நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள்.
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள்.
(1கொரி 3:16,17)
இங்கு வலியுறுத்தப்படுவது என்னவென்றால் அனைத்து விசுவாசிகளும் அடங்கிய முழுச்சபை தேவனுடைய ஆலயமாகவும் ஆவியானவர் வசிக்கும் வாசஸ்தலமாகவும் உள்ளது உள்ளாது.
(1கொரி 3:9; 2கொரி 6:16; எபே 2:21).
ஒரு பொல்லாத சமுதாயத்தின் மத்தியில் தேவனுடைய ஆலயமாக இருக்க வேண்டும்.
அவர்கள் கொரிந்துவிலுள்ள தேவனுடைய பிள்ளைகள்,
அந்த சமுதாயத்தில் நிலவிய தீய காரியங்களில் பங்கு கொள்ளக்கூடாது. ஆனால் எல்லா வடிவத்திலும் வரக்கூடிய தீய ஒழுக்கத்தை முற்றும் வெறுத்துத் தள்ள வேண்டும். தேவன் பரிசுத்தராயிருக்கிறது போல, தேவனுடைய ஆலயமும் பரிசுத்தமாயிருக்க வேண்டும்.
(1கொரி 3:17; 1பேதுரு 1:14-16;)
*அவனை தேவன் கெடுப்பார்*
(1கொரி 3:17)
கிறிஸ்துவின் சபையைக் கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்புள்ளவர்களுக்கு புதிய ஏற்பாட்டிலுள்ள பலத்த எச்சரிக்கைகளில் ஒன்றை பவுல் அப்போஸ்தலன் கொடுக்கிறான்.
இந்த பகுதி போதனை செய்கிற, தலைமைத்துவம் வகிக்கிற எல்லாருக்கும் விசேஷமான சம்பந்தம் உள்ளதொன்றாகும்.
யாராகிலும், தேவனுடைய ஆலயத்தைத் தீட்டுப் படுத்தினாலோ அல்லது கெடுத்தாலோ (அதாவது ஒரு ஸ்தல சபை கூட்டத்தையோ அல்லது சபை கூட்டங்களின்) குழுவையோ), தேவன் தாமே அந்த தனிநபரை பயங்கரமான அழிவினாலும், நித்திய மரணத்தினாலும் தண்டிப்பார். மக்கள் கிறிஸ்துவின் சபையை கீழ்க்கண்டவாறு கெடுக்கவும் அழிக்கவும் செய்கிறார்கள்.
1) விபச்சாரத்தில் ஈடுபடுதல்
(1கொரி 5:1);
2)பொய்கள் கூறுதல், ஏமாற்றுதல், சுயநலமான ஆசைகள், (1கொரி 3:3; அப் 5:1-5);
3) தவறான உபதேசம், அப்போஸ்தலரின் வெளிப்பாடுகளைப் புறக்கணித்தல், வேத வாக்கியங்களின் சத்தியத்தை அசட்டை பண்ணுதல்.
(1தீமோ 4:1;யூதா 4)
4) சபையினருக்குள் உள்ள பாவத்தையும் உலகப்பற்றையும் அங்கீகரித்தல்
(1கொரி 5:1-2, 5-7; வெளி 3:17);
5) உலக ஞானத்தினால் அல்லது திரித்துக் கூறப்படும் சுவிசேஷத்தினால் சபையை கட்டும் முயற்சி எடுத்தல்.
(1கொரி 1:18-2:5; பிலி 1:15-16).
இந்த ஐந்தாவது குறிப்பு மிகவும் முக்கியமானது.
இது அநேக பிரசங்கிமார்கள் ஞானம் என்கிற ஆயுதத்தை எடுத்துக் கொண்டார்கள்.
அதை வைத்து ஆத்மா ஆதாயம் செய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
தன்னை சகலத்தையும் அறிந்த பெரிய ஞானி போல் பிரசங்கிக்கிறார்கள்.
ஆனால் தேவனோ....
எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், *பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.*
(1 கொரிந்தியர் 1:21)
தொடர்ந்து வேத வசனங்களை வாசியுங்கள். ஆவிக்குரிய வாழ்க்கையில் தெளிவடையுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
Comments