பிலேயாம்

 பிலேயாம் .

(எண்ணா 22:5)

பிலேயாம் ஒரு இஸ்ரவேலன் அல்ல. அவன் ஒரு சர்வதேச குறி சொல்லும் ஆசாரியன். 

மோவாவிய ராஜா பாலக் என்பவன் இவனால் மற்றவர்கள் மேல் சாபங்களை கூற முடியும் என்று நம்பினான்.(எண் 22:6).


பிலேயாம் தேவரின் சித்தம், ஆவி இவற்றாலும், பில்லி சூனியம், உச்சரிப்பு, மாயாஜால சாமர்த்தியம் ஆகியவற்றின் இரகசியங்களை குறித்த அறிவாற்றலினாலும் இதை செய்வான் என்று நம்பினான் பாலாக்.((எண் 22:2-7;24:1)


1)பிலேயாம் ஒரு காலத்தில் தேவனை உண்மையுடன் பின்பற்றும் இரட்சிக்கப்பட்ட ஊழியனாக இருந்திருக்கலாம். (எண் 22:18ஐ வாசிக்கவும்) பின்னர் தேவனை விட்டு பிரிந்து, (அதாவது பின்மாற்றத்தில் விழுந்து) குறி சொல்லும் ஆசாரியனாக ஆகியிருக்கலாம். 

(எண் 22:7;31:16; உபா 23:4-5;

2பேது 2:15;யூதா 11).


2)பாலக் கள்ள தீர்க்கதரிசிகள் போலவே பிலேயாமும், தேவனுடைய கனம் அல்லது தேவனுடைய மக்களின் பரிசுத்தம் ஆகியவற்றின் மீது உண்மையான அக்கறை இல்லாதவனாயிருந்தான். 

தேவனுடைய மக்களைச் சபிக்க முடியாமல், அவன் அவர்களை பாவத்துக்கும், ஒழுக்க நெறியற்ற பாவச்செயலான விபச்சாரத்துக்கும் வழி நடத்தினான்.

(எண் 25:1-6; 31:16;வெளி 2:15)

இதற்காக அவன் கொல்லப்பட்டான். 

(எண் 31:8; 25:2)


*என் தேவனாகிய கர்த்தர்.*

(எண் 22:18)

'என் தேவனாகிய கர்த்தர்'என்று பிலேயம் கூறுவது பல கடவுள்களை வழிபட்டது.

நீதியையல்ல, பணத்தையே விரும்பிப் பின் சென்ற ஒரு மனிதனுக்கு உதாரணமாகப் பிலேயாம் பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறான். 

(உபா 23:3-6; 2பேது 2:15,16;யூதா 11).


*அன்று ஒரு பிலேயாம் , இன்று அநேக பிலேயாம்கள்.*


*ஒரு தேவ ஊழியனுக்குள் பண ஆசை எப்போது வருகிறதோ அப்போது இந்த ஊழியங்கள் பேரம் பேசப்படும்.*


பணத்திற்காக தேவன் கொடுத்த ஊழியத்தை விட்டுவிட்டு, பல தேவையில்லாத ஊழியங்களை தொடங்குவது பண ஆசையே. 

குறிப்பாக ஒரு சுவிசேஷகன் அல்லது வேதாகம ஆசிரியர், எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறானோ அந்த வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் இடையில் சபை ஊழியம் ஆரம்பிக்கப்படுகிறது.

பிரபல சுவிசேஷகர், டிவி ஊழியர், தற்போது சபை ஆரம்பித்து விட்டார், சபை ஆரம்பிக்கப்படுவது நல்லது தான் ஆனால் உன்னுடைய அழைப்பு மாறுகிறதே 

தேவனுடைய அழைப்பு மாறாதே.

காரணம் நிரந்தர வருமானம் பண ஆசை.


சிலர் முதியோர் இல்லம், சிறுவர் சிறுமிகள் இல்லம் ஆரம்பித்து விடுகிறார்கள். 


இன்னும் சிலர் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், பெரிய பெரிய ஹோட்டல்கள், பயணிகள் தங்கும் விடுதிகள், உலகப் பிரகாரமான மீடியா, என பல ஆரம்பிக்கிறார்கள்.

யாரும் கேள்வி கேட்க கூடாது என கர்த்தர் சொன்னார் என்று சொல்லிவிடுவார்கள். 

இது எல்லாமே பண ஆசையினால்.... ஆரம்பிக்கப்பட்டவை.


இதேப் போலத்தான் பிலேயாம் குறி சொல்லுகிற ஒரு தொழிலுக்கு வந்து விட்டான்.

ஏனெனில் இங்கு நல்ல வருமானம். 

தேவ சன்னதியில் அம்மோனிய, மோவாபிய சந்ததி தேவ சமூகத்தில் வரக்கூடாது. (உபா 23:3) ஆனால் இவன்தான் பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கிறான். (எண் 22:7)

கிறிஸ்தவர்கள் அளந்து கொடுக்கிறார்கள். ஆனால் பாலாக் என்பவன் தாராளமாக கொடுக்கிறான்.

*அவர்களை நேசிக்கிறது போல,அவர்களுக்கு ஒரு  சூரிய வழிபாட்டு பண்டிகை திருச்சபை வளாகத்தில், உலகம் அறியும் படி மீடியாவில் ஒரு வாழ்த்து செய்தி. இனி பாலாக்கு போன்றோரின் காணிக்கை எங்கும் போகாது.* 


தேவனுடைய ஜனம் சபிக்கப்பட வேண்டும் என்பது பாலாக்கின் நோக்கம். அதை நிறைவேற்ற கூலிப் பேசிவந்தவன் பிலேயாம்.

இதெல்லாம் சபை ஆசீர்வதிக்கப்பட வேண்டும், தேவ ஜனம் ஆசீர்வதிக்கப்பட வேண்டும், என்பதெல்லாம் போய், தேசம்,நாடு, மாநிலம் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற ஜெபம் வந்துவிட்டது.

இதை ஒரு ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும். இது ஒரு வியாபாரம் என்று, பண ஆசையென்று.


பிலேயாமின் பண ஆசை தேவ ஜனத்தை விபசாரம் செய்ய, தேவன் படைக்கப்பட்ட பலிகளை புசிக்கவும், அவர்கள் அழிந்து போகவும் காரணமாயிற்று. 

(எண் 25:1-6)

இன்றைய மோவாபிய பெண்கள் யார் என்றால் சினிமா உலகம்தான். 

சில பிலேயம் போன்ற ஊழியர்கள் பாலாக் போன்ற தயாரிப்பாளர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேவனுடைய சபைக்குள் இப்படிப்பட்ட நபர்களை அழைத்துக் கொண்டார் கொண்டு வந்து பொய்ச்சாட்சி சொல்ல வைக்கவும், அவர்களுடைய சினிமாக்களையும், நாடகங்களையும் பார்ப்பதற்கு ஜெபித்து தயாரிக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு பிலேயம் ஜெபித்து படங்களை தயாரித்து வெளியிட்டார்கள் மிகப்பெரிய வெற்றி, அதை தயாரித்த பாலாக் டிவிகளிலும் மேடைகளிலும் சாட்சி பகிர்ந்து கொண்டார்.

நீங்கள் சினிமாவுக்கு போகாதீங்க என்று பாட்டு பாடியவர்கள் சினிமாவையே தயாரித்து என் ஜனத்தை தேவ ஜனத்தை பாவத்துக்குள் தள்ளுகிறார்கள். 


நான் சின்ன வயசுல இருந்து கேள்விப்படுகிறேன். சூரியனுக்கு படைக்கப்படுகிற ஒரு பண்டிகை தான் பொங்கல். அந்த சூரிய தேவருக்கு படைக்கப்பட்ட பலிகளை தேவ ஜனம் சாப்பிடும் படியாக, அதற்கு நன்றி சொல்லும் வாழ்த்துக்களை கவனித்து பாருங்கள்,

எசேக்கியேல் 8:16 ஆம் வசனம் அவர்கள் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.

பழைய உடன்படிக்கையில் எந்த பண்டிகையிலும் இனிப்பு சேர்க்கக்கூடாது.(லேவி 2:11)

இந்த பண்டிகை எல்லாமே கிறிஸ்துவைப் பற்றியது 

என பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார். 

(கொலே 2:16,17)


பண ஆசையினால் வேதத்தில் இல்லாத திட்டங்கள் வயிற்றுக்குள் இருக்கும் பிள்ளைக்கு கூட திட்டம். 

இந்தத் திட்டத்தை போட்டு பல கோடி சம்பாதித்து உலகம் முழுவதும் முதலீடு. 

காரணம் என்ன பண ஆசை. 


கொரியா தேசத்தில் மிகப்பெரிய ஊழியம் தன்னுடைய ஊழியத்தில் கிடைத்த பணத்தை எல்லாம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தார், அரசாங்கம் அவரை கைது செய்தது பல ஆண்டு கர்த்தரை பிரசங்கம் பண்ணக்கூடாது என்று சட்டம் போட்டது. 

எதினால் இது நடந்தது 

காரணம் பண ஆசை. 


 பிரபல ஊழியர் பல இலட்சங்களை வீட்டில் சேர்த்து வைத்திருந்தார். வருவாய்த்துறை அவருடைய வீட்டுக்கு வருகிறது என்பதை கேள்விப்பட்டு மிக வேகமாக வரும் பொழுது விபத்தில் இறந்தார். 

காரணம் பண ஆசை.


இப்படிப்பட்ட பல பிலேயம் போன்ற ஊழியர்கள், பாலாக் போன்ற அரசியல் தலைவர்களுடன் கைகோர்த்து அவர்களுக்கு முதலிடம் கொடுத்து தங்கள் காரியத்தை சாதித்து விடுவார்கள். 

சர்வதேச ஊழியத்தை செய்வார்கள். 

நான் சொல்லுகிறேன் ஒருநாள் இவர்கள் பிலேயாம் போல் அழிக்கப்படுவார்கள்.


பணத்தைப் பற்றிய புதிய ஏற்பாடு என்ன என்பதை நாம் அறிவோம். 


பணம் ஆசையிருக்கும் இடத்தில் கர்த்தர் இருக்க மாட்டார்.(எபி 13:5)


ஆனாலும் பரிசுத்த ஆவியானவர் வெளியரங்கமாய் சொல்வது 

கடைசி காலத்தில் பணப்பிரியர்கள்....

தேவபக்தியின் வேஷம்..

(2தீமோ 3 அதிகாரம்)


நீங்கள் யாரை தேடுகிறீர்கள்? 

கர்த்தரையா அல்லது 

பிலேயாமை போன்றவர்களையா ?


அவருடைய செயல்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள். 


அவர்களை விட்டு விலகி உங்கள் தேவனை நோக்கி பயணித்து செல்லுங்கள். 


உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தை எந்த உபதேசத்தையும் எதிர்த்து நில்லுங்கள். 

எதிர்த்து குரல் கொடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோடரன் 

சிலுவை ராஜா 










Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை