பிலேயாம் 2
பிலேயாம்
என்பது பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு தீர்க்கதரிசி. மற்றும் குறி சொல்லுகிறவன். இவன் யூப்ரடீஸ் நதிக்கரையில் பெத்தோர் என்ற இடத்தில் வாழ்ந்த பெயோரின் மகன். மோவாபியர்கள் மற்றும் மீதியானியர்கள் இவனை சூதாட்டக்காரர் மற்றும் தீர்க்கதரிசி என கருதினர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து அநேக தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தார்கள்.
அதில் பிலேயாம் என்ற தீர்க்கதரிசியும் ஒருவன்.
(எண் 24:17 ).
பாலாக் எனக்கு வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும் சிறிய காரியம் ஆனாலும் பெரிய காரியம் ஆனாலும் செய்யும் பொருட்டு என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை மீறக்கூடாது என்று சொல்லி தேவனுக்குள்ளாக மிக வைராக்கியமாக இருந்தான்.
(எண் 22:18)
நீதிமானை போல மரிக்க வேண்டும் என்றும் அவர்களின் முடிவை போல் அவனுடைய முடிவும் இருக்க வேண்டும் என்றும் வாயினால் அறிக்கை செய்தான்.
(எண் 23:10).
அதுதான் அவனுடைய ஆசையாகவும் இருந்தது. கடைசியில் பட்டையத்தினால் கொலை செய்யப்பட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அவனைக் கொலை செய்தார்கள். துன்மார்க்கனை போல் மரித்தான். (எண் 31:8)
ஒரு தீர்க்கத்தரிசியை இஸ்ரவேல் மக்கள் ஏன் பட்டயத்தினால் கொலை செய்தார்கள்.?
கொலை செய்யப்பட காரணம் என்ன?
புறஜாதிகளிலிருந்து அழைக்கப்பட்டு வல்லமையாக பயன்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி தான் பிலேயாம்.
அப்படிப்பட்டவனுடைய வாழ்க்கையில் நடந்தது என்ன ?
இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்கு காரணம் என்ன ?
பிலேயாம் யாரை ஆசீர்வதிக்கின்றானோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். யாரை சபிக்கின்றானோ அவர்கள் சபிக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள்.
இப்படிப்பட்ட ஒரு அபிஷேகம் அவன் தலையின் மேல் இருந்தது. பரலோக தேவன் ஒரு தேசத்தையோ, ஒரு பட்டணத்தையோ, ஒரு மனிதனையோ ஆசீர்வதிக்க நினைத்தாலும் அல்லது சபிக்க நினைத்தாலும் பிலேயாமை அனுப்பி ஆசீர்வதிப்பார் அல்லது சபிப்பார் இப்படி அவனுடைய நாட்களில் பயன்படுத்தப்பட்டான்.
(எண் 22:6)
இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி கானானை நோக்கிப் பயணம் செய்தார்கள். அந்த பயணத்தின் போது மோவாபின் சமனான வெளிகளில் பாளையம் இறங்கினார்கள். இதைக் கண்ட மோவாபின் இராஜாவும் அவனுடைய மக்களும் மிகவும் பயந்து கலங்கினார்கள். மாடு எப்படி வெளியில் உள்ளே மேய்ந்து போடுகின்றதோ, அப்படியே இவர்களும் தேசத்தை மேய்ந்து போடுவார்களே என்பதுதான் அவருடைய கலக்கத்திற்கு முக்கியமான காரணமாகும்.
(எண் 22:4)
இன்றைக்கும் தேவனால் மீட்கப்பட்ட ஜனங்களைக் கண்டு ஒரு கூட்டம் பயந்து கலங்கிக் கொண்டே இருக்கிறது. இரட்சிக்கப்பட்ட ஜனங்களை எப்படி ஒடுக்கலாம், எப்படி கட்டுப்படுத்தலாம், எப்படிப்பட்ட சட்டதிட்டங்களை கொண்டு வரலாம் என முயற்சி செய்து கொண்டே இருக்கிறது, இதை நாம் நன்கு அறிவோம்.
ஒரு மனிதனை அழிக்க முடியவில்லை என்றால், முதலில் ஆவியில் ஒரு தாக்குதலை நடத்தின பின்பு, அந்த மனிதனை முறியடிப்பது பிசாசின் தந்திரங்களில் ஒன்றாகும்.
இன்றைய நாட்களில் தன்னைவிட வலிமை உள்ளவர்களை அழிப்பதற்கு முதலில் மாந்திரீகம், பில்லி சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றினை செய்து ஆவியில் ஒரு தாக்குதலை நடத்தி, அவர்களை அழிப்பார்கள். இதை நாம் அறிந்திருக்கிறோம் பார்த்தும் இருப்போம், காதுகளில் கேட்டிருப்போம்.
அதேபோல் மோவாபும் இஸ்ரவேல் மக்களை அழிக்க வகை தேடினான்.
நேரடியாக அவனால் முடியாது. முடியவே முடியாது. எனவே முதலில் பிலேயாம் தீர்க்கதரிசியை அழைத்து அவனை கொண்டு அவர்களை சபித்த பின்பு, யுத்தம் செய்து அவர்களை முறியடிக்க வேண்டும் என்பது அவனுடைய ரகசிய திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் படி பிலேயாமை அழைத்து வரும்படி தன்னுடைய ஸ்தானதிபதிகளை பெத்தூருக்கு அனுப்பினான். அவர்களும் சென்று பிலேயாமிடம் பாலாக்கின் திட்டங்களை விரிவாக விளக்கி கூறினார்கள். அவனோ, அன்று இரவு இங்கே தங்கியிருங்கள். தேவனிடம் நான் விண்ணப்பம் செய்வேன்; அவர் உத்தரவு கொடுத்தால் மட்டுமே வருவேன்; இல்லை என்றால் அங்கே வரமாட்டேன் என்று கூறினான். ஸ்தானாதிபதியாக சென்ற பாலாக்கின் பிரபுக்கள் அங்கே இரவு தங்கினார்கள்.
(எண் 22:8)
இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து, உன்னிடத்தில் தங்கியிருக்கும் மனிதர்கள் யார் என்று கேட்டார். எல்லாவற்றையும் பிலேயாம் தேவனிடம் கூறினான். அதற்கு தேவன் அவர்களோடு போகவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று தன்னுடைய பரிபூரணத் திட்டத்தினை வெளிப்படுத்தினார்.
(எண் 22:12)
கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்த பிலேயாம் காலமே எழுந்து, மோவாபின் உறவுகளை அவர்களுடைய தேசத்திற்கு அனுப்பி விட்டான். அவர்கள் பாலாக்கினிடத்தில் சென்று, நடந்தவற்றை விவரித்துச் சொன்னார்கள். இன்னும் அதிக பணத்தையும், கனத்தையும் எதிர்பார்க்கின்றான் என்று நினைத்த பாலாக், மறுபடியும் அதிக கனவான்களான பிரபுக்களை அவனிடத்தில் அனுப்பி, உன்னை மிகவும் கணம் பண்ணுவேன்; நீர் சொல்வதெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களை சபிக்க வேண்டும் என்று சொல்லச் சொன்னான். அவர்களும் அவனிடத்தில் வந்து பண ஆசையை தூண்டினார்கள்.
(எண் 22:17)
எப்பொழுதுமே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய பரிபூரண சித்தம் அல்லது திட்டம் வெளிப்பட்ட பின்பு அதற்கு அப்படியே முழு மனதோடு கீழ்ப்படிய வேண்டும்.
மறுபடியும் மறுபடியும் தேவ திட்டம் என்ன என்று கேட்டு ஜெபிக்க கூடாது அப்படி ஜெபிப்பது இருதய கடினத்தையும், தேவனுடைய பரிபூரண சித்தத்திற்கு கீழ்ப்படிய முடியாத நிலைமையத்தான் குறிக்கும்.
அங்கே செல்லக்கூடாது என்பது தேவனுடைய பரிபூரண சித்தம் என்பது பிலேயாமுக்கு மிக நன்றாக தெரியும். ஆனாலும் பணம் ஆசைக்கு இடம் கொடுத்து, கர்த்தர் இனி என்ன சொல்லுவார் என்பதனை அறிய, மறுபடியும் தேவ சமூகத்திற்கு சென்றான். இதுவே அவனுடைய வாழ்க்கை ஏற்பட்ட முதல் பின் மாற்றம் ஆகும்.
(எண் 22:19)
பண ஆசையினால் அஅவனுடைய இருதயம் கடினப்பட்டதை அறிந்த தேவன், அந்த மனிதர்கள் உன்னை கூப்பிட்டால், நீ எழுந்து அவர்களுடன் செல். ஆனாலும் நான் உனக்கு சொல்லும் வார்த்தையின்படியே சொல்ல வேண்டும் என்று கட்டளைக் கொடுத்து அனுப்பினார்.
இது அனுமதிக்கப்பட்ட சித்தமாகும். காலமே எழுந்து பிலேயாம் மிக ஆசையாக கழுதையின் மேல் சேணங் கட்டி, இரண்டு வேலைக்காரர்களை தன்னுடன் கூட்டிக்கொண்டு, மோவாபின் பிரபுக்களோடு அவர்களுடைய தேசத்திற்கு புறப்பட்டான்.
தேவனுடைய பரிபூரண சித்தத்தினை விட்டு விலகி, தேவனுடைய பிள்ளைகளை சபிக்க செல்லுகின்ற பிலேயாமை பார்த்த தேவனுக்கு கோபம் மூண்டது. எனவே, கர்த்தருடைய தூதனானவர் உறவினர் பட்டயத்தினை பிடித்துக் கொண்டு அவனுக்கு எதிராளியாக வந்து நின்றார். இதைக் கண்ட கழுதை வழியை விட்டு விலகி விலகி சென்றது.
வழி விலகிச் சென்ற கழுதையை தன் வழிக்கு கொண்டுவர மூன்று முறை கழுதையை அடித்தான். உடனே கழுதையின் வாயை திறந்தார் தேவன். அது அவனோடு பேசி அவனுடைய மதிக்கேட்டை உணர்த்தியது.
உணர்வடைந்த பிலேயாம் முகம் குப்புற விழுந்துப் பணிந்தான். நான் பாவம் செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராளியாக நிற்கின்றதை அறியாதிருந்தேன். இப்பொழுது உமது பார்வைக்கு தகாததாயிருக்குமானால் நான் திரும்பி போகிறேன் என்று கூறினான்.
பிலேயாமைக் கொண்டு இஸ்ரவேல் மக்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்றும், தேவனுடைய பிள்ளைகளை சபிக்க நினைத்த மோவாபியரையும், மோவாப் தேசத்தையும் சபிக்க வேண்டும் என்று திட்டம் போட்ட தேவன், மனிதர்களோடு போ; நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளை மாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்று சொல்லி அனுப்பினார். அவன் பாலாக்கின் பிரபுக்களோடு மோவாப் தேசத்திற்கு சென்றான்.
(எண் 22:35)
பிலேயாமின் வருகையை மிக ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாலாக் அவனை வரவேற்க தன் தேசத்தின் கடைசி எல்லை வரைக்கும் எதிர்கொண்டு போனான். அவனை வரவேற்று மிகவும் கணம் பண்ணினான். வார்த்தையிலும் கணம் இருந்தது. கிரியைகளிலும் கனமிருந்தது. ஆடு, மாடுகளை அடித்து உச்சிதமான உணவுகளைக் கொண்டு, விருந்து செய்து அவனை மிகவும் கணப்படுத்தினான்.
மறுநாள் காலமே இஸ்ரவேல் மக்களை சபிப்பதற்காக பாலாக் பிலேயாமை கூட்டிக்கொண்டு, பாகாலுடைய மேடுகளுக்கு சென்றான். அங்கிருந்து இஸ்ரவேல் மக்களுடைய கடைசி பாளையத்தைப் பார்த்த பிலேயாம், அங்கேயே ஏழு பலிபீடங்களை கட்டி, ஏழு காளைகளையும், ஏழு ஆட்டு கடாக்களையும் ஆயத்தப்படுத்தம்படிச் சொன்னான்.
அதன்படி பாலாக் ஆயத்தப்படுத்தினான். இருவரும் சேர்ந்து ஒவ்வொன்றாக பலியிட்டார்கள்.
அப்பொழுது பிலேயாமை சந்தித்த தேவன் இஸ்ரவேல் மக்களை சபிக்க அனுமதி கொடுக்காமல் ஆசிர்வாதத்தை சொல்லக் கட்டளையிட்டார்.
பிலேயாமும் வாயைத் திறந்து அவர்களை ஆசீர்வதித்தான். இதைக் கண்ட பாலாக்கிற்கு கடுமையான கோபம் உண்டது. அவர்களை சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன். நீரோ அவர்களை ஆசீர்வதிக்கின்றீரே என்று கூறினான்.
இப்படியாக மூன்று முறை அவர்களை சபிக்க சொன்னான். ஆனால் அவனோ மூன்று முறை இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்தான். சாபத்தை ஆசீர்வாதமாக தேவன் மாற்றினார்.
முதலில் பிலேயாமுக்கு ராஜ மரியாதை கிடைத்தது.
வாரும், போரும், நீர் என்ன மரியாதையோடு கூப்பிட்டார்கள். பாலாக்கும் அப்படியே கூப்பிட்டான். ஆனால் தேவனுடைய சித்தத்தின்படி இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிப்பதை கண்டவுடன், அவனுக்குரிய மரியாதையை அப்படியே குறைத்து விட்டான். கையோடு கைதட்டி கூப்பிடுவதும், வா, போ என்று ஒருமையில் பேசுவதுமாக இருந்தான்.
சமுதாயத்திலும் மற்ற மனிதர்களிடத்திலும் நல்ல கனத்தோடும், மரியாதையோடும் இருந்துவிட்டு, பின்பு கணம் மரியாதை குறைவு என்றால் எல்லாராலும் சகிக்க முடியாது. அதைத் தாங்கிக் கொள்ளவும் முடியாது. இழந்துபோன கனத்தையும், மரியாதையையும் எப்படியாவது திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மனது துடித்துக் கொண்டே இருக்கும். அது போல தான் பிலேயாமுக்கு முதலில் நல்ல மரியாதை கனம் கிடைத்த இடத்தில் இப்பொழுது கிடைக்கவில்லை. எனவே மறுபடியும் பெற்றுக்கொள்ள நினைத்தால் அதை எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்று பலவாறு யோசித்தான். இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க தேவன் அனுமதி கொடுக்கவில்லை இனியும் அனுமதிக்க மாட்டார். ஆகையால் ஒரு தந்திரமான யோசனையை பாலாக்கினிடத்தில் இரகசியமாக சொல்லிவிட்டு தன் தேசத்திற்கு சென்று விட்டான்.
அவன் சொன்ன யோசனையின்படி மோவாபியர்கள் செய்தார்கள். இதனால் இஸ்ரவேல் மக்களில் 24 ஆயிரம் பேர் வாதையினால் செத்தார்கள்.
(எண் 25:9) தேவனுடைய பிள்ளைகளின் கோபம் பிலேயாம் மீது மூண்டது
அவனைக் பட்டயத்தினால் வெட்டி கொண்டு போட்டார்கள். நீதிமானாக மரிக்க வேண்டியவன் துன்மார்க்கனாக மரித்தான். ஆண்டவருக்காக வைராக்கியமாக இருந்தவனுடைய முடிவு மிகவும் பரிதாபமாக இருந்தது. பிலேயாம் வீழ்ச்சி அடைந்தான்.
இன்றும் தீர்க்கதரிசனம் உரைத்தார் அது அப்படியே நிறைவேற்றி என்று கூட சொல்லலாம்.
இங்கே முடிவு தான் முக்கியம்
எப்படி வாழ்ந்தான் என்பதை விட வாழ்வின் முடிவு முக்கியமானது.
அந்தோ பரிதாபம் பிலேயாம் முடிவு
நீ வாசிக்கும் போது எதை விட வேண்டுமோ அதை விட்டு விடுங்கள்.
தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி முடிப்பதற்கு கவனம் செலுத்துங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார ாக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்பு
9841711591.
Comments