கள்ள அப்போஸ்தலர்கள்

கள்ள அப்போஸ்தலர்கள்.

அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.

(2 கொரிந்தியர் 11:13)


பெரிய தந்திரவாதியான சாத்தான் (2கொரி 11:3;யோவா 8:44) தீய எண்ணம் கொண்ட மக்களைக் "கள்ள தீர்க்கதரிசிகளாகவும், கபடமுள்ள வேலையாட்களாகவும்" மாற்றி தன் பிரதிநிதிகளாக உபயோகிக்கிறான். 


பரிசுத்த வேதாகமம், இப்படிப்பட்ட கபடமுல்ல தலைவர்களை சாத்தானால் சக்தி பெற்றவர்கள் என்று சொல்லுகிறது. 

இவர்கள், 


அ) தேவனுக்காக பெரிய காரியங்களை நிறைவேற்றுகிறவர்கள் போல தோற்றமளிக்கிறவர்களாக 

(2கொரி 11:15; வெளி 13:2)


ஆ) கவர்ச்சிகரமான சுவிசேஷச் செய்தியைப் போதிக்கிறவர்களாக 

(2கொரி 11:4; 1தீமோ 4:1)


இ) நீதிமான்களைப் போல தோற்றமளித்தாலும், உண்மையில் தேவபக்தியை புறக்கணிக்கிறவர்களாகவும், அதன் வல்லமையை மறுதலிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.(2தீமோ 3:5)


2) இப்படிப்பட்ட மக்கள் "கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலர் " போலவும் "நீதியின் ஊழியக்காரர்" போலவும் வேஷம் தரித்துக் கொள்கிறார்கள்.

(2கொரி 11:15) இவ்வாறாக *அவர்கள் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரரைப் போல , தங்கள் செய்தியின் ஒவ்வொரு பகுதியிலும் "தேவபக்தியுள்ளவர்களின் வேஷத்தை "ப் புகுத்தி மாய்மாலம் பண்ணுகிறார்கள்.* 

(2தீமோ 3:5). அவர்கள் *உண்மையாகவே கரிசனையுடனும், அன்புடனும் இருந்து, பாவமன்னிப்பு, சமாதானம், நிறைவு, அன்பு, மேலும் அநேக பயனுள்ள காரியங்களைப் போதிப்பார்கள். ஆனால் அவர்கள் சாத்தானின் கட்டுக்குள் வாழ்கிறார்கள்.* 

*அவர்களுடைய சுவிசேஷம் அநேகமாக மனிதரின் பகுத்தறிவினால் உண்டானதாயிருக்கிறதே ஒழிய வேத வாக்கியங்களில் காணப்படும் தேவனுடைய வெளிப்பாட்டின் ஒரு உண்மையான விளக்கம் அல்ல.*  (கலா 1:6-7; 1பேது 2:1-3) அவர்களுடைய செய்தி புதிய ஏற்பாட்டு அப்போஸ்தல உபதேசத்துக்கு விலகினதாயுள்ளது.

(1 யோவான் 4:1)


3) எல்லா திருச்சபையின் விசுவாசிகளும் இப்படிப்பட்ட வழி விலகிய ஊழியக்காரருக்கும், தலைவர்களுக்கும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.(2கொரி 11:3-4;மத் 7:15;16:6)

அவர்களுடைய பக்தி, சாதுரியமான பேச்சு, கல்வி, அற்புதங்கள் எண்ணிக்கை அளவிலுள்ள பிரசித்தி பெற்ற செய்திகளைக் கண்டு ஏமாந்து விடக்கூடாது.

*இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் இரட்சிப்பு வரும் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லும் பொழுது ...*

*இவர்களோ நம்முடைய ஜெபத்தினால் இரட்சிப்பு வரும் மீட்பு வரும் என்று சொல்லுவார்கள்.*

இவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். 

(எபே 2:8,9)


4) மார்க்கத் தலைவர்கள் எல்லோரும் இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தினால் உண்டாகும் மீட்பைக் குறித்தும், கிறிஸ்துவினாலும், புதிய ஏற்பாட்டு எழுத்தாளராலும் அருளப்பட்ட சுவிசேஷத்தை குறித்தும், அவர்கள் கொண்டுள்ள மனப்பான்மைக்கும், உண்மையான விசுவாசத்துக்கும் தக்கதாய் நிதானிக்கப்பட வேண்டும். 

(கலா 1:9)


தொடர்ந்து வேதத்தை கவனித்து அதன்படி கவனமாய் நடக்கும் முயற்சி செய்யுங்கள் அப்பொழுதுதான் நீங்கள் தப்பிக்கப்படுவீர்கள்.

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் சிலுவை ராஜா 


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை