சாத்தானின் பிள்ளை
சாத்தானின் பிள்ளைகளாய்
ஆக்கப்பட்ட கத்தோலிக்கர்கள்!
மனுக்குலத்தை இரட்சிக்க
மனுமகனை அனுப்பிய பிதா,
அவருக்கு வழியை ஆயத்தம்
பண்ணும்படி யோவானை அனுப்பி,
மனந்திரும்புதலுக்கென்று
ஞானஸ்நானம் கொடுக்க
வைத்தார்!
அந்த யோவான் சொன்னார்,
(மத்தேயு 3:11 )
"மனந்திரும்புதலுக்கென்று
நான் ஜலத்தினால் உங்களுக்கு
ஞானஸ்நானங்கொடுக்கிறேன்;
எனக்குப்பின் வருகிறவரோ
என்னிலும் வல்லவராயிருக்கிறார்,
அவருடைய பாதரட்சைகளைச்
சுமக்கிறதற்கு நான்
பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த
ஆவியினாலும் அக்கினியினாலும்
உங்களுக்கு ஞானஸ்நானம்
கொடுப்பார்"..... என்றார்!
அவ்வேளை அங்கு வந்த இயேசு
யோவானிடம் ஞானஸ்நானம்
பெற்றார்! கவனியுங்கள்!🤙🏽
பாவமேயில்லாத இயேசு,
மனந்திரும்ப அவசியமே
இல்லாத இயேசு,
இங்கே எமக்கு முன்மாதிரியாக
திருமுழுக்குப் பெற்றார்!
மத்தேயு 3:16
இயேசு ஞானஸ்நானம் பெற்று,
ஜலத்திலிருந்து கரையேறினவுடனே,".....
என்றுள்ள வசனத்தின்படி,
அவர் ஞானஸ்நானம் பெற்றது
யோர்தான் ஆற்றில்!
அதாவது திரு"முழுக்கு"
பெற்றார்!
"தெளிப்பு" ஸ்நானம் அல்ல!
பெந்தக் கொஸ்தே நாளில்
பேதுரு செய்த முதல் பிரசங்கம்
இது!
அப்போஸ்தலர் 2:38
"நீங்கள் மனந்திரும்பி,
ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று
இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்,
அப்பொழுது பரிசுத்த ஆவியின்
வரத்தைப் பெறுவீர்கள்".....
இருதயத்தில் குத்தப்பட்டு,
அப்போஸ்தலர் 2:41
“அவனுடைய வார்த்தையைச்
சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள்
ஞானஸ்நானம் பெற்றார்கள்.
அன்றையத்தினம் ஏறக்குறைய
மூவாயிரம்பேர் சேர்த்துக்
கொள்ளப்பட்டார்கள்”….
கவனியுங்கள்,
அவர்கள் மனந்திரும்பியே
ஞானஸ்நானம் பெற்றார்கள்!
மழலைப் பராயத்தில் அல்ல!
மாற்கு 16:16
"விசுவாசமுள்ளவனாகி
ஞானஸ்நானம் பெற்றவன்
இரட்சிக்கப்படுவான்;
விசுவாசியாதவனோ
ஆக்கினைக்குள்ளாகத்
தீர்க்கப்படுவான்"..... என்று
இயேசுவே சொல்லியிருக்க,
(அப்போஸ்தலர் 22:16)
"இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன?
நீ எழுந்து கர்த்தருடைய
நாமத்தைத் தொழுதுகொண்டு,
ஞானஸ்நானம்பெற்று, உன்
பாவங்கள்போகக் கழுவப்படு"
என்று அனனியா
பவுலுக்கு சொல்லியிருக்க,
தீத்து 3:5
"நாம் செய்த நீதியின்
கிரியைகளினிமித்தம் அவர்
நம்மை இரட்சியாமல்,
தமது இரக்கத்தின்படியே,
மறுஜென்மமுழுக்கினாலும்,
பரிசுத்த ஆவியினுடைய
புதிதாக்குதலினாலும் நம்மை
இரட்சித்தார்"... என்று
பவுல் சொல்லியிருக்க,
விசுவாசித்து, மனந்திரும்பல்
இல்லாமல் ஒரு குழந்தையால்
ஞானஸ்நானம் பெற முடியாதே!
👌🏽👌🏽👆🏽🤙🏽🤔🤔🤔🤔🤔👆🏽
யோவான் 3:3
"ஒருவன் மறுபடியும்
பிறவாவிட்டால் தேவனுடைய
ராஜ்யத்தைக் காணமாட்டான்
என்று மெய்யாகவே மெய்யாகவே
உனக்குச் சொல்லுகிறேன்"
என்று நிக்கொதேமுவுக்கு
இயேசு சொன்னது ஏன்?
யோவான் 3:5 "
ஒருவன் ஜலத்தினாலும்
ஆவியினாலும் பிறவாவிட்டால்
தேவனுடைய ராஜ்யத்திலே
பிரவேசிக்கமாட்டான் என்று
மெய்யாகவே மெய்யாகவே
உனக்குச் சொல்லுகிறேன்"...
என்று அவர் விளக்கம் சொன்னது
நம் போப்பு,பாதிரிகளுக்கு
புரியலையா?
(ரோமர் 6:4 )
"அவருடைய மரணத்திற்குள்ளாக்கும்
ஞானஸ்நானத்தினாலே
கிறிஸ்துவுடனேகூட
அடக்கம்பண்ணப்பட்டோம்"....
என்றும்,
கொலோசெயர் 2:12
"ஞானஸ்நானத்திலே அவரோடேகூட
அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும்,
அதிலே அவரை
மரித்தோரிலிருந்தெழுப்பின
தேவனுடைய செயலின் மேலுள்ள
விசுவாசத்தினாலே அவரோடகூட
எழுந்தவர்களாகவும்
இருக்கிறீர்கள்".... என்றும்
பவுலடியார் சொன்னபடி,
விசுவாசத்தினால்தானே
நாம் ஞானஸ்நானத்துக்கு
தகுதியுள்ளவர்களானோம்?
1 கொரிந்தியர் 6:11
"உங்களில் சிலர்
இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்;
ஆயினும் கர்த்தராகிய இயேசுவின்
நாமத்தினாலும், நமது தேவனுடைய
ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள்,
பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்,
நீதிமான்களாக்கப்பட்டீர்கள்".....
என்றுள்ளபடி,
“மனந்திரும்பி”, இயேசுவை
இரட்சகராக விசுவாசித்துத்தானே
நாம் கழுவப்பட முடியும்?
ஞானப்பெற்றோர் என்று
தகுதியற்ற இருவரை முன்நிறுத்தி,
ஞானத்துக்கும் மனந்திரும்புதலுக்கும்
சம்பந்தமில்லாத பாலகனுக்கு
கொடுப்பது எப்படி
இயேசு சொன்ன
பரலோகப் பிரவேசத்துக்குரிய
அடையாளமாகும்?
எபேசியர் 2:8
"கிருபையினாலே விசுவாசத்தைக்
கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்;
இது உங்களால் உண்டானதல்ல,
இது தேவனுடைய ஈவு" என்பது
வேத வசனமானால்,
‘விசுவாசம்’ வராத குழந்தை
எப்படி இரட்சிக்கப்படும்?
(அப்போஸ்தலர் 15:9 )
"விசுவாசத்தினாலே அவர்கள்
இருதயங்களை அவர் சுத்தமாக்கி,
நமக்கும் அவர்களுக்கும்
யாதொரு வித்தியாசமுமிராதபடி
செய்தார்".... என்று
முதல் போப்பு பேதுரு
சொன்னாரே?
விசுவாசம் வந்தபடியால்தானே
அவர்கள் இருதயத்தை கிறீஸ்து
சுத்தமாக்கினார்?
இந்த “விசுவாசம்”
வீரிட்டு அழுகிற “குழந்தைக்கு”
வருமா என்ன?
"திருமுழுக்கு" (ஆங்கிலத்தில்
Babtism) எனும் பதம்
எப்படி உண்டானது?
"பாப்ரிஸோ" என்ற கிரேக்கச்
சொல்லின் பொருள்,
“மூழ்குதல்”!
ரோமர் 6:3
"கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக
ஞானஸ்நானம் பெற்ற
நாமனைவரும் அவருடைய
மரணத்துக்குள்ளாக
ஞானஸ்நானம் பெற்றதை
அறியாமலிருக்கிறீர்களா?"...
என்ற வசனத்தின்படி,
இயேசுவின் மரணம், அடக்கம்,
உயிர்த்தெழுகை என்பவற்றின்
அடையாளமாக,
பாவத்துக்கு செத்து,
நீதிக்குள் பிழைக்கும்படியாக,
"மறுபடியும் பிறக்கிற"
இந்த அனுபவமே
("மூழ்கி"எடுக்கும் "ஸ்நானம்")
திருமுழுக்கு எனப்படும்!
இது ஒரு கிறீஸ்தவன்,
கிறீஸ்துவோடு செய்து கொள்கிற
உடன்படிக்கையாயும் இருக்கிறது!
கவனியுங்கள்,
1 பேதுரு 3:21
"ஞானஸ்நானமானது, மாம்ச
அழுக்கை நீக்குதலாயிராமல்,
தேவனைப்பற்றும்
நல்மனச்சாட்சியின்
உடன்படிக்கையாயிருந்து,
இப்பொழுது நம்மையும்
இயேசுகிறிஸ்துவினுடைய
உயிர்த்தெழுதலினால்
இரட்சிக்கிறது".....
சொன்னவர்,
கத்தோலிக்கத்தின்
முதல் போப்பு பேதுரு!
அதாவது இந்த முழுக்கு,
உடலின் அழுக்கை
நீக்குவதற்காக அல்ல,
உள்ளத்தின் அழுக்கை
நீக்குவதற்காக!...
(நீரில்) மூழ்கித்தான் இந்த
(திரு)முழுக்கை எடுக்கலாமே தவிர,
மூன்று தரம் தலையில்
தெளிப்புப் பெற்று அல்ல!..
புறஜாதியானான
கொர்னேலியுவின் வீட்டில்
பரிசுத்த ஆவியானவரின்
அபிஷேகம் (ஞானம்)
பெற்ற பின்புதான்
அவன் வீட்டார் ஞானஸ்நானம்
எடுத்தார்கள்!
(அப்போஸ்தலர் 10:47- 48
அப்பொழுது பேதுரு:
நம்மைப்போல பரிசுத்த
ஆவியைப் பெற்ற இவர்களும்
ஞானஸ்நானம் பெறாதபடிக்கு
எவனாகிலும் தண்ணீரை
விலக்கலாமா என்று சொல்லி,
கர்த்தருடைய நாமத்தினாலே
அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்படி கட்டளையிட்டான்)
இதேவிதமாகத்தான்
லீதியாள் எனப்பட்ட ஸ்திரீயும்
அவள் வீட்டாரும் கர்த்தரிடத்தில்
விசுவாசமுள்ளவர்களாய் ஆகியே
ஞானஸ்நானம் பெற்றார்கள்!
(அப்போஸ்தலர் 16:14-15
"பவுல் சொல்லியவைகளைக்
கவனிக்கும்படி கர்த்தர் அவள்
இருதயத்தைத் திறந்தருளினார்.
அவளும் அவள் வீட்டாரும்
ஞானஸ்நானம் பெற்றபின்பு,
அவள் எங்களை நோக்கி:
நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில்
விசுவாசமுள்ளவளென்று
எண்ணினால், என் வீட்டிலே
வந்து தங்கியிருங்கள்" என்று
எங்களை வருந்திக்
கேட்டுக்கொண்டாள்)
விசுவாசமுள்ளவர்களுக்குத்தான்
ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது!
வீரிட்டுக்கத்துகிற
குழந்தைகளுக்கல்ல!
எத்தியோப்பிய ராஜஸ்திரியின்
மந்திரிக்கு பிலிப்பு எப்படி
ஞானஸ்நானம் கொடுத்தார்?
அப்போஸ்தலர் 8:37-38
அதற்குப் பிலிப்பு: "நீர்
முழு இருதயத்தோடும்
விசுவாசித்தால்
தடையில்லை”யென்றான்.
அப்பொழுது அவன்: “இயேசு
கிறிஸ்துவைத் தேவனுடைய
குமாரனென்று விசுவாசிக்கிறேன்"
என்று சொல்லி, இரதத்தை
நிறுத்தச்சொன்னான்.
அப்பொழுது பிலிப்பும்
மந்திரியும் ஆகிய இருவரும்
தண்ணீரில் இறங்கினார்கள்,
பிலிப்பு அவனுக்கு
ஞானஸ்நானங்கொடுத்தான்!.”
"தண்ணீரில் இறங்கினார்கள்"
என்றால், மந்திரி மூழ்கித்தான்
ஞானஸ்நானம் எடுத்தான்!
தெளிப்பில் அல்ல!
சமாரியப் பட்டணத்திலே
பிலிப்பு பிரசங்கித்த போது
நடந்தது என்ன?
(அப்போஸ்தலர் 8:12 )
“தேவனுடைய ராஜ்யத்துக்கும்
இயேசுகிறிஸ்துவினுடைய
நாமத்துக்கும்
ஏற்றவைகளைக்குறித்து,
பிலிப்பு பிரசங்கித்ததை
அவர்கள் விசுவாசித்தபோது,
புருஷரும் ஸ்திரீகளும்
ஞானஸ்நானம்பெற்றார்கள்
”..அங்கே "விசுவாசித்து"
ஞானஸ்நானம் பெற்றவர்கள்,
புருஷரும் ஸ்திரீகளுமே'!
அவர்களோடு இருந்த
'குழந்தைகள்' அல்ல!....
அப்படியென்றால்,
எதற்கு கத்தோலிக்கம்
பல காரணங்களைக் கூறி
குழந்தைகளுக்கு
ஞானஸ்நானம் கொடுக்கிறது?
சத்தியத்துக்குரிய சாட்சியாக
விசுவாசியை மாற்றும்
திருமுழுக்கை,
சடங்காச்சாரமாக மாற்றி,
அழைப்பிதழ் அடித்து
காசுவரவு (Collection) செய்யும்
நிகழ்வாக, மாற்றியிருக்கிறது
சாத்தானிய போப்புச்சபை!
குழந்தை ஞானஸ்நானம் பெற்று,
இயேசு சொன்னபடி
“மறுபடியும் பிறக்காமல்” இருக்கிற
”அனைவருமே”
“தேவப்பிள்ளைகள்” என்ற
அந்தஸ்தை பெறாதவர்களே!
இப்படிப்பட்ட
ஞானஸ்நானம் எடுப்பதனால்
ஒருவனும் கிறீஸ்தவனாவதில்லை!
கிறீஸ்தவனாய் ஆனவன்தான்
ஞானஸ்நானம் எடுப்பான்!
மறுபடி பிறப்பான்!
கிறீஸ்தவன்= கிறீஸ்துவை
உடையவன்!
புத்தியுள்ளவர் நிதானிக்குக!
நீங்கள் கிறீஸ்தவரா,
கத்தோலிக்கரா?
"மாரநாதா!"🙏🏼
(கிறிஸ்து இயேசுசீக்கிரம்வருகிறார்!)
கட்டுரை லிவிங்ஸ்டன்.
தகவல் பரிமாற்றம்.
Comments