உடன்படிக்கையின் முக்கிய ஒழுக்கநெறிக் குறிப்புகள்:
உடன்படிக்கையின் முக்கிய ஒழுக்கநெறிக் குறிப்புகள்:
1) ஆளத்துவம்.
ஒவ்வொரு தனிமனிதனும் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்.
(யாத் 20:13; 21:16-21, 26-31; உபா 5:17; 24:7; 27:18; லேவி 19:14).
2) பொய்யான குற்றச்சாட்டு.
வீண்பழி சுமத்தப்படாமலும், குற்றச்சாட்டு கூறப்படாமலும் ஒவ்வொருவரும் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்.
(யாத் 20:16; 23:1-3; உபா 5:20; 19:15-21; லேவி 19:16).
3)பெண்.
சமுதாயத்தில் தாழ்ந்த நிலை பெற்றுள்ள பெண்களை இழிவாய் நடத்தக்கூடாது.
(யாத் 21:7-11; 20:26-32; 22:16,17;
உபா 21:10-14; 22:13-30; 24:1-5;).
4)தண்டனை.
குற்றத்துக்குத் தகுந்த அளவுதான் தண்டனை இருக்க வேண்டும். அதிகமாக இருக்கக் கூடாது. அதனால் குற்றவாளி மனிதத் தன்மையை இழந்து விடக்கூடாது.
(உபா 25:1-5).
5) மரியாதை.
ஒவ்வொரு இஸ்ரவேலனும் தேவனுடைய சுதந்திரவாளி, ஊழியன் என்ற நிலையில் கனப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும்.
(யாத் 21:2,5,6;லேவி 25;
உபா 15:12-18;).
6) சுதந்திரம்.
ஒவ்வொரு இஸ்ரவேலனுக்கும் வாக்களிக்கப்பட்ட தேசத்தில் உள்ள சுதந்திரம் பாதுகாப்பாயிருக்க வேண்டும்.
(லேவி 25;எண் 27:5-7; 36:1-9;
உபா 25:5-10;).
7) சொத்து.
ஒவ்வொருவருடைய ஐஸ்வர்யமும் பாதுகாப்பாய் இருக்கவேண்டும்.
(யாத் 20:15; 21:33-36; 22:1-15;
23:4,5; உபா 5:19; 22:1-4;
உபா 25:13-15; லேவி 19:35,36;).
8) உழைப்பின் பலன்.
ஒவ்வொருவனும் தன் உழைப்பின் பலனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
(லேவி 19:13;உபா 24:14;25:4;).
9) நிலத்தின் பலன்.
நிலத்தின் பலனை ஒவ்வொருவரும் பகிர்ந்து அனுபவிக்க வேண்டும்.
(யாத் 23:10,11;லேவி 19:9,10;
23:22; 25:3-55; உபா 14:28,29;
24:19-21;).
10) ஓய்வு நாளில் ஓய்ந்திருத்தல்.
வாரம் ஒரு முறை ஆசரிக்கும் கர்த்தருடைய ஓய்வு நாளில் தாழ்மையான வேலைக்காரன் முதல் அவர்களுடன் தங்கியிருக்கும் அந்நியன் வரை ஒவ்வொருவரும் ஓய்வாக இருக்க வேண்டும்.
(யாத் 20:8-11; 23:12; உபா 5:12-15).
11) திருமணம்.
திருமண உறவு, மீறப்படாததாகக் காக்கப்பட வேண்டும்.
(யாத் 20:14; உபா 5:18;22:13-30;
லேவி 18:6-23; 20:10-21;).
12) ஏமாற்றிச் சுரண்டுதல்.
எவ்வளவு பலவீனமானவனும், வறியவனும்,
சக்தியற்றவனுமா
யிருந்தாலும் அவன் ஒடுக்கப்படவோ, அவனுடைய உடமைகள் ஏமாற்றி அபகரிக்கப்படவோ கூடாது.
(யாத் 22:21-27; லேவி 19:14,33,34; 25:35,36; உபா23:19;
24:6,12-15,17; 27:18;).
13) நியாயமான விசாரணை.
வழக்குமன்றங்கள் எல்லோரும் தாராளமாகத் தடையின்றிச் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும். அங்கு விசாரணைகள் நியாயமாக நடைபெற வேண்டும்.
(யாத் 23:6-8;லேவி 19:15;உபா
1:17,18-20;17:8-13;19:15-21;).
14) சமுதாய அமைப்பு.
ஒவ்வொரு மனிதனுக்கும் சமுதாயத்தில் தேவன் அளித்துள்ள நிலை உரிய கனத்துடன் காக்கப்பட வேண்டும்.
(யாத் 20:12; 21:15,17;22:18;லேவி
19:3,32; 20:9; உபா 5:16;17:8-13;
21:15-21; 27:16;).
15) சட்டம்.
இராஜாவானாலும் சட்டத்தை மீறக்கூடாது.
(உபா 17:18-20)
16) மிருகங்கள்.
மற்ற உயிரினங்களைப் போல மிருக ஜீவன்களும் நலமுடன் பாதுகாக்கப்பட வேண்டும் இன்னும் கரிசனை எல்லாரிடமும் இருக்க வேண்டும்.
(யாத் 23:5,11;லேவி 25:7;உபா 22:4,6,7; 25:4;).
இதுவே பழைய ஏற்பாட்டின் உடன்படிக்கையின் முக்கிய ஒழுக்க நெறிக் குறிப்புகள்.
இது முழு உலகத்துக்கும் உரியது.
தேவனால் கொடுக்கப்பட்டவைகள்.
வேதத்தின் துணையோடு புரிந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Comments