எந்த எண்ணத்தையும்
எந்த எண்ணத்தையும்.....
சிறைப்படுத்துகிறவர்களாக யிருக்கிறோம்.
(2 கொரி 10:5)
கிறிஸ்தவனின் போராட்டம், நம் எல்லா எண்ணங்களையும், கிறிஸ்துவின் சித்தத்துக்குக் கீழ்ப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், அது ஒழுக்கக் கேட்டிருக்கும், ஆவிக்குரிய மரணத்திற்கும் வழி நடத்தும்.
(ரோம 6:16,23; 8:13;) கிறிஸ்துவின் ஆளுகைக்குள் உங்கள் எண்ண வாழ்க்கையைக் கீழ்ப் படுத்த நான்கு படிகளை கையாளுங்கள்.
1) தேவன் உங்கள் ஒவ்வொரு எண்ணத்தையும் அறிகிறார், அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது என்பதை நினைத்துக் கொள்ளவும்.
(சங் 94:11; 139:2,4; 23-24).
நம்முடைய எண்ணங்கள், நம் வார்த்தைகள், நம் செய்கைகளை எல்லாம் தேவனுக்கு முன்பாக நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
(2கொரி 5:10; பிர 12:14;மத் 12:35-37; ரோம 14:12).
2) நம் மனம் ஒரு போர்க்களம் என்பதை நினைத்துக் கொள்ளவும். சில எண்ணங்கள் நம்மிடமிருந்து தோன்றுகின்றன. மற்றவை, சத்துருவினிடமிருந்து நேராக நம்மிடம் வருகின்றன. ஒவ்வொரு எண்ணத்தையும் சிறைப்படுத்த நாம் நமது மாம்ச சுபாவத்தோடும், சாத்தானின் சேனைகளோடும் போராட்டம் நடத்துவது அவசியமாகிறது.
(எபே 6:12-13; மத் 4:3-11)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தீய, ஆரோக்கியமில்லாத எண்ணங்களுக்கு விடா முயற்சியோடு எதிர்த்து நின்று, அவற்றைப் புறம்பே தள்ள வேண்டும். (பிலி 4:8)
விசுவாசிகளாகிய நாம், நம் எதிராளியை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், சாட்சியின் வசனத்தினாலும், பிசாசுக்கும், சோதனைக்கும், பாவத்துக்கும்,"இல்லை"என்று தொடர்ந்து சொல்லுவதினாலும், மேற்கொள்ள வேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.
(தீத் 2:11-12; யாக் 4:7; வெளி 12:11;மத் 4:3-11).
3) உன் மனதை பூமியிலுள்ள காரியங்களைக் காட்டிலும் கிறிஸ்துவின் மேலும், பரலோக காரியங்கள் மேலும் ஈடுபடுத்தத் தீர்மானித்துக் கொள்ளவும்.(பிலி 3:19; கொலோ 3:3)
ஏனென்றால் ஆவிக்குக் கட்டுப்பட்ட மனம், ஜீவன், சமாதானத்துக்கு நேராய் வழிநடத்தப்படும்.
(ரோம 8:6-7)
உங்கள் சிந்தனைகளை தேவனுடைய வசனத்தாலும்
(சங் 1:1-3; 19:7-14; 119)
ஒழுக்கமுள்ளதும், மிகச்சிறந்ததும், புகழப்படக்கூடியதுமானவைகள் எவைகளோ அவைகளாலும் நிரப்ப வேண்டும். (பிலி 4:8).
4) உங்கள் கண்கள் எவைகளைக் காண்கின்றன,
உங்கள் காதுகள் எவைகளைக் கேட்கின்றன,
என்பதைக் குறித்து எப்போதும் கவனமாயிருங்கள்.
அ) உங்கள் கண்கள் இச்சையை நடத்திக்ககூடிய கருவியாகவோ (யோபு 31:1;
1யோவா 2:16) அல்லது
ஆ) தகுதியற்ற அல்லது பொல்லாங்கான காரியங்களைப் புத்தகங்கள், பத்திரிகைகள், படங்கள் ,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையதளத்தில், மொபைல் மூலமாக ஆபாச வீடியோக்கள், அல்லது உண்மை வாழ்க்கை ஆகியவற்றில் பார்க்கவோ கண்கள் உபயோகப்படுத்தபடுவதை தீர்மானமாக மறுத்து விடுங்கள்.
(சங் 101:3; ஏசா 33:14-15;ரோம 13:14).
நமது சிந்தையின் பிறப்பிடத்தில் தவறான மற்றும் பொல்லாத எண்ணங்கள் உருவாக காரணமான இரண்டு அவயங்கள்.
1) கண்கள்,2)காதுகள், ஆகும்.
கிறிஸ்துவோடு உடன்படிக்கையின் மூலம் இவைகளை காத்துக் கொள்ளும் போது நிச்சயமாக பரிசுத்த வாழ்க்கை வாழ முடியும்.
நம்முடைய வாயிலிருந்து கிருபையுள்ள வார்த்தைகள் வெளிப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
உங்கள் பார்வைகளை மாற்றுங்கள் .
இயேசு கிறிஸ்துவை போல் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.
கூடுமானளவு வேத வசனங்களை நமது காதுகள் கேட்கும் படி வாசிங்கள். அதினால் நம் இருதயங்கள் நிரம்பும்..
முயற்சி செய்வோம் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென்.
தொடர்ந்து வாசிக்கும் அருமை நண்பர்கள் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
அடியானுக்கும் உங்கள் கருத்துக்களை சொல்லலாம்.
Comments