நெகேமியா

             நெகேமியா

(நெகே 1:1)


நெகேமியா யூதாவின் ஆளுநராக கி.மு 444-ல் பெர்சியாவை விட்டு எருசலேமுக்குப் போனான்.

வேதபாரகன் எஸ்றா அங்கே போன பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு இது நிகழ்ந்தது.

எருசலேமின் சுவரைத் திரும்ப கட்டவும், நகரத்தைப் பலப்படுத்தவும், பெர்சிய ராஜாவிடமிருந்து பெற்ற கட்டளையோடு நெகேமியா வந்தான். (நெகே 2:7-8).

அதிகமான எதிர்ப்புக்கும் மத்தியில் 52 நாட்களில் நெகேமியா சுவரை கட்டி முடித்தான். (நெகே 6:15). அவன் திறமைசாலியும், துணிச்சலானவனும், விடாமுயற்சியுள்ளவனும், மற்றும் ஜெபிக்கும் மனிதனாகவுமிருந்தான்.

(நெகே 2:4) மேலும் மக்களுக்கு ஆவிக்குரிய புத்துணர்ச்சியைக் கொண்டு வருவதற்கு எஸ்றாவுடன் ஒத்துழைத்தான்.(அதி 8).


1) துக்கித்து உபவாசித்து மன்றாடினான்.(நெகே 1:4)


நெகேமியா தன் மக்களுக்காகவும், யூதாவின் தேவனுடைய வேலைக்காகவும் ஆழ்ந்த பாரமடைந்திருந்தான். எருசலமிலும் யூதாவிலுமுள்ள

தேவ மக்களுக்கு நேரிட்ட பெரும் துன்பம் தொல்லைக்காக, நான்கு மாதங்கள் (நெகே 1 முதல் 2:1) அதிக கண்ணீரோடு தன் இருதயத்தை தேவனிடத்தில் ஊற்றி உபவாசித்து மன்றாடினான்.(அப் 20:31) அவனுடைய ஜெபமானது, பாவ அறிக்கை (நெகே 1:6-7) தேவனிடம் அவருடைய வார்த்தையை ஞாபகப்படுத்துதல் (நெகே 1:8;லேவி 26:40-45;உபா 30:1-6)

தேவனுடைய மகிமை, மற்றும் அவருடைய நோக்கங்களைப் பற்றிய கரிசனை,(நெகே 1:5-8) மற்றும் இஸ்ரவேல் ஜனங்களுக்காகத் தொடர்ந்து பரிந்து பேசுதல் (நெகே 1:6) ஆகியவற்றை உள்ளடக்கியதாயிருந்தது.


2) இந்த மனிதனுக்கு முன்பாக இரக்கம்.

 (நெகே 1:11)

"இந்த மனிதன்" பெர்சியாவின் அரசனாகிய அர்தசஷ்டா வாகும்.

(நெகே 2:1)

யூதர்களின் நிமித்தம் இந்த அரசனின் முன்பாக இரக்கம் கிடைக்கச் செய்யும்படி நெகேமியா தேவனை நோக்கிப் பிராதித்தான். மற்ற மக்களிடத்தில் இருந்து எதையாவது பெற்றுக் கொள்ள விரும்பும்போது, நம்முடைய கவலைகளை முதலாவது தேவனுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் தமது சித்தத்தை செய்யும்படியாக செல்வாக்கு மிகுந்த தலைவர்களின் இருதயங்களை அவர் அசைக்க முடியும். 

(எஸ்தர் 4:16; நீதி 21:1)


தொடர்ந்து நாம் தியானிப்போம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை