துவிட்டு ஒருவரும் அதை அறியாதபடி மறைத்து வைக்க முயற்சி செய்கிறோம். இருதயத்தின் அழகையும் அறியும் கர்த்தருக்கு முன்பாக மறைவானது ஒன்றுமில்லையே. *தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்* (நீதிமொழிகள் 28:13). ஆகான் தான் செய்த பாவத்தை பூமிக்கடியில் மறைத்ததால் தன் ஜீவனை இழந்து போனான். நீங்கள் ஒருவேளை பாவங்கள் செய்பவர்களாக உணர்த்தப்பட்டால் அதை மறைக்கவும், அதற்காய் பரிந்து பேசவும் முற்படாதீர்கள். மாறாக அதை அறிக்கை செய்து விட்டுவிடுங்கள்.


ஆகான் செய்த பாவத்தின் நிமித்தம், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள் என்றும், நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது. நீங்கள் எழுந்திருந்து உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் திட்டவட்டமாய் கூறினார். யோசுவா 7: 12-13.). அநேக நேரங்களில் சத்துருக்களுக்கு நாம் முதுகைக் காட்டி தோல்வியடைவதற்குக் காரணம் நமது பரிசுத்தமின்மையே. இஸ்ரயேல் மக்கள் அன்றைக்கு தேவ கட்டளைக்கு கீழ்ப்படிந்து, பாவத்தை விட்டு எழுந்து தங்களை பரிசுத்தம் பண்ணிக்கொண்டு சத்துருக்களுக்கு முன்பாக போரிட்டு ஜெயம் பெற்றார்கள். தோல்வியால் துவண்டு போயிருக்கும் உங்கள் வாழ்வில் ஜெயம் வேண்டுமா? முதலாவது உங்கள் பாவங்களை விட்டு எழுந்து உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் வெற்றி உங்களை தேடி வரும்.


ஜெபம்: எங்களை நேசித்து வழிநடத்தும் அன்பின் தகப்பனாம் இயேசுவே, உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் (1யோவான் 2:17) என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். தூய்மை இல்லாத உப்பை வெளியே கொட்டுவதைப் போல பரிசுத்தம் இல்லாதவர்களை அக்கினி கடலுக்கு நேராய் கொட்டிப் போடுவீரே. என்னிடத்தில் உள்ள அசுத்தமான இச்சையின் பாவங்களை அகற்றி விடும். இனிமேல் அதை நான் செய்ய மாட்டேன். எனக்கு பெலன் தனது நடத்தும்படியாய் இயேசுவின் நாமத்தில் ஜெபிகின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்.


கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில் 

சகோடரன் 

சிலுவை ராஜா 

தொடர்புக்கு 

9841711591.

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை