காணிக்கை வாங்காமல்
அவருடைய நாமத்தின் நிமித்தம் புறஜாதியாரிடத்தில் காணிக்கை வாங்காமல்
(3 யோவான் 7)
பட்டணங்கள் தோறும் பிரயாணஞ்செய்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தினை அறிவித்து வந்த ஊழியர்களை குறித்து கூறப்பட்டுள்ளது.
சுவிசேஷ பணிக்கும் அதன் தேவைகளுக்கும் தங்களை அர்ப்பணிப்பது, தேவனுடைய பிள்ளைகளுக்கு கிடைக்கும் சிலாக்கியமும், கணமும் ஆகும்.
1) சுவிசேஷகர்களை அங்கீகரித்தல், அவர்களைத் தாங்குதல், மற்றும் அவர்களைப் பணிக்கு அனுப்புதல் ஆகியவைகள் தேவன் அங்கீகரிக்கும் வகையில் செயல்படுதல் வேண்டும். (3யோவா 5,6; 1கொரி 9:14;பிலி 4:10-18).
சுவிசேஷர்களைப் பிச்சை கேட்பவர்களைப் போல கருதாமல், அவர்களை தேவனை ஏற்றுக் கொள்வது போல ஏற்றுக்கொண்டு (மத் 10:40) உலகத்திற்கு சுவிசேஷத்தை பிரஸ்தாபிக்கும் கிறிஸ்து இயேசுவினுடைய சேவகர்களாக என்ன வேண்டும்.(மத் 28:19)
2) ஆதிசபையில், சுவிசேஷர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது அவர்களுக்கு தேவையான உணவு, பிரையான செலவுகள் மற்றும் சகல இதர தேவைகளுக்கான பணத்தினையும் கொடுத்து அனுப்புவார்கள். அது அவர்களுக்கு போதுமானபடி இருந்தது. (கலா 6:6-10;பிலி 4:16) ஆகிய வசனங்களை பார்க்கவும். விதமாக சுவிசேஷர்களோடு இணைந்து அவர்களை தாங்கினதின் மூலம் தேவ பிள்ளைகள் சுவிசேஷத்தினை விரிவடைய செய்வதற்கு உதவியாக இருந்தனர்.
(3யோவா 8)
*"புற ஜாதியாரிடத்தில் ஒன்றும் (காணிக்கை) வாங்காமல்..."*
(3 யோவான் 7).
கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்களுக்கு ஒரு வைராக்கியம் இருக்க வேண்டும். பிற இடங்களுக்கு சென்று சுவிசேஷ பணியில் ஈடுபடும் சுவிசேஷர்கள், தாங்கள் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்த எண்ணும் புறஜாதியாரிடம் இருந்து எந்த வித உதவிகளையும் பெற மறுக்க வேண்டும். அவர்களிடம் உதவிகளை பெறுவது, சுவிசேஷ பணிக்கு தடையாய் அமைய நேரிடும்.
மேலும் பண ஆதாயத்திற்காய் ஊழியஞ் செய்கிறவர்கள் என்கின்ற குற்றச் சாட்டினையும் பெற நேரிடும். (1கொரி 9:12).
எனவே சுவிசேஷ ஊழியஞ் செய்பவர்கள் சபையின் மூலமாகவோ அல்லது தனிப்பட்ட விசுவாசிகளின் மூலமாகவோ மட்டுமே உதவியை பெறுதல் வேண்டும்.
(லூக் 10:7; 1கொரி 9:14,15;1தீமோ 5:18)
நம்முடைய சபையில் நடைபெறும் சுவிசேஷ வேலையினை நாம் தாங்கும் பொழுது, இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தையை நினைவில் கொள்ள வேண்டும்.-"தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக் கொள்கிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலான அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக் கொள்கிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். (மத் 10:41)
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments