வியாபாரிகளை துரத்தி

 வியாபாரிகளை வெளியே துரத்தி.

(லூக் 19:45;யோவா 2:15).


இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில் பொது இடத்தில் நடந்த முதல் நிகழ்ச்சி திருச்சபையை சுத்தப்படுத்தியதாகும். 

(யோவா 2:13-22)

அதுபோலவே அவரது ஊழியத்தின் கடைசிப் பொது நிகழ்ச்சியும் திருச்சபையை தூய்மைப்படுத்தியதேயாகும்.

(மத் 21:12-17;மாற் 11:15-17).

அவர் உக்கிர கோபமடைந்து, தேவனுடைய பரிசுத்த திருச்சபையிலிருந்து தேவனற்ற மக்களை வெளியே துரத்தினார். பேராசை பிடித்தவர்கள், திருச்சபையின் ஆவிக்குரிய நோக்கத்தை அழித்துக் கொண்டிருந்தவர்களை வெளியே துரத்தினார். இயேசு கிறிஸ்துவின் மூன்று வருட ஊழிய காலத்தில் இரண்டு முறை தேவ ஆலயத்தைச் சுத்திகரித்தது எவ்வளவு முக்கியமான ஆவிக்குரிய  பாடம் என்பதைக் கீழ்காணும் உண்மையிலிருந்து அறியலாம். 


1) தமது திருச்சபைக்குள் பரிசுத்தமும், உண்மை தேவபக்தியும் இருக்க வேண்டும் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய மாபெரும் கரிசனையாயிருந்தது.

(யோவா 17:17,19).

"கறை திரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்கு முன் நிறுத்திக் கொள்வதற்கும் தமைதாமே அதற்காக ஒப்புக்கொடுத்து மரணமடைந்தார்.

(எபே 5:25-27).


2) திருச்சபையில் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க வேண்டும். (யோவா 4:24)

திருச்சபையானது அனைவரும் ஒன்று கூடி தேவனோடு ஐக்கியபடும் இடமாகவும், ஜெபிக்கும் இடமாகவும் இருக்க வேண்டும். (மத் 21:13)


3) திருச்சபையை தனது சொந்த லாபத்திற்கும், மகிமைக்கும், சுய முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துகிறவர்களைக் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கண்டனம் செய்கிறார்.


4) தேவனிடத்தில் உண்மையான அன்பும், அவருடைய மீட்பின் நோக்கங்களில் பிரியமும் தேவனுடைய வீடு, இராஜ்யம் இவற்றின் மீது பக்தி வைராக்கியம் கொள்ளச் செய்யும். (யோவா 2:17)

உண்மையான கிறிஸ்துவைப் போலிருக்கும் தன்மை, திருச்சபையில் அநீதி நடப்பதைப் பொறுத்துக் கொள்ளாத தன்மையில் வெளிப்படுத்துகிறது.

(வெளி 2,3, அதிகாரங்கள்) 


5) எல்லா உண்மை கிறிஸ்தவ ஊழியங்களுக்கும் தேவையானது, தேவனுடைய இராஜ்யத்தை அசுத்தப்படுத்தி இழிவு படுத்துகிறவர்களுக்கு விரோதமாக எதிர்த்து நிற்பதாகும். 

(1கொரி 6:9-11; கலா 1:6-10; வெளி 2-3).


6) வஞ்சகம், ஒழுக்கக் கேடு, தனி பிரிவுகளை அமைத்தல், பரிசுத்தக் குலைச்சலாக்குதல்

ஆகியவற்றை ஒழித்துத் தூய்மைப்படுத்த இயேசு கிறிஸ்துவை நமது அமைப்புகளுக்குள் வர விட வேண்டும்.(வெளி 2-3)

இல்லையேல் அவர் தமது இரண்டாம் வருகையின் போது தெய்வீக நியாயத்தீர்ப்பின் மூலம் திருச்சபைகளைப் பரிசுத்தப்படுத்துவார்.

(மல் 3:2).


தற்போது திருச்சபைகளில் பரிசுத்தம் என்பது துளியும் கூட இல்லாத அளவுக்கு இருந்து வருகிறது. 

சபைக்குள் தேவனற்ற ஒரு கூட்டம் இருப்பதைக் கூட அறியாமல் சபையை நடந்து வருகிறது. 

சபையில் பொய்யும், களவும், விபச்சாரமும், அசுத்தமும், இரு மனைவியுடையவர்கள், இரு புருஷனுடையவர்கள், கள்ளக் காதல், இப்படி பல பாவங்கள் திருச்சபையில் பெருகி இருக்கிறது. 

எங்கே கடிந்துக் கொண்டால் கூட்டத்தையும், வருமானத்தையும் இறந்து விடுவோம் என்ற காரணத்திற்காக திருச்சபையை இயேசு கிறிஸ்துவினால் சுத்திகரிப்பதற்கு இயேசு கிறிஸ்துவை திருச்சபையில் அனுமதிப்பதில்லை. பரிசுத்த ஆவியானவரையும் அனுமதிப்பதில்லை. பிதாவாகிய பிரதான நோக்கத்தையும் அனுமதிப்பதில்லை.


திருச்சபைக்கு தேவையானது பரிசுத்தம், தேவநீதி, தேவ கிருபை, தேவதயவு.


வருடத்தின் கடைசி இரண்டு மாதங்களில் இயற்கை மூலமாக தேவன் இந்த பூமியை சுத்திகரிப்பது போல திருச்சபையும் திரியேக தேவனால் சுத்திகரிக்கப்படுவதற்கு ஒப்பு கொடுக்கப்பட வேண்டும். 


தேவ சமூகத்தில் காத்திருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை