எபேசுவில்_சில சீஷர்கள்.
எபேசுவில்_சில சீஷர்கள்.
(அப் 19:1)
பன்னிரு சீஷர்களும் இயேசுவின் கிறிஸ்தவர்களா?
அல்லது
யோவான் ஸ்நானகனின் சீஷர்களா ?
ஏதாகிலும் ஒன்று சரியாயிருக்கலாம்.
1) சிலர் அவர்கள் கிறிஸ்தவர்களென்று விசுவாசித்தார்கள். இது கிறிஸ்தவர்களுக்கு பொதுவாக வழங்கப்பட்ட பெயர். இவர்கள் யோவான் ஸ்நானகனின் சீஷர்கள், இயேசுவினுடையவர்கல்ல என்று லூக்கா குறிப்பிட விரும்பியிருந்தால் அவன் அதை வெளிப்படையாகவே குறிப்பிட்டுயிருப்பான்.
அ) பவுல் அவர்களை "ஏற்கனவே விசுவாசித்தவர்கள்" என்று குறிப்பிடுகிறான்."விசுவாசித்தல்" என்னும் வினைச்சொல் செயப்படுபொருள் இல்லாமல் அப்போஸ்தலர் நடபடி புத்தகத்தில் சுமார் 20 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
அவை எந்த சந்தர்ப்பங்களில் வருகின்றன என்று பார்க்கும் போது அந்த எல்லா இடங்களிலும் கிறிஸ்துவை இரட்சிப்புக்காக விசுவாசித்தல் என்பதையே குறிப்பிடுகின்றன என்று காணலாம்.
2) மற்றவர்கள், எபேசுவின் சீஷர்கள் யோவான் ஸ்நானகனின் சீஷர்கள், அவர்கள் இன்னும் மேசியாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். பவுலிடமிருந்து அவர்கள் இயேசுவை குறித்து கேள்விப்பட்டபோது, அவர்கள் முன்னுரைக்கப்பட்ட கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியில் மறுபிறப்படைந்தார்கள்.
(அப் 19:4,5;)
3) காரியம் என்னவாயிருந்தாலும் சரி,
அவர்கள் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, அவர்கள் மேல் கைகளை வைத்து ஆசீர்வதிக்கப்பட்ட பின்னரே பரிசுத்த ஆவியினால் நிறைக்கப்பட்டார்கள் . என்பது தெளிவு. (அப் 19:5,6).
பரிசுத்த ஆவியை பெற்றீர்களா ?
பவுலின் கேள்வியைக் குறித்த கீழ்க்கண்ட உண்மைகளைக் கவனியுங்கள்.
1) பவுலின் கேள்வி எபேசுக் கிறிஸ்தவர்கள் "உண்மையாக மனந்திரும்பிய கிறிஸ்தவர்கள், அவர்கள் இன்னும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவில்லை" என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
2) பவுலின் கேள்வியை பெந்தகோஸ்தே நாளில் சம்பவித்தபடி பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டு, வல்லமையும், ஊழியமும் சீஷர்கள் பெற்ற அனுபவத்தை குறிக்கிறது.
(அப் 1:8; 2:4) அது விசுவாசியின் உள்ளத்தில் பரிசுத்த ஆவி வாசம் செய்வதைக் குறிக்கவில்லை. ஒவ்வொரு விசுவாசியிடமும் அவன் கிறிஸ்துவை விசுவாசித்து, மனந்திரும்பி, மறுபிறப்படைந்ததும் அவனில் ஆவியானவர் வாசம் செய்கிறார் என்பது பவுலுக்கு தெளிவாக தெரியும்.
(ரோமர் 8:9).
3) சொல் பொருளின்படி பவுலின் கேள்வியின் பொருள் "விசுவாசித்த பின் பரிசுத்த ஆவியை பெற்றீர்களா ? " என்பது,
"விசுவாசித்த பின்" (கிரேக்க. பிஸ்தியு சாந்தஸ்.) இது (பிஸ்தியா என்ற சொல்லிலிருந்து வந்தது)
இது ஒரு காலத்தை காட்டாத வினையெச்சம். வாக்கியத்தில் உள்ள வினை நடப்பதற்கு முன் நடைபெற்ற செயலை குறிக்கும். (இங்கே உள்ளவினை,
"பெற்றுக்கொள்ளுதல்". எனவே கருத்து தெளிவாகும் படி இந்தக் கேள்வியை இப்படிக் கேட்கலாம்.
"நீங்கள் விசுவாசித்த பின்னர் பரிசுத்த ஆவியை பெற்றீர்களா ? இந்த மொழிபெயர்ப்பு இந்த சந்தர்ப்பத்திற்கு மிகவும் பொருத்தமாய் இருக்கிறது. ஏனெனில் எபேசுக் கிறிஸ்தவர்களுக்கு இதுதான் நடந்தது.
அ) பவுல் அவர்களை சந்திப்பதற்கு முன்னரே அவர்கள்
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்திருந்தார்கள்.
(அப் 19:1,2)
ஆ) பவுல் கூறியதை கேட்ட பின் இயேசுவை குறித்தும், பரிசுத்த ஆவியை குறித்தும், அனைத்தையும் அறிந்து கொண்டார்கள், விசுவாசித்தார்கள். (அப் 19:4).
இ) எபேசு கிறிஸ்தவர்களின் விசுவாசம் உண்மையானது, போதுமானது என்று பவுல் கண்டு அவர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் (மத் 28:19,20;) கட்டளையின்படி ஞானஸ்நானம் கொடுத்தான்.
(அப் 19:5).
ஈ) இவ்வாறு அவர்கள் விசுவாசித்து, தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்ற பின்னர் தான் பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்து ஜெபித்த போது பரிசுத்த ஆவி அவர்கள் மேல் இறங்கியது.
(அப் 19:6)
இவ்வாறு அவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்ததற்கும், பரிசுத்த ஆவியானவர் முழு வல்லமையோடும் அவர்களிடத்தில் இறங்கியதற்கும் இடையே ஒரு குறிப்பிட்டகால
இடைவெளி இருந்தது.
பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானத்தை ஒருவன் பெறாமல், கிறிஸ்துவில் விசுவாசம் உள்ளவனாக இருக்க முடியும் என்று பவுல் கருதியதாக இந்த கேள்வி காட்டுகிறது. பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெறாமல் ஒருவன் கிறிஸ்தவனாக இருக்க முடியும் என்பதை இப்பகுதி தெளிவாக காட்டுகிறது.
(அப் 19:2,)ல் நாங்கள் கேள்விப்படவே இல்லை.
எபேசுக் கிறிஸ்தவர்களின் பதில் அவர்கள் பரிசுத்த ஆவியைக் குறித்துக் கேள்விப்படவில்லை என்பதைக் காட்ட வில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியைக் குறித்த பழைய ஏற்பாட்டு போதனைகளை அறிந்திருந்தார்கள். மேலும் யோவான் ஸ்நானகன் கூறிய இயேசு கிறிஸ்து வந்து தரப்போகும் "பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம்"குறித்தும் கேள்விப்பட்டிருந்தார்கள்.
(லூக் 3:16) ஆனால் விசுவாசிகள் மேல் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அவர்கள் கேள்விப்படவில்லை.
(அப் 19:1,5,7;).
(அப் 19:5)ல் அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
எபேசி திருச்சபையில் 12 பேர்
(மத் 28:19,20) ன் படி தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்றார்கள். (அப் 19:7) இந்நிகழ்ச்சி அவர்களிடத்தில் இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் உண்டு என்றும், அவர்கள் பரிசுத்த ஆவியினால் மறுபிறப்படைந்தவர்கள் என்றும் காட்டியது. அவர்கள் பரிசுத்த ஆவினால் நிரப்பப்படுவதற்கு முன் இது நடந்தது. (அப் 19:6).
(அப் 19:6) ன்படி பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வந்தார்.
இந்நிகழ்ச்சி முதல் பெந்தகோஸ்தே நிகழ்ச்சி நடந்து, சுமார் 25 ஆண்டுகள் கடந்த பின் நடந்தது. (அப் 2:4)
எனினும் இந்த பன்னிருவரும் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்ற முறையானது ஏற்கனவே லூக்கா கூறியுள்ள முறைக்கு ஒத்திருக்கிறது.
(அப் 8:5-24 ; வாசிக்கவும்)
1) அவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து பரிசுத்த ஆவினால் மறுபிறப்பு அடைந்திருந்தார்கள்.
2) அவர்கள் தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்ற பின்பு அவர்கள் மேல் கைகளை வைத்து அவர்களுக்கு பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் கொடுத்தார்.
(அப் 19:5).
3) அவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் வந்தபோது அவர்கள் அந்நிய பாஷை பேசவும், தீர்க்கதரிசனம் சொல்லவும் தொடங்கினார்கள், பரிசுத்த ஆவி ஊற்றப்படுவதை லூக்கா, ஒரு போதும் விசுவாசத்தினால் மட்டும் புரிந்து கொள்ளக் கூடியது என்று குறிப்பிடவில்லை. ஆனால் அது அறிந்து அடையாளம் கண்டு கொள்ளக் கூடியதும், சோதித்துப் பார்க்கக் கூடியதுமான ஒரு அனுபவம் என்று கூறுகிறான்.
இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் பரிசுத்த ஆவியின் நிறைவை பெற்றுள்ளதற்கு அத்தாட்சி அவர்கள் அந்நிய பாஷைகளை பேசுவதாகும்.
புரிந்து கொள்வதற்கு கடினமான பகுதி,
இது
ஞானஸ்நானங்களை குறித்தும் பரிசுத்த ஆவியின் அந்நிய பாஷை குறித்தும் விவாதங்களை கிளப்பும் பகுதி .
தெளிவாக இருந்தால் எந்த விவாதங்களும் வராது.
ஏனென்றால் வேத வாக்கியங்களெல்லாம் பரிசுத்த ஆவியானவரால் தேவ மனிதர்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதை முழுமையாக விசுவாசிக்கும் போது விவாதத்திற்கு இடமில்லை.
ஜெபத்தோடு வாசியுங்கள்.
மிகப்பெரிய பலனை அனுபவிப்பீர்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
Comments