நமக்கு அடுத்து யார் ?
நமக்கு அடுத்து யார் ?
இந்த பூமியில் அநேகர் தேவனுக்காக ஊழியம் செய்கிறார்கள். கர்த்தருக்கு மகிமை உண்டாக்கட்டும்.
தேவனுக்காக மிகப்பெரிய அளவில் ஊழியம் செய்யக்கூடிய ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பலவிதமான ஊழியங்களை செய்கிறார்கள். மீடியா ஊழியம்,எழுத்து ஊழியம், போதக ஊழியம், டீச்சிங் ஊழியம், சமூக சேவை ஊழியங்கள், இப்படி பலவிதமான ஊழியங்களை மிக உற்சாகமாக செய்து வருகிறார்கள்.
ஆனால் இவர்கள் இன்னொரு காரியத்தை சிந்திப்பதில்லை
இவர்களுக்குப் பிறகு அதாவது தனக்குப் பிறகு இந்த ஊழியத்தை யார் செய்வார்கள் என்பதை முடிவு செய்யாமல் மரித்து போனவர்கள் அநேகர் ...
சிலர் தனது வாரிசுகளை ஏற்படுத்துகிறார்கள். ஒரு வெளித்தோற்றத்திற்காக பல கோடி சொத்துக்களை காப்பதற்காக சிலர் க்ரிட்டிகளாக தன்னுடைய சபையில் உள்ளவர்களை ஏற்படுத்தி வைக்கிறார்கள்.
வேதத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு ஊழியம் செய்த மோசே இவனுக்கு அடுத்து யார் வர வேண்டும் என்பதை தேவன் அருமையாக மோசேக்கு எடுத்து விளக்கினார். மோசேக்கு அடுத்து வரப்போகிற தலைவனுக்கு மோசே என்ன செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தார்.
மோசே தேவ திட்டத்திற்கு
கீழ்ப்படியாவிட்டால் தேவனுடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப் போல் ஆகிவிடும். (எண் 27:16,17).
ஆகையால் மோசே இருக்கும் பொழுதே சபையில் அடிக்கடி வந்து சபையை விசாரிக்க கூடிய ஒருவனை ஏற்படுத்த வேண்டும் என்று மோசே சொல்லும்பொழுது கர்த்தர் யோசுவாவை ஏற்படுத்த வேண்டும் என்றார்.(எண் 27:18,19).
அது மாத்திரமல்ல
*சபையார்
யோசுவாவுக்கு கீழ்ப்படிய வேண்டுமானால் மோசே யோசுவாவை கணப்படுத்த வேண்டும் அதனால் உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்கு கொடு என்றார்.*
(எண் 27:20)
இன்றைக்கு பல ஸ்தாபனங்களில் இணைந்து ஊழியம் செய்யும் ஒவ்வொரு ஊழியர்களையும் ஸ்தாபன தலைவர்கள் எவ்வாறு கனப்படுத்துகிறார்கள் இந்த சத்தியத்தில் அறிந்து கொள்ள முடியும். ஏனென்றால் இது ஒரு தனிப்பட்ட நபருக்காக ஆரம்பிக்கவில்லை தேவனுக்காக தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றும் படியாக ஆரம்பிக்கப்பட்டதாகும்.
இதேபோல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தனக்கு பிறகு 12 சீஷர்களை ஏற்படுத்தினார், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கனத்தை அதிகாரத்தை கொடுத்தார். (மத்தேயு 10:1)
அநேக ஊழியர்களுடைய மரணத்திற்கு பிறகு அவர்கள் ஊழியங்கள் தொடர்வதில்லை அத்தோடு முடித்து விடுகிறது.
அப்போஸ்தலன் பவுலுடைய ஊழியங்கள் அவனுக்குப் பிறகு தொடர்ந்தது பல நல்ல தலைவர்களை உருவாக்கி ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார். வரப்போகிற காலங்கள் கடுமையாக இருந்தாலும் அதை எதிர்த்து போராடக்கூடிய வருங்கால தலைவர்களை இருக்கும் தலைவர்கள் உருவாக்க வேண்டும், அதற்குரிய நல்ல சிந்தனையை தேவன் வெளிப்படுத்தும் படியாக நாம் தொடர்ந்து ஜெபிப்போம்.
சிலர் தாவீதைப் போல தேவனுக்கு ஏற்றவனாக ஊழியம் செய்யலாம்.
ஆனால் அவனுடைய பிள்ளைகள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இன்றைக்கும் இந்த ஊழியத்தில் தேவனுடைய இருதயத்தை அறிந்து ஊழியம் செய்யக்கூடிய தாவிது போன்ற ஊழியர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஊழியர்களுடைய பிள்ளைகள் அதற்கு தகுதியானவர்களா ?
சிலர் சொத்துக்களை காப்பதற்காக இப்படிப்பட்ட பிள்ளைகளை ஏற்படுத்தி வைத்து விட்டு சபையை மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல ஆக்கி விடுகிறார்கள்.
நம்முடைய உடைமைகள் சொத்துக்கள் எப்படி வந்தது என்பதை ஒவ்வொரு ஊழியர்களும் நன்றாக அறிவார்கள். ஆகையால் சபையின் மேல் கண்ணை வைத்து மோசையைப் போல இஸ்ரவேலரின் மத்தியில் ஒரு யோசுவாவை கண்டுபிடித்தது போல அல்லது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை போல 12 சீஷர்களை கண்டுபிடித்தது போல அப்போஸ்தலன் பவுல் தீமேத்தேயு தீத்துவை கண்டுபிடித்தது போல
கண்டுபிடிக்க தேவன் கிருபை தருவாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments