கீழ்ப்படியாமைக்கே தண்டனை உண்டு

 கீழ்ப்படியாமைக்கே தண்டனை உண்டு

(1இரா 13)


இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்ட தீர்க்க தரிசனம் யோசியா பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்டது. இது நிறைவேறியதைக் காண 

(2இரா 23:15-20 வசனங்களைப் பார்க்கவும்)


தேவனுடைய செய்தியை மக்களுக்கு அறிவிக்கிறவன் என்ற நிலையில், தேவனுடைய கட்டளைகள் முழுவதுமாக கீழ்ப்படிய வேண்டிய கட்டாயம் தேவ ஊழியர்களுக்கும் மற்றும் தீர்க்கதரிசிக்கும் உண்டு. 

இங்கு, இந்த தீர்க்கதரிசி பின்னால் தேவனுடைய கட்டளையை மீறியபடியால், மரணமடையும் நிலை ஏற்பட்டது. (1இரா 13:11-24)

சில ஊழியர்கள் சடுதியில் அழிந்து போவதற்கு காரணமே அவர்களுடைய கீழ்படியாமையே.


*கர்த்தருடைய வார்த்தையை மீறி*


இன்றைய விசுவாசிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்படி, பெயர் குறிப்பிடப்படாத ஒரு தீர்க்கதரிசியின் வரலாறு பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. 

(1கொரி 10:1-13).


1) ஒரு விசுவாசியின் வாழ்க்கை குறித்த தேவனுடைய சித்தமே எல்லா காரியங்களிலும் அவனால் கீழ்ப்படியப்பட வேண்டியதாகும். 

*உலகில் உள்ள புகழ்பெற்ற தேவ ஊழியர்களின் போதனைகளும், வார்த்தைகளும் அல்லது தேவ தூதர்கள் கூறும் வார்த்தைகளும் இயேசு கிறிஸ்து, அப்போஸ்தலர்கள் இவர்களுடைய மூல நற்சாட்சி பெற்ற பரிசுத்த வேதாகம போதனைகளுக்கும் தரங்களுக்கும் முரண்பாடாக இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது.* 

(1கொரி 14:29;கலா 1:8,9;1யோவான் 4:1)


2) முதலில் தேவனுக்கு உண்மையுடன் உழைத்து, ஊழியம் செய்த போதிலும், தேவன் கட்டளையிட்டிருக்கும் கற்பனை வார்த்தைகள் மீறப்பட்டால், அந்த கீழ்படியாமைக்குத் தண்டனை நிச்சயமாகக் கிடைக்கும்.

(1இரா 13:20-25)


3) ஒரு விசுவாசி கர்த்தருடைய வார்த்தையைக் குறித்து கவலையீனமான மனப்பான்மையோடு இருப்பானால், அது அவனுடைய(அவளுடைய )

அழிவுக்கேதுவான நிலைமையாகும்.

தேவனுடைய மக்கள் தோல்விக்கு இன்னொரு காரணம், தேவனுடைய வார்த்தையை, ஜீவன் அல்லது மரணத்துக்கு ஏதுவானது என்று எடுத்துக்கொண்டு, பயத்துடன் கீழ்படியாததேயாகும்.

(ஆதி 3:4)


4) தம்முடைய வார்த்தைகளைப் பிரகடனப்படுத்த தேவன் நியமித்துள்ள ஊழியர்கள், தேவனுடைய கட்டளைகளுக்கு மிகவும் உண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் தேவன் விரும்புகிறார். 

(1தீமோத் 3:1-11;தீத் 1:5-9;யாக் 3:1) அவர்கள் தேவனுடைய மக்களுக்கு முன்பாக முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.


ஒரு உண்மை ஊழியன் இன்னொரு ஊழியனாள் வஞ்சிக்கப்பட்டு, தேவனுடைய சத்தத்திற்கு கீழ்ப்படியாமல் மரித்துப் போனான்.

ஒரு சிங்கம் அவனை கொன்றது. 

(1இரா 13:24) என வாசிக்கிறோம்.

பிரபலமானவர் தான், வயதானவர் அனுபவம் நிறைந்தவர் அவர் சொல்வதெல்லாம் சரியாக இருக்கும் என்று மாத்திரம் நினைக்காதே 

உன் கையில் தந்த வேதத்தோடு ஒப்பிட்டு பார். 

எதை எதையோடு சம்பந்த படுத்துகிறார். 

எந்த கதையை எதோடு பொருத்துகிறார் என்பதை எல்லாம் நீ புரிந்து கொண்டால் தான் நீ தேவனுடைய சத்தத்திற்கு செவி கொடுக்க முடியும். 

 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோடரன் 

சிலுவை ராஜா 



Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை