காரியங்களை வாய்க்க பண்ணினார்

 நெகேமியா

தேவன் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடி வரப் பண்ணுவார்.*(நெகே 2:20)


தேவனுடைய ராஜ்ஜியம் சம்பந்தப்பட்ட எல்லா காரியங்களிலும் வெற்றி தேவனாலேயே தொடங்குகிறது. நெகேமியா நகரத்தின் சுவரை திரும்பவும் கட்ட ஆரம்பித்தான். ஏனெனில் அது தேவனுடைய சித்தம் என்பதை அவன் அறிந்திருந்தான். அதனால் அப்படி செய்வதில் தேவன் அவனுக்கு வெற்றியை தருவார் என்று முழு நம்பிக்கையோடு இருந்தான். தேவனுடைய வேலைகள் அனைத்திலும் அவருடைய மக்கள் வேலையாட்களாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

(பிலி 2:12,13)

நெகேமியா 4ஆம் அதிகாரம் நம்மைப் பொறுத்தவரையில் நாம் மேற்கொள்ள வேண்டிய வெற்றிக்கு ஆதாரமாக மூன்று அம்சங்களைக் குறிப்பிடுகின்றது. 


1) ஜனங்கள் வேலை செய்வதற்கு தங்கள் முழு இருதயத்தோடும் ஆவலோடு இருந்தார்கள். (4:6)


2) ஜனங்கள் வேலை செய்த போது ஜெபத்தோடும், விழிப்போடும் இறந்தார்கள். 

(4:9)


3) எதிரிகளிடத்திலிருந்து எதிர்ப்பு வந்தபோது, ​​தைரியத்தோடும், தீர்மானத்தோடும், விசுவாசத்தோடும் எதிர்கொண்டார்கள், (4:14)


எருசலேமின் சுவர் 52 நாட்களில் முடிக்கப்பட்ட பொழுது யூதரின் விரோதிகள் கூட, அந்த வேலை தேவனுடைய உதவினாலே முடிக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன் கொண்டார்கள். 

(நெகே 6:15-16) அவருடைய ஜனங்கள் விசுவாசத்தை காத்துக் கொள்வதில் தங்கள் பங்கினை செய்யும் போது தேவனும் தமது பங்கினை எப்பொழுதும் செய்து முடிப்பார். ஆமென். 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 

கிறிஸ்துவின் பணியில் 

சகோடரன் 

சிலுவை ராஜா

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை