சரீர உயிர்த்தெழுதல்.

சரீர உயிர்த்தெழுதல்.


"ஆகிலும் மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,"

(1கொரி 15:35)


பரிசுத்த வேதாகமத்தில் சரீர உயிர்த்தெழுதல் முக்கியமான ஒரு உபதேசமாகும்.

அது மரித்தோரிலிருந்து ஒருவனுடைய சரீரத்தை தேவன் உயிரோடெழுப்புவதையும்,

இடைநிலையில் அது பிரிந்து வந்த அந்த மனிதனின் ஆத்துமாவோடும், ஆவியோடும் மறுபடியும் இணைவதையும் குறிக்கிறது. 


1) சரீர உயிர்த்தெழுதல் ஏன் தேவையானது என்பதற்கு பரிசுத்த வேதாகமம் மூன்று காரணங்களை வெளிப்படுத்துகிறது. 

அ) மனிதனின் மொத்த ஆளத்துவத்துக்கு சரீரம் முக்கியமானது. சரீரம் இல்லாமல் மனிதர் முழுமையாக மாட்டார்கள். கிறிஸ்து அருளும் மீட்பு, சரீரம் உட்பட முழு மனிதனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

(ரோமர் 8:18-25;).


ஆ) சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயம்.(1கொரி 6:19)

உயிர்த்தெழுந்த பின் மறுபடியுமாக அது ஆவியானவரின் ஆலயமாய் மாறும்.


இ) எல்லா நிலைகளிலும் பாவத்தின் பலனைச் சரிகட்டும் படி மனிதரின் கடைசி சத்துரு 

(சரீர மரணம்) உயிர்த்தெழுதலினால் ஜெயங்கொள்ளப்பட வேண்டும்.(1கொரி 15:26).


2) பழைய ஏற்பாடும். 

(ஆதி 22:1-14; ஐ  எபி 11:17-19 வோடும், சங் 16:10 ஐ அப் 2:24; வோடும், ஒப்பிட்டு பார்க்கவும். 

யோபு  19:25-27; ஏசா 26:19; தானி 12:2; ஒசி 13:14;)

புதிய ஏற்பாடு (லூக் 14:13-14; 20:35-36; யோவா 5:21,28-29; 6:39-40,44,54; 1கொரி 15:22-23;

பிலி 3:11; 1தெச 4:14-16; வெளி

20:4-6,13) ஆகிய வசனங்கள் வருங்கால சரீர உயிர்த்தெழுதல் பற்றிப் போதிக்கப்பட்டிருக்கின்றன.


3) நம் சரீர உயிர்த்தெழுதல், கிறிஸ்துவுடைய உயிர்த்தெழுதலின் உண்மையினால் நிச்சயப்படுத்தப்பட்டிருக்கிறது. (மத் 28:6ன் பின்குறிப்பு)

(அப் 17:31; 1கொரி 15:12,20-23;)


4) பொதுவாக, விசுவாசியின் உயிர்த்தெழுந்த சரீரம் ஆண்டவரின் உயிர்த்தெழுந்த சொந்த சரீரத்தைப் போல் காணப்படும்.

(ரோம 8:29; 1கொரி 15:20;42-44,49; பிலி 3:20-21;

1யோவா 3:2)

சிறப்பாக உயிர்த்தெழுந்த சரீரம் பின்வருமாறு இருக்கும். 

அ) இந்த வாழ்க்கையிலிருக்கும் சரீரத்தோடு தொடர்பும், அதே மாதிரியும் இருப்பதால், அடையாளம் கண்டு கொள்ளக் கூடியதாய் இருக்கும். (லூக் 16:19-31).


ஆ) புதிய வானம் புதிய பூமிக்கு ஒத்தபடி பரலோக சரீரமாக மாறியிருக்கும்.

(1கொரி 15:42-44,47,48;வெளி 21:1)


இ) அழிவிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலைப் பெற்ற, அழிக்க முடியாத சரீரமாயிருக்கும்.

(1கொரி 15:42)


ஈ) கிறிஸ்துவினுடையதைப் போல மகிமையான ஒரு சரீரமாயிருக்கும்.

(1கொரி 15:43;பிலி 3:20,21)


உ) வியாதிபடக் கூடிய அல்லது பலவீனமான சரீரமாயிராமல் ஒரு பலமுள்ள சரீரமாயிருக்கும்.

(1கொரி 15:43)


ஊ) இயற்கையின் விதிகளுக்கு கட்டுப்படாத ஒரு ஆவிக்குரிய (அதாவது இயற்கையானதல்ல, இயற்கைக்கு அப்பாற்பட்டது) சரீரமாயிருக்கும்.

(லூக் 24:31; யோவா 20:19: 1கொரி 15:44)


எ) புசிக்கவும், குடிக்கவும் கூடியதான சரீரமாயிருக்கும்.

(லூக் 14:15;22:14;18:30;24:43;).


5) விசுவாசிகள் தங்களுக்கான புதிய சரீரங்களைப் பெற்றதும், அவர்கள் சாவாமை அடைகிறார்கள்.(1கொரி 15:53)

பரிசுத்த வேதாகமம் இதற்குக் குறைந்தது மூன்று நோக்கங்களை குறிப்பிடுகின்றது.


அ) அதனால விசுவாசிகள் சிருஷ்டி பின் போது தேவன் மனிதரைக் குறித்து என்ன விருப்பம் கொண்டிருந்தாரோ அதேபோல் மாறுவார்கள்.

(1கொரி 2:9)


ஆ) அதனால் விசுவாசிகள் தேவனை அறிந்து கொள்ள வேண்டிய விதமாய் பூரணமாய் அறிந்து கொள்வார்கள். (யோவா 17:3)


இ) அதனால் தேவன் தம் பிள்ளைகள் மேல் அவர் எப்படி அன்பு காட்ட விரும்புகிறாரோ அவ்வாறே அன்பு காட்டுவார். 

(யோவா 3:16; எபே 2:7; 1யோவா 4:8-16).


6) கிறிஸ்து தம்மைப் பின்பற்றுவர்களுக்காகத் திரும்பி வரும் போது, இன்னும் உயிரோடுயிருக்கும்

உண்மையுள்ள விசுவாசிகள், உயிர்த்தெழுதலின் நாளுக்கு முன்னர், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் அடையும் அதே சரீர மறுரூபத்தை, அவர்களும் அடைவார்கள். 

(1கொரி 15:51-53). அந்த நேரத்தில் மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பியவர்களுக்குக் கொடுக்கப்படும் சரீரங்களுக்கு ஒத்தவிதமாய் 

புதிய சரீரங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அவர்கள் ஒருபோதும் சரீர மரணத்தை அனுபவிக்க மாட்டார்கள்.


7) இயேசு, விசுவாசிகள் ஜீவனை அடையும்படி உயிர்த்தெழுவதைப் பற்றியும், தீமை செய்தவர்கள் நியாயத் தீர்ப்பை அடையும்படி உயிர்த்தெழுவதைப் பற்றியும் பேசுகிறார்.

(யோவா 5:28-29)


திருச்சபை மக்கள் கிறிஸ்து இயேசுவின் வருகைக்காக எப்பொழுதும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். 


மனுஷகுமாரன் இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்பதற்கு எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழிப்பாக இருக்க வேண்டும். 


நூதுனமான உபதேசங்களுக்கு செவி கொடுத்து கட்டு கதைகளுக்கு சாய்ந்து போகாமல் கற்றுக் கொண்டவைகளில் நிலைத்திருப்போமானால் நிச்சயமாக வஞ்சக உபதேசத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். 


எப்படி ஆசிர்வாதங்களை சுதந்தரிக்க வேண்டும் என்பதல்ல 

இன்னும் பிதாவாகிய தேவனையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிகிற அறிவில் நாம் விருத்தியடைய வேண்டும்.

அதுதான் நமக்கு அழியாத நித்திய வாழ்வை, மரணம் இல்லாத வாழ்வை தரும். 

அதில் இம்மைக்குறிய ஆசைகளை வெறுத்துத் தள்ளுங்கள். 


ஒவ்வொரு நாளும் பரிசுத்தமாயிருக்க நாடுங்கள்.


வேத வசனத்திற்கு கீழ்ப்படிய பழகுங்கள். 


எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள். 

நன்மையானதை மாத்திரம் பிடித்துக் கொள்ளுங்கள். 


உங்கள் பக்தி விருத்தி மற்றவர்கள் பக்தி விருத்தி அடையும் படியாய் இருக்கட்டும்.


உங்களுடைய பெருமையான பேச்சுக்கள் ஆடம்பர வாழ்க்கைகள் மற்றவர்களை பொல்லாத வழிகளுக்கு இழுத்துச் செல்லாதபடிக்கு கவனமாய் இருங்கள்.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென். 


:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை