சாத்தானின் தந்திரங்களோடு
சாத்தானின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்க....
(எபே 6:11)
தீமையோடு கிறிஸ்தவர்களுக்கு எப்போதும் ஆவிக்குரிய போராட்டம் உண்டு.
இந்த ஆவிக்குரிய போராட்டம் ஒரு "விசுவாச போராட்டம்" என்று அழைக்கப்படுகிறது.
(2கொரி 10:4; 1தீமோ 1:18-19;6:12).
இனி வரப் போகும் வாழ்வில் பிரவேசிப்பது வரை இந்த போராட்டம் தொடரும்.
(2தீமோ 4:7,8;கலா 5:17)
1) விசுவாசியின் வெற்றியைக் இயேசு கிறிஸ்து சிலுவையில் தமது மரணத்தின் மூலம் அடைந்து விட்டார்.
இயேசு கிறிஸ்து சாத்தானுடனும், அவனுடைய சேனைகளுடனும் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தி, அவனுடைய தலையை நசுக்கி, வெற்றி கண்டார்.
தீய சக்திகள், அந்த கால அதிகாரங்கள் அனைத்தையும் செயலிழக்கச் செய்தார். (கொலோ 2:15;மத் 12:29:லூக்10:18;யோவா 12:31)
சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கினார்.(எபே 4:8)
விசுவாசியை சாத்தானின் பிடியிலிருந்து விடுதலை செய்தார். (எபே 1:7;அப் 26:18;ரோம 3:24;கொலோ 1:13,14).
2) இப்போதுள்ள நாட்களில்
கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் நடத்தும் ஒரு ஆவிக்குரிய போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
(ரோம 8:13)
அ) தங்கள் சரீரத்தில் உள்ள பாவ இச்சைகளுக் கெதிராக
(1பேது 2:11;கலா 5:17)
ஆ) இவ்வுலகச் சிற்றின்பங்களுடன் எல்லா வகையான சோதனைகளுடனும்
(மத் 13:22;கலா 1:4;யாக் 1:14,15;
1யோவா 2:16)
இ) சாத்தானுடனும் அவனுடைய சேனைகளுடனும் போராடுகிறார்கள். விசுவாசிகள் இன்றைய உலக அமைப்பிலிருந்து (குறிப்புகள்: அரசியல், ரசிகர் மன்றங்கள், தனிநபர் அடிமைத்தனங்கள், போராட்ட இயக்கங்கள், நக்சலைட், தீவிரவாத அமைப்புகள், மத சம்பந்தமான இயக்கங்கள் , சாதி சங்கங்கள்,)
இவைகளிலிருந்து தங்களை தனியாக பிரித்து விலகியிருக்குமாறு அழைக்கப்படுகிறார்கள்.
இவ்வுலகத்தின் தீமையை வெறுத்து (எபி 1:9) இவ்வுலகத்தின் சோதனைகளுக்குச் செத்து, அவைகளை மேற்கொள்ள வேண்டும். (கலா 6:14;1யோவா 5:4)
இவ்வுலகத்தின் பாவங்களை வெளிப்படையாகக் கண்டனம் செய்ய வேண்டும். (யோவ 7:7)
3) எல்லா தீமைகளையும் எதிர்த்து விசுவாசிகளான கிறிஸ்தவ வீரர்கள் போராட்டம் நடக்க வேண்டும். தங்கள் சொந்த வல்லமையுடனல்ல.
(2கொரி 10:3) ஆனால் ஆவிக்குரிய ஆயுதங்களை தரித்துக்கொண்டு யுத்தம் செய்ய வேண்டும்.
(எபே 6:10-18;2கொரி 10:4-5)
4) தங்கள் விசுவாச போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் "கிறிஸ்துவின் நல்ல போர் வீரர்களாக" துன்பங்களைச் சகிக்க வேண்டும்.
(2தீமோ 2:3)
நற்செய்திக்காகப் பாடுனுபவிக்க வேண்டும்.
(மத் 5:10-12; ரோம 8:17;2 கொரி 11:23; 2தீமோ 1:8)
விசுவாசத்தில் நல்ல போராட்டத்தைப் போராட வேண்டும். (1தீமோ 6:12; 2தீமோ 4:7)
யுத்தம் செய்ய வேண்டும்.
(2கொரி 10:3)
விடா முயற்சியோடு (எபே 6:18)
தோற்கடித்து (ரோமர் 8:37)
ஜெயங்கொள்ள வேண்டும்.
(1கொரி 15:57)
வெற்றி கொண்டு (2கொரி 2:14)
நற்செய்திக்காக போராடி
(பிலி 1:16)
விசுவாசத்தை காக்கப் பாடுபட்டு.(பிலி 1:28)
தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொண்டு (எபே 6:11)
சாத்தானுடைய பலத்த அரண்களை நாசம் செய்து
(2கொரி 10:4)
எந்த எண்ணத்தையும் சிறைப்படுத்தி (2கொரி 10:5)
யுத்தத்தில் வல்லவர்களாயிருக்க வேண்டும்.(எபி 11:34)
ஒவ்வொரு விசுவாசிகளும் தொடர்ந்து நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் தொடர்ந்து இந்த யுத்தத்தை செய்தால் மாத்திரமே நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் முடிவு பரியந்தம் நிலைத்து நிற்க முடியும்.
பிசாசானவன் எவனை விழுங்கலாமென்று சுற்றித் திரிகிறான்.
ஆகையால் ஆவிக்குரிய சர்வாயுதங்களை தரித்துக் கொண்டு போராடி வெற்றி பெறுவோம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன் சிலுவைராஜா
Comments